2016-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 தலையாயப் பிரச்னைகளைப் பற்றி பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...

பேருயிர் காப்போம்!

`மனித மனம்’ என்னும் காட்டில் நிலங்களுக்கும் வீடுகளுக்கும் வாகனங்களுக்கும் இடம் இருக்கிறது. ஆனால், மரங்களுக்கும் விலங்குகளுக்கும்தான் இடம் இல்லை. காடுகள் இன்றி வாழ்வு இல்லை; மழை இல்லை; நீர் இல்லை என்பதை மனிதன் உணரும் நாள் வர, இன்னும் பல நூற்றாண்டுகளைக் கடக்கவேண்டியிருக்கும் போல. மனதில் இடம் இல்லாதபோது, காடுகளும் இல்லாமல் ஆகின்றன. எனவே, காட்டின் சேதியைச் சொல்ல யானைகளும் சிறுத்தைகளும் இன்னபிற விலங்குகளும்கூட ஊருக்குள் நுழைகின்றன.

2016-ம் ஆண்டில் மட்டும், இந்தியா முழுவதும் 92 புலிகள் இறந்துள்ளன; மனிதனின் இடையூறால் அதிகமாகவே இறந்துள்ளன.

52 புலிகள் இறந்ததற்கு நம்மிடம் முறையான காரணம் இல்லை. சிறுத்தைகளும் 10-க்கும் மேல் இறந்துள்ளன. மின்சார வேலிகளில் சிக்கி, ரயிலில் அடிபட்டு, நோய்க்கூறுகள் அதிகமாகி உடலில் புழுக்கள் அதிகரித்து என...

32 யானைகள் இறந்துள்ளன. கோவை, சத்தியமங்கலம், மங்களூர் ரயில் பாதைகளில்தான் இந்த மரணங்கள் அதிகம் நிகழ்ந்துள்ளன.

விலங்குகளின் மேல் நமக்குக் கரிசனம் இருந்தால், அடிப்படையான வழக்கமான நடைமுறைகளை நாம் மாற்றிக்கொண்டு, வனவிலங்குகளை நிச்சயம் காப்பாற்ற முடியும். காட்டுக்குள் வேகமாக ரயிலை ஓட்டாமல் இருக்கவும், யானையின் வழித்தடங்களில் ரயில் பாதைகளை அமைக்காமல் வேறு பாதைகளில் அமைக்கவும் முடியும். ஆனால், நம்முடைய அக்கறைகளும் கரிசனங்களும் காட்டு உயிர்களின் மீதானவை அல்ல. அதனாலேயே நம்முடைய நடைமுறைகள், அந்த உயிர்களின் அழிவைப் பற்றிய அக்கறையற்றவையாக இருக்கின்றன.

ஒரு யானை அல்லது புலியின் மரணம், நாம் நினைத்துப்பார்க்க இயலாத அளவுக்கு காட்டுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. ஆதியில் மனிதன் ஆப்பிரிக்காவில் இருந்து இடம்பெயர்ந்தபோது யானையின் பாதைகளில் நடந்துதான் உலகம் முழுவதும் பரவினான். யானையின் சுற்றுப்பாதைகள் பல லட்சம் ஆண்டுகள் தொன்மையானவை. அதை மறந்து, இன்று தன் பாதையில் யானைகள் பயணிக்க வேண்டும் என மனிதன் விரும்புகிறான். இதன் விளைவுகள் மிகவும் விபரீதமாக உள்ளன.

ஆட்சிகளின், கட்சிகளின் சாயல்கள் இன்றி காடுகளைப் பாதுகாக்கும் திட்டங்கள்தான் இன்று நம்முடைய தேவை. 10-ல் இருந்து 50 ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக காட்டை வளப்படுத்தும் திட்டங்களும், காடுகளை ஒருபோதும் மனிதனால் உருவாக்க இயலாது என்ற அறிதலோடுகூடிய தொலைநோக்குச் செயல்பாடுகளும்தான் நமக்கு அவசியம். யானை என்பது, வெறும் விலங்கு மட்டும் அல்ல... வனத்துக்கும் சூழலுக்கும் நாம் எண்ணிப்பார்க்க இயலாத உதவிகளைச் செய்யும் உயிரினம்; பெரும் மரங்களின் விதைகளைக் கடத்தும் விதை வங்கி.

சிறு உயிர்களுக்கான உணவை வழங்கும் பரோபகாரி. யானையின் அழிவு என்பது வனத்தின் அழிவு.

`கொடிய விலங்குகளும் பயங்கரங்களும்' எனத் தொடங்கும் குழந்தைக் கதைகள் முதல், அதையே பின்தொடரும் வணிகப் பத்திரிகை வரை நமது எழுத்துகளும் இதழியலும் முழுமையாக உருமாற்றம் கொள்ளவேண்டிய தருணம் இது. சமவெளி மனிதனுக்கு ஞானத்தைப் போதிக்கும் காடுகள் இல்லாதபோது, நமக்கு இந்தப் புவியைவிட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழி இருக்காது.

40 சதவிகிதக் காடுகளை மீட்காதவரை, நம் வாழ்வு லயமாக அமையாது. லாபக் குறிக்கோள்கொண்ட சமூக அமைப்பில் இருந்து விலகி, உயர்திணை, அஃறிணை எனப் பிரிக்கத் தெரியாத காட்டுப் பழங்குடியின் மனதை எட்டுவதே நம் இறுதி லட்சியமாக இருக்க வேண்டும். அதுதான் காட்டு உயிர்களைக் காக்கும்; காடுகளை உயிர்க்கச் செய்யும்!