2016-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 தலையாயப் பிரச்னைகளைப் பற்றி பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...

மறதியில் எரியும் மாய நெருப்பு

2015-ம் ஆண்டு டிசம்பரில், சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவு நிகழ்ந்தபோது, நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பதில் சமூக வலைதளங்கள் பெரும்பங்காற்றின. அவற்றின் முக்கியத்துவத்தை அனைவரும் முதன்முதலாக உணர்ந்துகொண்ட தினங்கள் அவை. ஆனால், எல்லாம் சில நாட்களுக்குத்தான். வெள்ளத்தின் பாதிப்புகள் சற்றும் குறையாத நிலையில்... ஒருநாள் காலை சமூக வலைதளங்களில் இருந்து வெள்ளம் காணாமல்போய், சிம்புவின் ஒரு பாடல் ஒட்டுமொத்த நெட்டிசன்களைத் திசைமாற்றியது. சமூக வலைதளங்களில் பேசப்படும் விஷயங்களில், தற்காலிகத்தன்மை குறித்து நான் அதிர்ச்சியுடன் உணர்ந்த முதல் தருணம் இதுவே.

இங்கே எல்லோரும் எல்லா பிரச்னைகள் குறித்தும் கேள்விகளை எழுப்புகிறார்கள். ஆனால், நேற்று எழுப்பிய கேள்விகளுக்கு எந்தப் பதில்களும் கிடைக்கவில்லையே என்பது குறித்து யாருக்கும் எந்தக் கவலையும் இல்லை. அந்தக் கேள்விகளை நாம்தான் எழுப்பினோம் என்பதுகூட யாருக்கும் நினைவில் இல்லை.

பல தனிமனிதப் பிரச்னைகள்கூட சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவுவது உண்டு. ஒரு பெண், கெட்டுப்போன உணவை வேலைக்காரர்களுக்குக் கொடுப்பது தொடர்பாக எழுதிய பதிவு, முகநூல் பதிவர் ஒருவருக்கும் டாக்ஸி ஓட்டுநருக்கும் இடையில் நடந்த தகராறு, எழுத்தாளர் ஜெயமோகன் வங்கியில் மெதுவாக வேலைசெய்யும் ஒரு பெண் குறித்து எழுதிய பதிவு, வாணிஸ்ரீ பற்றி நான் எழுதிய பகடிக் கவிதை என, சமூக வலைதளங்களில் 2016-ம் ஆண்டில் பற்றி எரிந்த பிரச்னைகளின் பட்டியல் மிகப்பெரியது. ஆனால், சமூகத்தின் ஆதாரமான பிரச்னைகள் சமூக வலைதளங்களில் வைரலாக மாறிய சந்தர்ப்பங்கள் மிகக் குறைவு.

சமூக வலைதளங்கள் மக்களிடம் பரவ ஆரம்பித்தபோது, வரலாற்றில் மக்கள் ஊடகம் ஒன்று முதன்முதலாக உருவாகிவிட்டது என்றே நம்பினோம். வெகுசன ஊடகங்கள் திட்டவட்டமான சார்புநிலைகளுக்குள் வரையறுக்கப்பட்டதாக இருந்தன. ஆனால், சமூக வலைதளங்கள் அந்தச் சுவரை உடைத்தன. ஆனால், அது கருத்துச் சார்ந்த அதிகாரங்களை உடைத்து, சிந்தனை சார்ந்தும் மொழி சார்ந்தும் பரவலான சிந்தனை மறுமலர்ச்சியை உண்டாக்கியிருக்க வேண்டும். அப்படி நடந்ததா?

இலக்கியம், சமூகம், அரசியல் , கொந்தளிக்கும் பிரச்னைகள் என எல்லாமே இங்கு அரட்டையாக மாறிவிட்டன. எந்தப் பிரச்னையிலும் அதன் வேர்களைப் புரிந்துகொள்ளாமலேயே, அதில் தனக்கு ஒரு கருத்து அல்லது நிலைப்பாடு இருக்கிறது என நம்புவது, இந்த அரட்டை மனோபாவத்தின் முக்கிய அம்சம்.

சமூக வலைதளங்களில் இத்தனை பிரச்னைகள் பேசப்படுகின்றன என்றால், அதை விவாதிப்பதற்கான தர்க்க அறிவும் மொழி அறிவும் எவ்வளவு வளர்ந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. விஜயகாந்த் மீது கேலியும் கிண்டலும் செய்து, எத்தனை ஆயிரம் மீம்ஸ்கள்

உருவாக்கப்பட்டன. இவை பத்திரிகைகளில் வெளிவரும் கேலிச்சித்திரங்கள் போன்றவைதான் என்றபோதும், அந்தச் சித்திரங்களை உருவாக்குவதில் யாருக்கும் சுயமான சிந்தனை இல்லை. வடிவேலு நகைச்சுவை ஸ்டில்லுடன் வடிவேல் பட வசனத்தை ஒட்டவைத்து, அதை யாராவது ஒருவரைப் பற்றியதாகச் சுட்டிவிட்டால் மீம்ஸ் ரெடி. இங்கு சொந்த மொழி, சொந்த அபிப்பிராயம் என எதுவும் இல்லை.

சமூக வலைதளங்கள், சமூக அவலங்களை வெளிப்படுத்தும் களமாக இருக்கின்றனவா அல்லது பெரும் போராட்டங்கள் தேவைப்படும் பிரச்னைகளை ஓரிரு நாள் உக்கிரமாகப் பேசி கடந்து சென்றுவிடும் தற்காலிக நிவாரணிகளாக இருக்கின்றனவா என்பதுதான் நம் முன் இருக்கும் சவால்.

எல்லாவற்றின் மீதும், கேலி என்பதற்கு மேல் நம்முடைய செயல்பாடு என எதுவும் இல்லையா? நமது மறதியின் மூலம் நாம் கைவிட்ட பிரச்னைகளில் நமக்கு எந்தப் பொறுப்பும் இல்லையா? ராம்குமாரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை என்னவாயிற்று என்று ஏன் நாம் மறுபடி கேட்கவே இல்லை?