Published:Updated:

டெசோ கருத்தரங்கில் குலாம் நபி ஆசாத்!

 டெசோ கருத்தரங்கில் குலாம் நபி ஆசாத்!
டெசோ கருத்தரங்கில் குலாம் நபி ஆசாத்!
 டெசோ கருத்தரங்கில் குலாம் நபி ஆசாத்!

 இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் விஷயத்தில் நாடாளுமன்றத்தில் விவாதம்  நடத்தக் கோரி நேற்று தமிழக எம்.பி க்கள் கோரிக்கை எழுப்பிய நிலையில், இன்று மாலை டெல்லியில் நடைபெற்ற டெசோ கருத்தரங்கில் காங்கிரஸ் சார்பில் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று மாலையில்,  'இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள்' என்ற தலைப்பில் டெசோ கருத்தரங்கம் நடைபெறறது.

டெசோ மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றி இந்தக் கருத்தரங்கில் விளக்கப்பட உள்ளது. இதில் கி. வீரமணி, திருமாவளவன், கனிமொழி, சுப.வீரபாண்டியன், உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும் இக்கருத்தரங்கில் தமிழக காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் குலாம் நபி ஆசாத் தலைமையில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், சுதர்சன நாச்சியப்பன், சித்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னதாக இன்றைய விவாதத்தில் தமிழக காங்கிரஸின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? என்று காங்கிரஸ் எம்.பி. என்.எஸ்.வி. சித்தனிடம் பேசினோம்.

''இலங்கை விவகாரத்தில் தமிழக காங்கிரஸிற்கு என்று தனிப்பட்ட நிலைப்பாடு எதுவும் கிடையாது. இலங்கையில் நடந்திருக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பது தான் காங்கிரஸின் நிலைப்பாடு. அதைத் தான் பிரதமரும் நேற்று அறிவித்திருக்கிறார். இந்தக் கருத்தை வலியுறுத்தும் விதமாகத்தான்  காங்கிரஸ் கட்சியும்  விவாதத்தில் கருத்துக்களை எடுத்து வைக்கும்" என்கிறார் சித்தன்.

 இன்றைய விவாதத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த கே.எஸ்.அழகிரிக்கு பேச வாய்ப்பளிக் கப்படும் என்று சொல்லப்படுகிறது. இதனிடையே டெசோ அமைப்பினர் டெல்லியில் நடத்தும்  கருத்தரங்கில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தமிழக விவகாரங்களுக்கான காங்கிரஸ் பொதுச் செயலாளருமான குலாம் நபி ஆசாத் தலைமையில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், சுதர்சன நாச்சியப்பன், என்.எஸ்.வி.சித்தன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

 டெசோ கருத்தரங்கில் குலாம் நபி ஆசாத்!

டெசோ கருத்தரங்கில் காங்கிரஸ் கட்சியின் பதிவு என்னவாக இருக்கும்? என்று  சுதர்சன நாச்சியப்பனிடம் கேட்டபோது, ''இலங்கையில் தமிர்களுக்கு சம அந்தஸ்தும் உரிமையும் வழங்கும் 13-வது சட்ட திருத்த மசோதாவில் உள்ள அம்சங்களை செயல்படுத்த வேண்டும் என்று இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்து வருகிறது. டெசோ மாநாட்டில் இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை விரிவாக எடுத்து வைப்போம்.

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்ட விஷயத்தை காங்கிரஸ் கட்சி சீரியஸாக பார்க்கிறது. இதில் யாரோடும் எந்த சமரசத்திற்கும் நாங்கள் தயாரில்லை என்பதை டெசோ மாநாட்டில் வலியுறுத்துவோம். இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து ஏதுமில்லை என்றாலும்,  தீர்மானத்தில் உள்ள அனைத்து அம்சங்களையும் முழுமையாக படித்துப் பார்த்து இறுதி வடிவம் இதுதான் என்று தெரிந்த பின்னரே, அதுபற்றி முடிவெடுக்க முடியும்..ஏனென்றால் அமெரிக்கா பல நேரங்களில் இதுபோன்ற தீர்மானங்களை கடைசி நேரத்தில் மாற்றங்களைச் செய்து குழப்பத்தை விளைவித்திருக்கிறது. அதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டி இருக்கிறது" என்று சொன்னார்.

 

- குள.சண்முகசுந்தரம்