2016-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 தலையாயப் பிரச்னைகளைப் பற்றி பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...

முடியப்போகும் ஆண்டும் வரப்போகும் ஆண்டும், திராவிட இயக்க வரலாற்றின் மைல்கற்கள். 2016-ம் ஆண்டு திராவிட இயக்கத்தின் முன்னோடியான `பிராமணரல்லாதோர் இயக்க’த்தின் நூற்றாண்டு வருடம். பிராமணரல்லாதோர் அறிக்கை வெளியிடப்பட்ட 1916-ம் ஆண்டில்தான் தனித்தமிழ் இயக்கமும் தொடங்கப்பட்டது. இந்த இரு நீரோட்டங்களின் சங்கமத்தில் உதயமான திராவிட இயக்கம், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய வரலாற்று நிகழ்வின் தங்க விழா ஆண்டு 2017.

ஓர் இயக்கத்தின் முக்கிய வரலாற்றுத் தருணத்தில், அதன் எதிர்காலம் குறித்து கேள்வி எழுந்துள்ளது. அதற்கான உடனடி காரணம், திராவிடப் பெயர் தாங்கிய ஒரு பலமான கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவின் மரணம். அவர் தலைமை தாங்கி நடத்திய அ.தி.மு.க-வின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக மாற்றியது மட்டும் அல்லாமல், இரு துருவ அரசியலில் 50 ஆண்டுகள் ஊறிப்போன தமிழக அரசியலில், இனி அதன் பிரதம எதிரியான தி.மு.க எந்தத் திசையில் பயணிக்கப்போகிறது என்ற ஆர்வத்தையும் கிளப்பியிருக்கிறது.

புதுப்பிக்கவேண்டிய தருணம்!

எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க-வில் பெயர் அளவுக்கு ஓர் அமைப்பு இருந்தது. திராவிட இயக்கப் பாரம்பர்யத்தில் வளர்ந்த இரண்டாம் கட்டத் தலைவர்கள் இருந்தனர். ஆனால், ஜெயலலிதாவின் அ.தி.மு.க வேறு. கட்சியிலும் ஆட்சியிலும் யாரும் தொடர்ந்து வேரூன்றி நிற்க முடியாது என்ற நிலையற்ற உணர்வுடன், எல்லா மட்டத் தலைவர்களையும் வைத்திருந்தார் ஜெயலலலிதா. இதனால்தான் அவர் மறைவுக்குப் பிறகு சொந்தக் கால்களில் நிற்க முடியாத தலைவர்கள், வேறு கால்களைத் தேடும் அவல நிலைக்கு வந்திருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர் காலத்திலேயே திராவிட இயக்க அடிப்படைகளில் இருந்து விலகிச் சென்றுவிட்ட அ.தி.மு.க., ஜெயலலிதாவின் தலைமையின் கீழ் தனிநபர் துதி, போலி விசுவாசம் தவிர, வேறு எந்தவிதமான அரசியல் பார்வையும் கொள்கையும் இல்லாத உள்ளீடு இல்லாத இயக்கமாக மாறியது. கருணாநிதி எதிர்ப்பிலேயே வளர்க்கப்பட்ட அ.தி.மு.க தொண்டர்களும், அ.தி.மு.க வாக்காளர்கள் பெரும்பகுதியினரும் என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்பதை வைத்தே தமிழகத்தின் அரசியல் வரலாறு அடுத்த கட்டத்துக்கு நகரும்.

தி.மு.க-வுக்குள்ளும் ஒரு தலைமை மாற்றம் நிகழும் தருணம் வந்திருக்கிறது. 1972-ம் ஆண்டில் அ.தி.மு.க-வின் தோற்றம் தி.மு.க-வின் அரசியலையும் மாற்றியது. மாநிலத்துக்குள்ளேயே, திராவிடப் பெயர்கொண்ட ஒரு கட்சி வலுவான எதிரியாக அமைந்ததும், அகில இந்தியக் கட்சிகள் வலுவிழந்ததும், கடந்த 50 ஆண்டுகளில் இரு கட்சிகள் முறையை தமிழகத்தில் அமைத்து விட்டன.

மைய எதிர்ப்பு அரசியல் நடத்திய திராவிட இயக்கத்துக்கு, மைய அதிகாரத்தில் பங்கேற்கும் வாய்ப்பை வழங்கியது கூட்டணி ஆட்சி முறைதான். அங்கும் தொடர்ந்தது இரு கட்சிகளின் அதிகாரப் போட்டி. தந்தை பெரியார் எதற்கு எல்லாம் எதிராக நின்றாரோ, அவற்றின் தலைமைப்பீடமாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அரசியல் பிரதிநிதியான பி.ஜே.பி-யுடன், இரண்டு கட்சிகளும் கூட்டணி வைக்கும் அளவுக்குச் சென்றது.

பி.ஜே.பி-யின் மதவாத அபாயம் ஒருபுறம் இருக்க, அது வேகமாக முன்னெடுத்துச் செல்லும் புதிய பொருளாதாரக் கொள்கையின் முதல் பலி, திராவிட இயக்கத்தின் அடிநாதமான சமூகநீதிதான். அதன் முக்கிய அங்கமான இட ஒதுக்கீடு என்ற கருத்தாக்கம், அரசாங்கம் விரிவடைந்த நேரத்தில் தோன்றியது. தனியார் மயம் அரசாங்கம் நடத்தும் பொதுத் துறையின் வேலைவாய்ப்புகளை வெகுவேகமாகக் குறைத்துவருகிறது.

இரு துருவ அரசியல் முடிவுக்கு வரக்கூடிய இந்தத் தருணத்தில், திராவிட இயக்கத்தின் முன்னணிப் படையாக இருக்கும் தி.மு.க தன் அடிப்படைக் கொள்கைகளை மறுவரையறை செய்து, தன்னைப் புதுப்பிப்பதன் மூலம், அடுத்த நூற்றாண்டில் தன்னம்பிக்கையுடன் கால் எடுத்துவைக்க முடியும்!