இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

? தீபாவுக்கு ஆதரவாகக் களம் இறங்குபவர்களின் கதி அதோ கதிதானா?

! தீபாவுக்கு ஆதரவாக யாரும் களம் இறங்குவதாகத் தெரியவில்லை. அப்படிக் களம் இறங்கினாலும், தீபா அதனைக் கொண்டு செலுத்துவாரா எனத் தெரியவில்லை. அப்படி எண்ணம் அவருக்கு இருப்பதாகவும் தெரியவில்லை. ‘என் அத்தையைப் பார்க்க என்னை விடவில்லை’ என்பதைத் தாண்டி அவரிடம் இருந்து எதுவும் வரவில்லை. அரசியல் நடத்த இது போதாது. மேலும், அவர் சொன்னதாக இணையத்தில் வரும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும் அவருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவை அவர் சொன்னதும் அல்ல.

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

? ‘துக்ளக்’கில் சோ செயல்பட்டது போல குருமூர்த்தியால் செயல்பட முடியுமா?

! சோ பாணி என்பது கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி. குருமூர்த்தி சீரியஸ் ரகம்.

சீர்காழி சாமா, ஸ்ரீரங்கம்.

? ஜெயலலிதாவின் ஆசனத்தில் சசிகலா உட்கார்ந்துவிட்டாராமே?

! போயஸ் கார்டனில் ஜெயலலிதா உட்காரும் ஆசனத்தில் சசிகலா உட்கார்ந்துவிட்டார். இதுவரை காரில் பயணிக்கும்போது பின் இருக்கையில் உட்காரும் சசிகலா இப்போது முன் இருக்கையில் உட்கார்ந்துவிட்டார். தலைமைக் கழகத்தில் பொதுச்செயலாளர் ஆசனத்திலும் கோட்டையில் முதலமைச்சர் ஆசனத்திலும்தான் இனி அவர் உட்கார வேண்டும். இவை அடுத்தடுத்து நடக்கலாம்.

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

? ஜெயலலிதாவின் வாரிசு சசிகலாதான் என்றும் அதை ஆவணத்திலேயே ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார் என்றும் அதற்கான ஆதாரத்தைக் காட்டி உள்ளாரே பொன்னையன்?

! ஸ்ரீராம் நிறுவனத்தில் ஜெயலலிதாவால் செலுத்தப்பட்ட ஏழு கோடி ரூபாய்க்கான வைப்புநிதியில் சசிகலாவைத் தனது வாரிசாக ஜெயலலிதா நியமித்துள்ளதை ஆதாரமாகக் காட்டி உள்ளார். இது மற்ற சொத்துகளுக்குப் பொருந்துமா? ஆட்சிக்கு... கட்சிக்கு எப்படி இதைப் பொருத்திப்பார்க்க முடியும்? சாதாரண சட்ட அறிவு இருப்பவர்கள்கூட இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

? கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்கச் சென்ற வைகோவின் கார் மீது செருப்பு வீசி உள்ளார்களே தி.மு.க-வினர்?

! இது அரசியல் நாகரிகம் அல்ல. ஜெயலலிதாவின் உடல்நிலையை விசாரிக்க ஸ்டாலின் சென்றபோது அ.தி.மு.க அமைச்சர்கள் அன்புடன் வரவேற்றதைப் போல தி.மு.க-வினரும் நடந்திருக்க வேண்டும். ஆனால், இந்த விவகாரத்துக்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது.

வைகோவின் சமீப கால நடவடிக்கைகள், பேச்சுகள் தி.மு.க-வினரை எரிச்சல் அடைய வைத்துள்ளன. ‘இதற்கு கருணாநிதி அவருடைய குடும்பத் தொழிலைப் பார்க்கலாம்ங்க... நான் ஒண்ணும் தப்பா சொல்லலை... நாதஸ்வரம் ஊதுறதுதான் அவரோட குடும்பத் தொழில்’ என்று கேமராக்கள் முன்னால் வைகோ சொன்னார். வைகோ வார்த்தைகளில் கெட்ட வாடை வீசியது. அந்தக் காட்சியைப் பார்த்தவர்களுக்குத் தெரியும். அன்று அவரோடு இருந்த ம.ந.கூ. தலைவர்கள் வலியுறுத்தலால் வைகோ மன்னிப்புக் கேட்டார். அடுத்து, அப்போலோ வாசலில் நின்றுகொண்டு, அ.தி.மு.க. - தி.மு.க. அரசியலைப் பேசியது வைகோ மட்டும்தான். பொன்னையனும் பேசவில்லை. ஸ்டாலினும் பேசவில்லை. பொதுவாக ஏதோ ஒரு கொதிமனநிலையில் தன்னை வைத்துக்கொண்டு செயல்பட்டு வருவதால், வைகோ இன்று அனைவராலும் எள்ளி நகையாடக்கூடிய மனிதராக ஆகிவிட்டார்.

‘உங்களுக்குப் பட்டம், பதவிகள் வாங்கித்தர என்னால் முடியாது. ஆனால், உங்களைத் தலைகுனிய விடமாட்டேன்’ என்று வைகோ அடிக்கடி சொல்வார். ஆனால், இன்று அவர் செய்துவரும், பேசிவரும் பேச்சுகள் அவரது கட்சித் தொண்டர்களையே கனத்த இதயத்துடன் கலங்க வைத்திருக்கும்.

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

? தி.மு.க-வின் தொடர் மௌனத்துக்கான பின்னணி என்ன?

! எம்.ஜி.ஆர் உடல்நிலை சரியில்லாதபோது பேசி அதிகப்படியான விமர்சனங்களை எதிர்கொண்டது போல இப்போது ஆகிவிடக்கூடாது என்பதில் தி.மு.க. எச்சரிக்கையாக இருக்கிறது. எதையாவது பேசி மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதில் ஸ்டாலின் கவனமாக இருக்கிறார்.

அ.யாழினி பர்வதம், சென்னை-78.

? சசிகலா தலைமையில் அ.தி.மு.க-விலும் குடும்ப அரசியல் தலைதூக்கிவிட்டதா?

! அ.தி.மு.க-வில் குடும்ப அரசியல் தலைதூக்கி கால் நூற்றாண்டு ஆகிவிட்டது. இப்போது புதிதாக எதுவும் நடந்துவிடவில்லை. நேற்றுவரை ஜெயலலிதா இருந்தார். இப்போது ஜெயலலிதா இல்லை. இது ஒன்றுதான் வித்தியாசம்.

சீர்காழி சாமா, ஸ்ரீரங்கம்.

? ஜெயலலிதா அறிவிப்பின்படி படிப்படியாக மதுவிலக்கு ரத்துசெய்யப்படும் என்று நம்பலாமா?

! மிடாஸ் உரிமையாளர்கள் ஆட்சியில் இது நடக்கும் என்று இனியுமா நம்புகிறீர்கள்?

துடுப்பதி கிருஷ்ணன், பட்டாபிராம்.

? எனக்கொரு ஆசை... சசிகலா முதல்வராகவும், அவரின் உறவுகள் மட்டுமே அமைச்சர்களாகவும் கொண்ட அமைச்சரவை தமிழகத்தை ஆண்டால், தமிழகம் முதல் மாநிலமாகக் கொடிகட்டிப் பறக்காதா?

! எதில்?!

எஸ்.பூவேந்த அரசு, சின்னதாராபுரம்.

? தற்போதைய அரசியலில் கருணாநிதிக்குத் தகுந்த போட்டியாளர் என்று யாரும் இல்லையா?

! தற்போதைய அரசியல் போட்டியில் கருணாநிதியே இல்லை என்பதுதான் யதார்த்தம்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!