Published:Updated:

அ.தி.மு.க-வுக்கு வரவேற்பு... ம.தி.மு.க-வுக்கு துரத்தியடிப்பு!

அ.தி.மு.க-வுக்கு வரவேற்பு... ம.தி.மு.க-வுக்கு துரத்தியடிப்பு!
பிரீமியம் ஸ்டோரி
News
அ.தி.மு.க-வுக்கு வரவேற்பு... ம.தி.மு.க-வுக்கு துரத்தியடிப்பு!

அ.தி.மு.க-வுக்கு வரவேற்பு... ம.தி.மு.க-வுக்கு துரத்தியடிப்பு!

ஜெயலலிதாவின் மறைவு, கருணாநிதியின் உடல்நிலை ஆகிய இரண்டும் தமிழக அரசியல் களத்தின் இரு துருவங்களான தி.மு.க - அ.தி.மு.க இடையே அரசியல் நாகரிகத்தைத் துளிர்க்க வைத்துள்ளன. பரம எதிரிகளான இந்தக் கட்சிகளின் நிர்வாகிகள் பரஸ்பரம் கை குலுக்கிக்கொள்ளும் அபூர்வக் காட்சிகள் அதிசயமாகத் தெரிகின்றன. ஆனால், அ.தி.மு.க-வை ஏற்றுக்கொண்ட தி.மு.க-வால், ம.தி.மு.க-வை மட்டும் ஏற்க முடியவில்லை. காரணம், இப்போது தி.மு.க-வில் தலைமைப் பொறுப்புக்கு அருகில் இருக்கும் ஸ்டாலினுக்கும், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ-வுக்கும் இடையிலான கடந்த காலம் அப்படி. அந்தத் தொடர்ச்சிதான், காவேரி மருத்துவமனைக்கு வந்த வைகோவை விரட்டி அடிக்க வைத்திருக்கிறது.

அ.தி.மு.க-வுக்கு வரவேற்பு... ம.தி.மு.க-வுக்கு துரத்தியடிப்பு!

1993-ம் ஆண்டு தி.மு.க-வில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்டார். அப்போது, தி.மு.க தரப்பில் சொல்லப்பட்ட காரணம், ‘கருணாநிதியைக் கொல்ல வைகோ சதிசெய்தார்’ என்பது. ஆனால், வைகோ தரப்பில் சொல்லப்பட்ட காரணம், ‘ஸ்டாலினை பதவிக்குக் கொண்டுவருவதற்கு வைகோ இடைஞ்சலாக இருப்பார். அதை எண்ணித்தான் கருணாநிதி, வைகோ மீது வீண் பழி சுமத்தி வெளியேற்றினார்’ என்பது. இந்தக் கசப்புகள், கருணாநிதி - ஸ்டாலின் - வைகோ என்று ஒரு முக்கோண வெறுப்பை வளர்த்து வைத்திருந்தது. தமிழக அரசியலின் மிக முக்கியமான தருணங்களில் எல்லாம் அது அப்பட்டமாக வெளிப்பட்டது.

வைகோவின் தாயார் மாரியம்மாள் கடந்த ஆண்டு மரணமடைந்தார். அப்போது, கனிமொழியும் ஸ்டாலினும் நேரில் சென்று வைகோவுக்கு ஆறுதல் சொன்னார்கள். வைகோவும் அங்கு ஸ்டாலினையும் கனிமொழியையும் கண்ணியமாக நடத்தினார். ஆனால், அதன்பிறகு இரண்டு நாட்கள் கழித்து ஊடகங்களுக்குப் பேட்டி அளித்த வைகோ, ‘‘என் தாயாருக்கு அஞ்சலி செலுத்த ஸ்டாலின் வந்தது அரசியல் ஆதாயத்துக்காகத்தான். அப்படியே என்னை தி.மு.க கூட்டணிக்கு இழுக்கப் பார்க்கிறார். அதற்கு மசியமாட்டான் இந்த வைகோ’’ என்ற ரீதியில் பேட்டி கொடுத்தார். அதுவும் தி.மு.க தொண்டர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியது. கடந்த சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க இணையும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் மக்கள் நலக்கூட்டணி உருவானது. அப்போது வைகோ, கருணாநிதியை சாதியைச் சொல்லி இழிவு படுத்தி ஒரு பேட்டியளித்தார். அதன்பிறகு மன்னிப்புக் கேட்டு உருகினார். அப்போது தி.மு.க தொண்டர்கள் கோபத்தில் இருந்தார்கள்.

அப்போலோவில் ஜெயலலிதாவைப் பார்க்கப்போன வைகோ, ‘‘இப்போது இருக்கிற சூழலை வைத்து அ.தி.மு.க-வைப் பிளக்க சிலர் முயல்கிறார்கள்’’ என்றார். ராஜாஜி ஹாலுக்கு வந்த வைகோ, ‘‘இந்த நேரத்தில் அ.தி.மு.க-வை உடைத்து சிலர் திறந்த வீட்டுக்குள் நுழைவதைப்போல உள்ளே நுழைய முயல்கின்றனர். அவர்களின் திட்டம் பலிக்காது’’ என்று குறிவைத்துத் தாக்கினார். அ.தி.மு.க நிர்வாகிகளே அங்கு அமைதியாக இருந்த நிலையில், வைகோவின் பேச்சு அதிகப்பிரசிங்கத் தனமாகப் பார்க்கப்பட்டது. இந்த வினைகளுக்கு எதிர்வினை, காவேரி மருத்துவமனையில் கிடைத்தது. காவேரி மருத்துவமனையில் வைகோவை அனுமதிக்காமல் அவருக்கு எதிர்ப்பு காட்டினார்கள் தி.மு.க-வினர். இதற்கு ‘‘வைகோவிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்’’ என்று சொன்னார் ஸ்டாலின்.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அ.தி.மு.க-வுக்கு வரவேற்பு... ம.தி.மு.க-வுக்கு துரத்தியடிப்பு!

இந்தச் சம்பவம் பற்றி, ம.தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவிடம் பேசியபோது, “மருத்துவமனைக்கு வருவதாக கனிமொழியிடம் தெரிவித்துவிட்டுத்தான்  தலைவர் வைகோ, புறப்பட்டார். எங்கள் கார் காவேரி மருத்துவமனைக்கு முன்பாகத் திரும்பியபோதே எங்கள் முன்னால் சென்ற காரில் சென்ற தி.மு.க நிர்வாகி ஒருவர், ‘அவங்க வர்ராங்க, அடிச்சு விரட்டுங்க’னு சொல்லிக்கிட்டே மருத்துவமனைக்குள் நுழைந்தார். எங்கள் கார் வளைவில் திரும்பியபோது, திடீரென செருப்பும், கற்களும் காரில் வந்து விழுந்தன. அப்படியும் நாங்கள் காரைவிட்டு இறங்கி உள்ளே போக முயன்றோம். ஆனால், அங்கே நின்று கொண்டிருந்த பெண்கள், காரை சூழ்ந்து நின்று ஆபாசமாகத் திட்டினார்கள். அதனால் அந்த இடத்தைவிட்டுக் கிளம்பிவிட்டோம். ஆனாலும் விடாமல் கற்களைத் தூக்கி வீசினார்கள். இது திடீர் என உணர்ச்சிவசப்பட்டு நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. திட்டமிட்டு ஒருவரது உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட தாக்குதல். எங்கள் மீது வீசப்பட்ட அந்த செருப்பு எங்கள் மீது வீசப்பட்ட செருப்பு அல்ல, தமிழக அரசியல் நாகரிகத்தின் மீது வீசப்பட்டது...” என்றார் ஆதங்கத்துடன். 

நலம் விசாரிப்பா? நாடகமா?

- அ.சையது அபுதாஹிர்
படங்கள்: கே.கார்த்திகேயன்