2016-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 தலையாயப் பிரச்னைகளைப் பற்றி பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...

சிவன் சொத்து குலநாசம்!

நெல்லை மாவட்டம் பழவூர் என்ற ஊரில் உள்ள நாறும்பூநாதர் கோயில் மிகப் பழைமையானது. அங்கே உள்ள ஆனந்த நடராஜர் சிலைக்கும் விலை உண்டு என்ற விவரம் எல்லாம் அந்த மக்களுக்குத் தெரியவே தெரியாது. அந்தக் கோயிலில் இருந்த ஆனந்த நடராஜர் சிலை உள்ளிட்ட பல்வேறு 13 கடவுளர்களின் உருவச் சிலைகள், 2005-ம் ஆண்டில் கொள்ளையடிக்கப்பட்டன. அப்படி ஒரு சம்பவம் நடந்த பிறகுதான், அந்தச் சிலைகளின் மதிப்பு 15 கோடி ரூபாய் என்பது எல்லோருக்கும் தெரியவந்தது.

வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை அருகே உள்ள மேல்பாடி கிராமத்தில் இருக்கும் சோமநாத ஈஸ்வரன் கோயிலும் 1,047 வருடப் பழைமையானது. அந்தக் கோயில், ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. அதற்குப் பக்கத்திலேயே அவர் தனது பாட்டனாருக்கும் ஒரு கோயில் கட்டியிருக்கிறார். இந்த இரண்டு கோயில்களுமே தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தால் பாதுகாக்கப்படுகின்றன. சுமார் 15 வருடங்களுக்கு முன்னர், அந்தக் கோயிலில் இருந்த 16 சிலைகள் கொள்ளையடிக்கப் பட்டன. அதற்குப் பிறகு யாருக்கும் அதைப் பற்றிய கவலைகள் எழவில்லை. ஆனால், தினமும் பூஜைகள் நடந்தன.

மேலே குறிப்பிட்ட ஆனந்த நடராஜர் சிலையும், மேல்பாடியில் கொள்ளையடிக்கப்பட்ட 16 சிலைகளில் 14 சிலைகளும் கடந்த வருடம் மீட்கப்பட்டன. அந்தச் சிலைகளில் நடராஜர் சிலையும் மற்ற இரண்டு சிலைகளும் ஆழ்வார்பேட்டையில் அபர்ணா ஆர்ட் கேலரி நடத்திவந்த தீனதயாளன் என்பவரின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டன. அவருடன் தொடர்பில் இருந்த இன்னொரு கடத்தல்காரர் புதுச்சேரி புஷ்பராஜன் என்கிற தொழிலதிபர் வீட்டில் இருந்து மீதி உள்ள 11 சிலைகளும் கைப்பற்றப்பட்டன.

இந்தக் கோயிலைச் சேர்ந்த சிலைகள் மட்டும் அல்லாமல், தீனதயாளன் வீட்டில் இருந்து பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலைகளும், 300-க்கும் மேற்பட்ட பழங்காலக் கற்சிலைகளும் மீட்கப்பட்டன. சிவனின் அடிமுடி தேடுவதுபோல, இந்த முறைகேடான வணிகத்தின் வேர்களைத் தேடினால், அதற்குப் பின்னால் ஒரு சாம்ராஜ்ஜியமே விரிகிறது.

உலக அளவிலான நெட்வொர்க் இது. எனினும், இந்திய அளவில் தென்னிந்தியாவில் இருக்கும் சிலைகளுக்கு மவுசு அதிகம் என்கிறார்கள். அதிலும் சோழர்கால பஞ்சலோகச் சிலைகளுக்கு இன்னும் அதிக மவுசு. ஏனெனில், தங்கம், செம்பு, வெள்ளி, இரும்பு, காரியம், தாமிரம், துத்தநாகம் ஆகிய உலோகங்களால் செய்யப்படும் அந்தச் சிலைகள், உலகச் சந்தையில் மிகுந்த மதிப்புமிக்கவை. பழங்கால திருட்டுச் சிலைகள் தொடர்பான பித்துப்பிடித்து அலைபவர்களின் முதல் சாய்ஸ் இவை.

இந்தியக் குற்ற ஆவணக் கணக்கீட்டின்படி 2008-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை மட்டும் சுமார் 4,408 சிலைகள் கடத்தப்பட்டிருக் கின்றன. இவற்றில் 1,493 மட்டுமே கைப்பற்றப் பட்டுள்ளன. இந்தியா முழுவதிலும் இதுபோல மதிப்புமிக்க 70 லட்சம் சிலைகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதில் 13 லட்சம் சிலைகள் மட்டுமே முறையாக டாக்குமென்ட் செய்யப்பட்டுள்ளன.

`மிகக் குறைந்த அளவு காவலர்கள் மற்றும் அதிகாரிகளை வைத்துக்கொண்டு, சிலைக் கடத்தல் பிரிவு மற்றும் இது சம்பந்தமான பிற துறைகள் எப்படி இந்தச் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டுக்குள் கொண்டுவரும்?’ என்ற இயல்பான கேள்வி எழுகிறது. இதற்கு இயல்பான காரணம் இருக்கிறது. ஏனெனில், சென்னையைச் சேர்ந்த பெருங்கடத்தல்காரரான தீனதயாளன் வீட்டுக்கு அருகில், காவல் துறை உயர் அதிகாரி ஒருவரின் வீடு இருக்கிறது. சத்தம் இல்லாமல் ஒரு மறைவு வியாபாரம், கமிஷனர் அந்தஸ்த்தில் இருக்கும் அதிகாரி ஒருவரின் வீட்டுக்கு அருகிலேயே சாத்தியப்பட்டிருக்கிறது என்றால், இதன் பூதாகாரத்தைப் புரிந்துகொள்ளுங்கள். `சிவன் சொத்து குலநாசம்’ என, பைசா பெறாத விபூதியையே திண்டில் தட்டில் விட்டுப்போகும் மக்கள் இருக்கும் நாட்டில்தான், அதே கடவுள் சிலைகளைக் காசாக்கும் நபர்களும் கமிஷனரின் வீட்டுக்கு அருகிலேயே கடை விரித்திருக்கிறார்கள். குலநாசம் என்பது எல்லாம் மக்களுக்குத்தான்...மாக்களுக்கு அல்ல!