Published:Updated:

' நிலம் வாங்க, விற்க அணுகுங்கள்': அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கு எதிராக அதிரடி போஸ்டர்! (படங்கள் )

புதுக்கோட்டை: 'தமிழகத்தில் நிலம் வாங்க விற்க வேண்டுமா? அணுகுங்கள் டாக்டர்

' நிலம் வாங்க, விற்க அணுகுங்கள்': அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கு எதிராக அதிரடி போஸ்டர்!  (படங்கள் )

விஜயபாஸ்கரை' என கலங்கடிக்கும் போஸ்டர்கள் புதுக்கோட்டையில் முளைத்து அதிரடியை கிளப்பியிருக்கிறது.

விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான டாக்டர் விஜயபாஸ்கரை மையப்படுத்தி  மூன்று விதமான போஸ்டர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை சுற்றிலும் திடீரென்று ஒட்டப்பட்டிருக்கிறது.

'2001ல் அரசியலுக்கு வரும் முன்பு விஜயபாஸ்கருக்கு சொத்துக்கள் இல்லை. இன்றோ கடலை தவிர தமிழகம் முழுவதும் இவரால் வாங்கப்பட்ட சொத்தின் மதிப்பு ரூ.450 கோடியை தாண்டுகிறது.

" ஒரு போஸ்டரில்  'உஷார் உஷார் புதுக்கோட்டை மக்களே உஷார், இன்று உங்களின் இடம் நாளை விஜயபாஸ்கரின் இடமாக மாறலாம்.என்றும், இன்னொரு போஸ்டரில் " தி.மு.க ஆட்சி காலத்திலேயே பல் மருத்துவ கல்லூரிக்கு அனுமதி வாங்கி கோடிகள் புரளும் கல்லூரிகளை கட்டிக் கொண்டிருக்கும் விஜயபாஸ்கரே உன்னால் கழகத்திற்கு அவமானம், கட்சிக்கு கேடு' என்றும் எழுதப்பட்டிருக்கிறது.

'தமிழகத்தில் நிலம் வாங்க விற்க வேண்டுமா? அணுகுங்கள் டாக்டர் விஜயபாஸ்கரை'  என்ற மூன்றாவது போஸ்டரும் அதிரடி ரகம்தான்.  கட்சிக்குள் அவருக்கு எதிராக இருப்பவர்கள்தான் இந்த போஸ்டர்களை ஒட்டியிருக்கலாம் என போலீஸ் சந்தேகிக்கிறது.

இந்த போஸ்டர்களை உடனடியாக விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் கிழித்து எறிந்துவிட்டார்கள்.  இந்த போஸ்டர் பற்றி விசாரித்த போது ''விஜயபாஸ்கருக்கு ஒருத்தர் ரெண்டு பேர் எதிரி இருந்தா யாருன்னு சொல்லிடலாம். மாவட்டம் முழுவதும் கட்சிக்காரர்கள் எல்லோரின் எதிர்ப்பையும் அவர் சம்பாதித்திருக்கிறார். அதனால் யார் போஸ்டர் ஒட்டியிருப்பார்கள் என தெரியவில்லை'' என்கின்றனர் அ.தி.மு.க. தொண்டர்கள்.

- வீ.மாணிக்கவாசகம்