2016-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 தலையாயப் பிரச்னைகளைப் பற்றி பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...

குறைபாடு யாருக்கு?

`போரே வாழ்வாக இருந்தது’ எனச் சித்திரிக்கப்படும் காலத்தில்கூட, குழந்தைகள், பெண்கள், முதியோர் ஆகியோருக்குத் தாக்குதல்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது; அவர்களின் மேல் பரிவு காட்டப்பட்டது. அவர்களோடு மாற்றுத்திறனாளிகளையும் எப்படி ஒரு சமூகம் நடத்துகிறது என்பதைக் கொண்டுதான் அதன் நாகரிகம் அளவிடப்பட்டது. ஆனால், இப்போது நாம் வாழும் நவநாகரிகச் சமூகத்தில் மாற்றுத்திறனாளிகள் எப்படி நடத்தப்படு கிறார்கள்?

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையான மாதம் 1,000 ரூபாயை, 40 சதவிகிதம் உடல் குறைபாடு கொண்டவர்களுக்கும் வழங்க வேண்டும். `65 சதவிகிதம் உடல் ஊனமுள்ளவர்களுக்கே உதவித்தொகை’ என்ற விதியைத் திருத்த வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்... எனப் பல கோரிக்கைகளை முன்வைத்து மாற்றுத்திறனாளி அமைப்புகள் பல காலமாகப் போராடி வருகின்றன.

இந்தக் கோரிக்கைகள் எதுவுமே பரிசீலிக்கப் படாத காரணத்தால், மாற்றுத்திறனாளி களுக்கான அமைப்பு, கடந்த பிப்ரவரி மாதம் சென்னை எழிலகத்தை முற்றுகையிடும் போராட்டம் தொடங்கியது. போராடியவர்கள் மீது, வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. கழிவறைகள்கூட இல்லாத அறைகளில் மாற்றுத்திறனாளிகள் இரண்டு நாட்கள் அடைக்கப்பட்டனர்; மொட்டை வெயிலில் ஸ்டேடியத்தில் நிறுத்தப்பட்டனர். இதில், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த குப்புசாமி என்பவர் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.

இவ்வளவும் நடந்த பிறகு, மாற்றுத்திறனாளிகளின் பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதாக சட்டமன்றத்தில் 110-விதியின் கீழ் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். வேலையில்லாத மாற்றுத்திறனாளிகளில் 40 சதவிகிதம் உடல் ஊனமுற்று இருந்தாலே உதவித்தொகை வழங்கப்படும் என்று ஆணை பிறப்பித்தார்.

இதற்குப் பிறகு, எல்லாம் சுமுகமாக முடிந்திருக்க வேண்டும். ஆனால், இல்லை. இப்போதும் உதவித்தொகைக்கான சான்றிதழ் பெறுவதற்கு ரூபாய் 5,000 முதல் 8,000 வரை கையூட்டு தர வேண்டியிருக்கிறது. தகுந்த காரணம் இன்றி அல்லது அல்பமான காரணம் சொல்லி உதவித்தொகை கோரும் மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன. ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் வென்ற பார்வையற்றப் பட்டதாரிகளுக்கு இன்னும் பணிநியமன ஆணை வழங்கப் படவில்லை. மாவட்டம்தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுவசதி செய்துதர வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கும் உரிய பதில்கூட இல்லை.

இதேபோல்தான் 2012-ம் ஆண்டு, அனைத்து அரசு அலுவலகங்களிலும் மாற்றுத்திறனாளி களுக்கு தனிக்கழிவறைகளும், அவர்களின் சக்கர நாற்காலிகள் செல்வதற்கு ஏற்ப சாய்தள வசதிகளும் அமைக்கப்படும் எனச் சட்டம் போடப்பட்டது. ஆனால், தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில்கூட இதுவரை இந்த வசதிகள் இல்லை. சட்டமன்ற உறுப்பினரான முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்கள், சக்கர நாற்காலியில் சட்டமன்றக்குள் வந்து செல்வதற்கான அடிப்படை வசதியை இந்த அரசு செய்து தரவில்லை எனக் காரணம்காட்டி, அவர் சட்டமன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இல்லை. சட்டமன்றத்தின் நிலையே இப்படி எனில், சாதாரண மாற்றுத் திறனாளிகளை அரசு எப்படி நடத்தும்?

ஒரே ஓர் ஆறுதல், தன் சொந்த முயற்சியால் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வாங்கிவந்த மாரியப்பன்தான்.

மாற்றுத்திறனாளிகள் பற்றிய தன் பார்வைக்குறைபாட்டை ஆளும் வர்க்கம் எப்போது சரிசெய்யப்போகிறது?