Published:Updated:

மீனவர் பிரச்னைக்கு சுமூக தீர்வு: ஏ.கே.அந்தோணி உறுதி

மீனவர் பிரச்னைக்கு சுமூக தீர்வு: ஏ.கே.அந்தோணி உறுதி
மீனவர் பிரச்னைக்கு சுமூக தீர்வு: ஏ.கே.அந்தோணி உறுதி
மீனவர் பிரச்னைக்கு சுமூக தீர்வு: ஏ.கே.அந்தோணி உறுதி

புதுடெல்லி: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் பிரச்னையில் ஒரு சுமுகமான தீர்வை காண மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி உறுதியளித்துள்ளார்.

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நேற்று முன்தினம் எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.

இலங்கை விவகாரம், உத்தரபிரதேசத்தில் போலீஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக நேற்றும் நாடாளுமன்றம் முடங்கியதால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் மக்களவையில் இன்று விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தில் நடந்த ஊழல் பிரச்னையை, அவை கூடியதும் பா.ஜனதா  இடதுசாரி உறுப்பினர்கள் கிளப்பினார்கள்.

அவர்கள் அவையின் மையத்தில் வந்து விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக கேள்வி நேரத்தை ரத்து செய்து விட்டு விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதை சபாநாயகர் மீரா குமார் ஏற்க மறுத்தார்.

##~~##
அ.தி.மு.க. உறுப்பினர்கள் இலங்கை தமிழர் விவகாரம் குறித்த பிரச்னையை கிளப்பினார்கள். இந்த அமளி காரணமாக சபாநாயகர் அவையை 12 மணி வரை ஒத்தி வைத்தார்.
கச்சத்தீவை மீட்க வலியுறுத்தல்
இதனிடையே மாநிலங்களவையிலும் இலங்கை பிரச்னையை தமிழக எம்.பி.க்கள் எழுப்பினர். தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை பற்றி குறிப்பிட்டு பேசிய அதிமுக எம்.பி. மைத்ரேயன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ராஜா, திமுக எம்..பி.கனிமொழி உள்ளிட்டோர், கச்சத்தீவை மீட்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும் தமிழர்களை அழிக்க வேண்டும் என்ற முனைப்போடு இலங்கை செயல்படுகிறது. தமிழர்கள் வாழும் பகுதிகளில் மருத்துவமனைக்க நிதி ஒதுக்குவதில்லை. இலங்கையில் தமிழர்பகுதிகளில் மீள்குடியேற்றம் நடக்கவில்லை என தி.மு.க. எம்.பி செல்வகணபதி குற்றம்சாட்டினார்.

அரசு இந்த விஷயத்தில் ஒரு பார்வையாளராக மட்டுமே உள்ளது என்று குற்றம்சாட்டிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா, இது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் விளக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

கச்சத்தீவு ஒப்பந்தத்தை அரசு மறு ஆய்வு செய்யவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் என்று கூறிய அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயன், கச்சத்தீவை மீட்பது ஒன்றே மீனவர் பிரச்னைக்குத் தீர்வாக இருக்கும் என்று கூறினார்.

இந்திய எல்லைக்குள் இலங்கை மீனவர்கள் நுழையும்போது இந்தியக் கடற்படை அவர்களை கைது செய்வதில்லை என்று கூறிய தி.மு.க எம்.பி. கனிமொழி, ஆனால் நம் நாட்டு மீனவர்கள் மட்டும் கைது செய்யப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டார்.

ஏ.கே.அந்தோணி பதில்

இதற்கு பதில் அளித்து பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, " மத்திய அரசு இந்த பிரச்சினையை மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசு இலங்கை அரசை தொடர்பு கொண்டு உள்ளது.

அவர்களை பாதுகாப்பாக விடுவிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் பிரச்னையில் ஒரு சுமுகமான தீர்வை காண மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்" என்றார்.