மண்ணுக்கான ஈர விதை

மல்லிகா (சமூகச் செயற்பாட்டாளர்)

பளியர் சமூகத்தைச் சேர்ந்த இவரின் வாழ்க்கை, நமக்கான நம்பிக்கை வெளிச்சம். தந்தையின் விவசாய நிலத்தை ஆதிக்கச் சாதியினர் ஏமாற்றிப் பிடுங்கிவிட, அதை மீட்கக் களம் இறங்கியதில் தொடங்கியது மல்லிகாவின் போராட்ட வாழ்வு. அதை ஒடுக்கப்பட்ட தன் இன மக்களுக்கான போராட்டமாக மாற்றியதுதான் அற்புதம். இன்றைக்கு இவர் கொடைக்கானல் பகுதி பழங்குடி மக்களின் தேவதை. ரேஷன் கார்டு வாங்கித் தருவது, வீடுகட்ட உதவுவது, பழங்குடிப் பிள்ளைகளுக்குக் கல்வி பெற்றுத்தருவது... என ஒவ்வொரு நாளும் களத்தில் நிற்கிறார். அரசு உதவியோடு 30-க்கும் அதிகமான குடும்பங்களுக்கு வீடுகளையும் விவசாய நிலங்களையும் பெற்றுத்தந்திருக்கிறார். தேனி சின்னூர் காலனி தோட்டக் காடுகளில், சம்பளம் இன்றிக் கொத்தடிமைகளாக வைத்திருந்த மக்களைப் போராடி மீட்டு, அவர்களுக்கான வாழ்வாதாரங்களையும் பெற்றுத்தந்தார். இப்போது பழநி மலையில் ஆதிவாசிகளுக்கான இடங்களை மீட்கும் போராட்டத்தில் நிற்கும் மல்லிகா, பள்ளிக்கூடமே போகாதவர். இவரிடம் கற்க, எவ்வளவோ இருக்கிறது நமக்கு!

லட்சிய இளைஞன்

இளம்பகவத் (ஐ.ஏ.எஸ் அதிகாரி)

கல்லூரிக் கல்வியையே தொடர முடியாமல் நின்ற இந்த இளைஞன், இன்று இந்திய அளவில் 117-வது ரேங்க் அடித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி. தஞ்சாவூர் பக்கம் சோழன்குடிகாடு கிராமம். அப்பாவின் மரணத்துக்குப் பிறகு கல்வியைத் தொடர வழி இல்லாமல் வாரிசு வேலைக்குக் காத்திருந்தார். ஏழு ஆண்டுகள் போராடியும் வேலை கிடைக்காமல் இழுத்தடித்தார்கள். ‘வாரிசு வேலை தேவை இல்லை... போட்டித் தேர்வு எழுதி அரசு வேலையில் சேருவேன்’ என வைராக்கிய சபதம் எடுத்தார். முதல் முயற்சியில் காவல் துறையில் ‘இளநிலை உதவியாளர்’. அங்கு இருந்தே குரூப் 2 தேர்வு எழுதி ‘இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்’, குரூப் 1 தேர்வு எழுதி ‘ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்’, அடுத்து சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி ஐ.ஆர்.எஸ்., பிறகு போலீஸ் டி.எஸ்.பி என அடுத்தடுத்து உழைத்து, உயரங்கள் தொட்டார். இப்போது ஐ.ஏ.எஸ் இலக்கும் இவர் வசம். தன்னைப் போன்ற இளைஞர்களின் திறமையை வறுமை தின்னக் கூடாது என ‘இலவசப் பயிற்சி மையம்’ தொடங்கி திசைக்காட்டியாகவும் நிற்கிறார் இந்த நம்பிக்கை நண்பன்.

ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கை தீபங்கள்

சரண்யா - பூபாலன் (சமூக ஆர்வலர்கள்)

பூபாலன்-சரண்யா தம்பதியின் வாழ்வும் போராட்டமும் நம் ஒவ்வொருவருக்குமான நம்பிக்கை உதாரணம். இருளர் இனத்தைச் சேர்ந்த இருவருக்கும் 25 வயதுதான். பூபாலன் பார்ப்பது கூலி வேலை. டிப்ளமோ நர்ஸிங் படித்த சரண்யாதான் அந்த ஊரிலேயே அதிகம் படித்தவர். இதுதான் வாழ்வு என முடங்கிவிடாமல், அடுத்த தலைமுறைக்கு விதை போட்டது இவர்களின் பேரன்பு. செங்கல் சூளைக் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட 500 இருளர் குடும்பங்கள், திருவள்ளூர், பாலவாக்கம் ஜெ.ஜெ நகரில் வசிக்கிறார்கள். வறுமைக்கும் அடக்குமுறைக்கும் நடுவில் தவிக்கும் இந்தக் குடும்பங்களின் 60 பிள்ளைகளுக்கான கல்விப் போராட்டத்தைத் துவக்கியது இந்தத் தம்பதி. தினமும் இலவச ட்யூஷன், அவர்களின் கல்விக்கான நிதி உதவி, அடுத்தடுத்த பயணத்துக்கான வழிகாட்டல்கள் என, இதையே வாழ்க்கையாக்கிக் கொண்டார்கள். ‘கல்வியால் மட்டுமே ஒரு சமூகத்தின் அடிமைத்தனத்தை உடைக்க முடியும்’ என்கிற இவர்களின் குடிசையில் இருந்து ஒளிர்கிறது நம்பிக்கையின் விளக்கொளி!

அசத்தல் அதிரடி போலீஸ் மங்கை

வந்திதா பாண்டே (ஐ.பி.எஸ் அதிகாரி)

ஐ.பி.எஸ் தமிழக கேடரில் 2010-ம் ஆண்டு பேட்ச். சொந்த ஊர் உ.பி அலகாபாத். கடந்த ஐந்து வருடங்களாக இவர் நிகழ்த்திய நேர்மைப் பணிகளுக்கு, தமிழ்நாடே சல்யூட் வைக்கிறது. குற்றவாளிகளிடம் மட்டும் அல்ல, காவல் துறையிடமும் இவர் கண்டிப்பு பிரசித்தம். சமரசம் இல்லாத நேர்மைக்காகவே இடமாற்ற நெருக்கடிகளை எதிர்கொண்டார். ஆனாலும் அசராமல்போன இடங்களில் எல்லாம் அதே துணிவோடு அதிரடித்தார். உயர் போலீஸ் அதிகாரிகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிவகங்கைச் சிறுமியிடம் வாக்குமூலம் வாங்கி, அஞ்சாமல் சட்டப்படி வழக்கு பதிவுசெய்தார். பரிசாகக் கிடைத்தது கரூருக்கு மாற்றல். அங்கே தேர்தல் நேரத்தில், அன்புநாதனிடம் 4¾ கோடி பறிமுதல் செய்ததில் தொடர்ந்தது இவரின் இரும்புக் குணம். கொலை மிரட்டல்கள், இடமாற்றல்கள், மன அழுத்தங்கள்... அத்தனையையும் உடைத்துப் பாயும் வந்திதாவின் உறுதிக்குப் பெருமித வணக்கங்கள்!

இனிய இயற்கை நேசன்

செந்தமிழன் (பன்முகப் பண்பாட்டு ஆளுமை)

பத்திரிகையாளர், திரைப்பட இயக்குநர் என அடையாளங்கள் இருந்தாலும் இயற்கை விவசாயியாகத் தன்னை முன்னிறுத்தியதில் தொடங்கியது செந்தமிழனின் நம்பிக்கைப் பயணம். ‘செம்மை வாழ்வியல் நடுவம்’ என இவர் தொடங்கிய அமைப்பு, இயற்கை மீட்புக்கான அர்த்தமுள்ள முயற்சி. இயற்கை வாழ்வியலைக் கற்றுத் தரும் ‘பிரண்டைத் திருவிழா’, இயற்கை விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களை விற்கக் கூடும் ‘ஊர் சந்தை’, வேளாண் தொழில் கற்பவர்களுக்காக ஆச்சாம்பட்டியில் செயல்படும் ‘செம்மைவனம்’ என செந்தமிழன் நிகழ்த்தும் ஒவ்வொன்றும் நாளைய தலைமுறைக்கான நல் வழித்தடம். விகடனில் இவர் எழுதும், `ஆயிரம் சூரியன்... ஆயிரம் சந்திரன்... ஒரே ஒரு பூமி’ தொடர் உள்பட, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகத் தொடர்ந்து ஒலிக்கிறது இவரது குரல்... தொடர்ந்து விதைக்கிறது இவர் கரம்.

நம்பிக்கை நாயகி

ஐஸ்வர்யா ராஜேஷ் (நடிகை)

‘காக்காமுட்டை’யில் ஏழைத்தாயாக கவனம் ஈர்த்த ஐஸ்வர்யா ராஜேஷ், இந்த வருடம் முழுவதும் வசீகரித்தார். நடித்த ஒவ்வொரு பாத்திரத்திலும் பளிச்சிட்டது இவரின் நம்பிக்கையும் அர்ப்பணிப்பும். பாசக்கார மனைவியாக ‘ஆறாது சினத்தில்’ உருக்கினார், ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’-ல் டபராக்குத்து போட்டுத் தெறிக்கவிட்டார், ‘குற்றமே தண்டனை’யில் காட்டியது நவீனம் என்றால், ‘தர்மதுரை’ காமக்காப்பட்டி அன்புச்செல்வி ஆசம். பார்த்துப் பார்த்துப் பாத்திரங்களைத் தேர்ந் தெடுப்பதும் அதற்காகத் தன்னைச் செதுக்கிக் கொள்வதுமாக... ஐஸ்வர்யா சமகால நடிகைகளில் நம்பிக்கை அடையாளம்!

வசீகர எழுத்துக்காரன்

சரவணன் சந்திரன் (எழுத்தாளர்)

சென்ற ஆண்டுதான் முதல் நாவலான ‘ஐந்து முதலைகளின் கதை’ வெளிவந்தது. அதற்குள் அடுத்தடுத்து மூன்று நூல்கள். சமீபத்தில் வந்த இவரது ‘அஜ்வா’ நாவல், அதிர்வு நரம்புகளை மீட்டியது. சமகால இலக்கியத் தளத்தில், தவிர்க்க முடியாத குரல் சரவணனுடையது. எளிமையும் ஆழமுமான எழுத்துக்கள் ஈர்க்கின்றன. நம் கால வாழ்வியலின் துயரங்களை, பிரச்னைகளைப் பேசும் விரல். ஒருபக்கம் காட்சி ஊடகப் பணிகள், இன்னொரு பக்கம் மீன் வியாபாரம் என மக்களோடு புழங்கும் வாழ்க்கை... இந்த இளைஞனின் எழுத்துக்களைத் தனித்து அடையாளப் படுத்துகிறது!

நல்ல சினிமாவுக்கான நம்பிக்கைக் காதலன்

அருண் (சினிமா ஆர்வலர்)

சினிமாவுக்கு என்றே பிரத்யேகமாக, ‘ப்யூர் சினிமா’ என்கிற புத்தகக் கடை நடத்துகிறார். இங்கேயே சினிமா நேசர்களுக்கான நூலகமும் உண்டு. தொடர்ச்சியாக மாற்று சினிமா திரையிடல்கள், திரைக் கலைஞர்களோடு கலந்துரையாடல்கள், பயிற்சிப்பட்டறைகள் நிகழ்த்துகிறார். ‘பேசாமொழி’ பதிப்பகமும், ‘படச்சுருள்’ சிற்றிதழும் இவரின் நன்முயற்சிகள். மென்பொருள் துறை வேலையைத் துறந்துவிட்டு, ‘தமிழ் ஸ்டுடியோ’ என்ற அமைப்பைத் தொடங்கி, இவர் முன்னெடுக்கும் அத்தனை முயற்சிகளுக்கும் அடிப்படைக் காரணம், நல்ல சினிமாவுக்கான தேடலும்... காதலும்.

தமிழோடு இசை பேசு!

பிரதீப்குமார் (பின்னணிப் பாடகர்)

ஆண்டு முழுவதும் இசை ரசிகர்களை தன் மேகக்குரலால் நனைத்த `மாயநதி’ பிரதீப்குமார். தமிழர்களின் இனிய இரவுகளின் புதிய வரவு. நண்பர்களுடன் சேர்ந்து இண்டிபெண்டன்ட் ஆல்பங்கள் மூலம் யூ-டியூபில் ஹிட்ஸ் வாங்கிக்கொண்டிருந்த இளைஞர். சினிமாவுக்கு வந்த பிறகு இவர் பாடுபவை எல்லாமே பட்டையைக் கிளப்பும் ஹிட்டுகள். 2016-ம் ஆண்டு எல்லா இசைப்பட்டியல்களிலும் இவரின் பெயர் மூன்று முறையாவது உச்சரிக்கப்பட்டிருக்கும். `வானம் பார்த்தேன்’ பாடலில் சோகம், `மாயநதி’யில் பிரிவு, `இணைவோம் இணைவோம்’ல் வீரம், `வீரத் துரந்திரா’வில் தைரியம் என இந்த ஆண்டு பிரதீப் காட்டியவை எல்லாமே காதுக்கு இனிய காம்போ!

`குக்கூ’, `மெட்ராஸ்’ என 2014-ம் ஆண்டில் பிரதீப்பின் கிராஃப் மேலே ஏறியது. அது இந்த ஆண்டு `இறுதிச்சுற்று’, `மாவீரன் கிட்டு’, `கபாலி’ என ஹெலிகாப்டர் ஷாட்களாகப் பறந்திருக்கின்றன. கிட்டாரில், ஸ்லைடு கிட்டார் என்பது தனிவகை. அதில் பிரதீப் அபாரக் கலைஞன். `உலக இசைக்கலைஞன் கில்பார்ட்டோ தனது ஃபேவரைட்’ எனக் குறிப்பிடும் பிரதீப்பிடம் தெரிவதோ பக்கா தமிழ்க் குரல். உருகும் குரலும் உளறாத தமிழும் உணர்வோடு கலந்த இசையும் பிரதீப்பின் பலம். மெகா பைட் கணக்கில் இருக்கும் இவரது ஹிட் கலெக்ஷன், டெர்ரா பைட் அளவுக்கு ஏறப்போவது நிச்சயம்!

தங்கத் தமிழச்சி

சூர்யா (தடகள வீராங்கனை)

இந்திய அளவில் 5,000 மீட்டர், 10,000 மீட்டர் போட்டிகளில் இப்போது இவர்தான் நம்பர் ஒன். அதிரடி அம்பாகப் புறப்பட்டு அத்தனைப் போட்டிகளிலும் தங்கத்தடம் பதித்தார். கௌஹாத்தியில் நடந்த தெற்காசியப் போட்டிகளில், இந்தியாவுக்கு இரண்டு தங்கங்கள் அடித்து வந்தது தமிழகத்தின் பரவசத் தருணம். 12 வயதில் தொடங்கிய ஓட்டம், பதக்கங்களை அள்ளுகிறது. சில விநாடிகள் வித்தியாசத்தில் ரியோ ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தாலும் அடுத்தடுத்த சர்வதேசப் போட்டிகளுக்காகத் தளராமல் தயாராகிறார். 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் கனவுகளோடு தடதடக்கும் சூர்யா, நமது தங்க நம்பிக்கை!