Published:Updated:

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஏப்ரலில் மின் உற்பத்தி- நாராயணசாமி தகவல்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஏப்ரலில் மின் உற்பத்தி- நாராயணசாமி தகவல்
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஏப்ரலில் மின் உற்பத்தி- நாராயணசாமி தகவல்
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஏப்ரலில் மின் உற்பத்தி- நாராயணசாமி தகவல்

புதுடெல்லி: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஏப்ரல் மாதம் மின் உற்பத்தி தொடங்கும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி எப்போது தொடங்கும் என்று தமிழக எம்.பி.க்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வி.நாராயணசாமி எழுத்து மூலமாக அளித்த பதில்:

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 1வது மற்றும் 2வது அணு உலைகளில் மின்சார உற்பத்தி தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. அதன்படி முதலாவது அணு உலையில் ஏப்ரல் மாதமும், 2வது அணு உலையில் அக்டோபர் மாதமும் மின்சார உற்பத்தி தொடங்கும்.

##~~##
2 அணு உலைகளில் இருந்தும் மொத்தம் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதில் 925 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டுக்கும், 266 மெகாவாட் மின்சாரம் கேரளாவுக்கும், 442 மெகாவாட் மின்சாரம் கர்நாடக மாநிலத்துக்கும், 67 மெகாவாட் மின்சாரம் புதுச்சேரி மாநிலத்துக்கும் வழங்கப்படும்.
தமிழகத்துக்கு கூடுதலாக 100 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்க மத்திய அரசு சம்மதித்துள்ளது.மீதம் உள்ள மின்சாரம் எதற்காவும் ஒதுக்கப்படவில்லை.
அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் கூடங்குளம் 1வது அணு உலையில் 2வது முறையாக வெப்பப்படுத்தலுக்கும், அனைத்து வகையிலும் முழுஅளவிலான சோதனை நடத்தவும் ஜனவரி 24ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. அதன்படி இந்திய அணுமின் சக்தி கழக பொறியாளர்கள் கடந்த 1½ மாதங்களாக அங்கு தங்கி இருந்து, அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய குழுவினர் முன்னிலையில் இந்த சோதனைகளை நடத்தி வருகிறார்கள்.
கடற்கரை பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள அனைத்து அணுமின் நிலையங்களும், நில நடுக்கம், சுனாமி, கடல் புயல், ராட்சத அலைகளின் சீற்றம், வெள்ளம், கடலில் திடீரென தண்ணீர் உள்வாங்குதல், கரைக்கு ஏறுதல் ஆகிய காரணங்களால் ஏற்படும் எந்த விளைவுகளாலும் பாதிக்கப்படாத வண்ணம் வடிவமைக்கப்பட்டு, கட்டப்பட்டு உள்ளன.
மேலும், கடற்கரையில் கட்டப்பட்டு உள்ள நீர் அலை தாங்கிகள், தடுப்பு சுவர்கள், தடுப்பு கரைகள் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள், மேற்கூறிய இயற்கை பேரிடர்களால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்து விடும்.இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒவ்வொரு கால கட்டத்திலும் முறையாக ஆய்வு செய்யவும், தேவைக்கு ஏற்ப மேலும் வலுப்படுத்தவும் வழிவகைகள் செய்யப்பட்டு உள்ளன என்று நாராயணசாமி கூறினார்.