2016-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 தலையாயப் பிரச்னைகளைப் பற்றி பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...

பெருநட்டத்தின் தோற்றுவாய்!

2016-ம் ஆண்டின் தமிழ்நாடு அரசியல் களத்தின் ஆகப்பெரிய பேசுபொருள், தே.மு.தி.க. அரசியலின் அரிச்சுவடியைக் கரைத்துக் குடித்தவர்கள் எல்லாம் `கேப்டனோடு’ கூட்டணிக்குக் காத்துக்கிடந்தார்கள். ஆனால், இன்று அந்தக் காட்சிகள் எல்லாம் கரைந்தோடிவிட்டன. இவ்வளவு ஏன், அந்தக் கட்சியே பேசாப்பொருளாக மாறியிருக்கிறது.

திரைத் துறையில் கிடைத்த பிரபலத்தை, தேர்தல் அரசியலுக்குப் பயன்படுத்தும் விருப்பம் எல்லோரையும்போல விஜயகாந்த்துக்கும் இருந்தது. அரசியல்வாதியாகப் பரிணமிக்கத் தேவையான ஒவ்வொன்றையும் கவனமாகச் செய்தார். 2005-ம் ஆண்டு தே.மு.தி.க-வைத் தொடங்கி, தி.மு.க – அ.தி.மு.க-வுக்கு மாற்றாக முன்னிறுத்தினார். அதுதான் தே.மு.தி.க-வின் அரசியல் மூலதனம். அதைக்கொண்டே 2006-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டது தே.மு.தி.க.

அ.தி.மு.க-வையும் தி.மு.க-வையும் கடுமையாக விமர்சித்து, ஊழல் ஒழிப்பு வாக்குறுதியைக் கொடுத்து அவர் செய்த தேர்தல் பிரசாரம், 8.5 சதவிகித வாக்குகளைப் பெற்றுக்கொடுத்தது; விஜயகாந்த்தைச் சட்டமன்றத்துக்கு அனுப்பியும் வைத்தது.

2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டு, 10 சதவிகித வாக்குகளைப் பெற்றதோடு, வெற்றிகளை அ.தி.மு.க-வுக்கும் தி.மு.க-வுக்கும் இடையே மடைமாற்றம்செய்து மிகப்பெரிய Spoiler Politics செய்திருந்தது தே.மு.தி.க. இது பிரதானக் கட்சிகளை எல்லாம் பதற்றம்கொள்ளச் செய்தது.

2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க-வைக் கூட்டணியில் சேர்த்துக்கொண்ட அ.தி.மு.க-வுக்கு கைமேல் பலன். 29 இடங்களைக் கைப்பற்றியது தே.மு.தி.க. முக்கியமாக, தி.மு.க-வைவிட அதிக இடங்களைப் பிடித்து பிரதான எதிர்க்கட்சி ஆனது. ஒரே ஒரு நெருடல், தே.மு.தி.க-வின் வாக்குவங்கி 8 சதவிகிதமாகக் குறைந்ததுதான்.

உண்மையில், தே.மு.தி.க-வின் வாக்குகள் தமிழ்நாடு முழுக்க விரவியிருப்பவை. ஆனால், எந்த ஒரு தனித்த தொகுதியிலும் வெற்றிபெறும் அளவுக்கு இல்லை. உண்மையில், இது தே.மு.தி.க-வின் பலவீனமே. ஆனால், அதையே தன் பலமாக தே.மு.தி.க நினைத்தது. இதைவிட, தி.மு.க போன்ற இதரக் கட்சிகளும் அப்படி நினைத்ததுதான் வியப்புக்கு உரியது. அதுவே 2016-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் தே.மு.தி.க-வை மையமாக்கிச் சுழன்றதன் பின்னணி.

`தி.மு.க பேரம் பேசுகிறது’, `பா.ஜ.க-வுடன் இணைகிறார்’ எனச் செய்திகள் வெளியான நிலையில் மக்கள் நலக் கூட்டணியுடன் தொகுதி உடன்பாடு செய்துகொண்டு தேர்தலைச் சந்தித்தது தே.மு.தி.க. எனினும், தேர்தல் முடிவில் தே.மு.தி.க-வுக்குப் படுதோல்வி. விஜயகாந்த்தே தோற்றுப்போனார். கட்சியின் வாக்கு சதவிகிதமும் இரண்டரைக்குள் சுருங்கியது.

மாற்றுச்சக்தி, ஒற்றை எம்.எல்.ஏ கட்சி, தீர்மானிக்கும் சக்தி, பிரதான எதிர்க்கட்சி எனப் படிப்படியாக வளர்ந்துவந்த தே.மு.தி.க., படிப்படியாகவே வீழ்ச்சியைச் சந்தித்தது. ம.ந.கூ-வுடனான உறவைத் துண்டித்துவிட்டு மூன்று தொகுதிகளில் சந்தித்த இடைத்தேர்தலிலும் தே.மு.தி.க-வுக்குத் தோல்வியே. ஆக, தே.மு.தி.க-வின் மெய்யான பலம் வெளிப்படையாகியிருக்கிறது.

இந்தத் தலைகீழ் மாற்றத்துக்கு விஜயகாந்த்தின் ஆளுமைக் குறைவு, தவறான அரசியல் கணக்கீடு, தேர்தல் களத்தின் தட்பவெப்பம் உணராமை, மக்களின் நாடித் துடிப்பை அறியாமை, பலவீனமான கூட்டணி, பலமான எதிர் அணி என்பதை எல்லாம் தாண்டிய முக்கியமான காரணம் ஒன்று துலக்கமாகத் தெரிகிறது. அது, பேர அரசியல். பெருநட்டத்தின் தோற்றுவாய் அதுதான். விஜயகாந்தின் கண்களுக்கு அது புலப்படுகிறதா என்பதில்தான் தே.மு.தி.க-வின் எதிர்காலம் உறைந்திருக்கிறது!