2016-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 தலையாயப் பிரச்னைகளைப் பற்றி பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...

சுவாதி, கெளசல்யா, நவீனா, சோனாலி, ஃபிரான்சினா, மோனிகா, சோனியா... என, 2016-ம் ஆண்டு பெண்களுக்கு ஓர் இருண்ட ஆண்டாகவே அமைந்தது. இதைச் சொல்லும்போதே ஊடாக ஒரு கேள்வி எதிரொலிக்கிறது. 2016-ம் ஆண்டு மட்டும்தானா? இந்த ஆணாதிக்கச் சமூகத்துக்கு இருக்கும் பெண் வெறுப்பு, கருவிலேயே விதைக்கப்படுவதாக இருக்கிறது? யாராக இருந்தாலும் மாத்திரை அளவுதான் மாறுபடுகிறது எனப் புரிந்துகொள்ள, எத்தனையோ நிகழ்வுகள் சுற்றிச் சுற்றி நடக்கின்றன.

பாதிக்கப்பட்ட பெண்ணைப் பலாத்காரம் செய்த குற்றவாளியோடு சேர்ந்து வாழப் பரிந்துரைக்கும் நீதிபதி, ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த சக்திவாய்ந்த ஒரு பெண்மணியை ‘ப்ராஸ்டிட்யூட்’ என இழிவுபடுத்தும் அரசியல்வாதி, இந்து இசத்தைக் காக்க இந்து பெண்கள் நான்கு பிள்ளைகளுக்குமேல் பெற்றுக்கொள்ள வேண்டும் என அழைப்புவிடுக்கும் அமைச்சர் என இந்திய நாட்டின் பொறுப்புமிக்கப் பதவிகளில் இருப்போரே பெண்களுக்கு எதிரான பிற்போக்குத்தனங்களை விதைத்து வளர்க்கும்போது, நாம் ஒருசில விடலைப் பையன்களை மட்டும் குற்றவாளிகளாக்கி, அவர்களாலேயே பெண்களுக்கு ஆபத்து நேர்வதாகப் புலம்புகிறோம்.

ஆணாதிக்கம் என்பது ஒரு நோய் என்றால், அந்த நோய்க்கு ஒட்டுமொத்த சமூகமும் ஆட்பட்டிருக்கிறது. ஆண்களைப்போலவே, பெண்களும் பெண் வெறுப்பைச் சுமக்கின்றனர். ஆண் குழந்தைதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என நினைப்பதில் தொடங்கி, வரதட்சணையின் பெயரால் மருமகளை வாழவிடாமல் செய்வது, பணியிடத்தில் பெண் தலைமையைப் புறக்கணிப்பது, பாதிக்கப்பட்டு நியாயம் தேடி வரும் பெண்களை மகளிர் காவல் நிலையங்கள் நடத்தும் விதம், உறவுச் சிக்கல்களில் பெண்ணை மட்டுமே குற்றம் சுமத்துவது என எல்லாமே அந்த வெறுப்பின் நீட்சிதான். தன் இனத்தைத் தானே வெறுக்கச் செய்ததுதான் சாதி/மத/ஆணாதிக்கக் கட்டமைப்பின் நயவஞ்சகச் சூழ்ச்சி. இந்தச் சூழ்ச்சிக்கு, படிப்பறிவு இல்லாத பெண்களைப் போலவே படித்த பெண்களும் ஆட்பட்டுள்ளனர் என்பது வேதனையிலும் வேதனை.

முன்னர் எல்லாம் வீட்டில் இருந்து குடும்பத்தைக் கவனித்துக்கொண்ட பெண்கள், இன்று பொருளீட்ட வேலைக்குச் செல்லும் அளவுக்கு காலமாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ஆனால், அவர்களின் குடும்பச் சுமையைப் பங்கிட்டுக்கொள்ள ஆண்கள் தயாராக இல்லை. வரதட்சணை வாங்காமல் எத்தனை பேர் திருமணம் செய்துகொள்கின்றனர்? கணவன்தான் என்றாலும் முடியாத/விரும்பாத பொழுதுகளில் பாலுறவை மறுக்கும் உரிமை எத்தனை பெண்களுக்குக் கிடைத்திருக்கிறது? கணவனால் பலாத்காரம் என்பது, இந்தியாவில் இன்றைய அளவிலும் சர்வசாதாரணம்.

இங்கே சாதிப்புனிதமும் மதப்புனிதமும் பெண்களை அடிமைப்படுத்துவதன் மூலமே கட்டிக்காக்கப்படுகின்றன. பெற்ற மகளா... சாதியா என வரும்போது, சாதியைத் தேர்ந்தெடுத்து மகள் பலிகொடுக்கப்படுகிறாள். இதைப் பேசாமல், இந்த அநீதியை எதிர்க்காமல் இங்கே ஆண்/பெண் நல்லிணக்கம் வரவே வராது.

நிர்பயாவுக்காகச் சட்டம் இயற்றப்பட்டது. பாலியல் வன்முறைகள் அதோடு முடிந்தனவா என்ன? வகை வகையான சட்டங்களாலும் கொடூரமான தண்டனைகளாலும் குற்றங்களைத் தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை நாம் இனியேனும் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு சமூகத்தில் குற்றங்கள் அதிகம் நிகழ்கின்றன எனில், அது தீராத நோய்களுக்கு ஆட்பட்டிருப்பதாகவே அர்த்தம். அந்த நோயின் மூலத்தைக் கண்டறிவதுதான் முன்னேறிய சமூகத்துக்கான முதன்மை வேலை. இந்த மண்ணை, சமத்துவம் நிறைந்ததாகப் பண்படுத்த வேண்டும். காதலித்ததற்காக, காதலில் தோற்றதற்காக எல்லாம் கொலை நடக்கிறது என்றால், நம் நிலை மிக மோசமாக இருக்கிறது என்றே அர்த்தம். மத/சாதி/ஆணாதிக்க அடிப்படைவாதங்களைச் சரிசெய்யாமல், கறுப்புப் பண ஒழிப்பைப்போல என்ன புரட்சிகளை நிகழ்த்தினாலும் அது முன்னேற்றம் தராது!