Published:Updated:

“அறியாமையில் திணறுகிறது மோடி அரசு!”

“அறியாமையில் திணறுகிறது மோடி அரசு!”
பிரீமியம் ஸ்டோரி
“அறியாமையில் திணறுகிறது மோடி அரசு!”

ஜோ.ஸ்டாலின், அ.சையது அபுதாஹிர் , படங்கள்: தி.ஹரிஹரன்

“அறியாமையில் திணறுகிறது மோடி அரசு!”

ஜோ.ஸ்டாலின், அ.சையது அபுதாஹிர் , படங்கள்: தி.ஹரிஹரன்

Published:Updated:
“அறியாமையில் திணறுகிறது மோடி அரசு!”
பிரீமியம் ஸ்டோரி
“அறியாமையில் திணறுகிறது மோடி அரசு!”

ன் கருத்தை எல்லோருக்கும் புரியும்படி எளிய வார்த்தைகளில், தெளிவாக, நிதானமாக, அழகாக... ஆனால், ஆணித்தரமாகச் சொல்வதில் வல்லவர் ப.சிதம்பரம். மோடியின் பணமதிப்பு நீக்க அறிவிப்பு வெளியாகி 50 நாட்கள் நிறைவடைந்த நிலையில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தைச் சந்தித்தோம்.

“அறியாமையில் திணறுகிறது மோடி அரசு!”

“ `கறுப்புப் பணம், கள்ளப் பணம், லஞ்சப் பணம் ஆகிய மூன்றையும் ஒழிப்பதற்காகத்தான் இந்த நடவடிக்கை' என்கிற பிரதமர் மோடியின் விளக்கத்தை, நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?''

“கறுப்புப் பணத்தின் தன்மை, அதன் புழக்கத்தன்மை தெரியாமல் இவர்கள் பேசுகிறார்கள். புழங்காத பணம் எல்லாம் கறுப்புப் பணம் அல்ல.  இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவர், தன்னுடைய எதிர்காலத்துக் காகக்கூட தான் சம்பாதித்த பணத்தின் ஒரு பகுதியை தனது வீட்டில் சேமித்துவைத்​திருக்கலாம். அந்தப் பணம் புழங்காமல் வீட்டுக்குள் இருப்பதாலேயே, அது கறுப்புப் பணமாகிவிடாது.

விவசாயி கையில் இருக்கும் பணம் நல்ல பணம்; அறக்கட்டளைகளில் இருக்கும் பணம் நல்ல பணம்; கோயில் உண்டியலில் இருக்கும் பணம் நல்ல பணம்; மலைவாழ் மக்கள் கையில் இருக்கும் பணம் நல்ல பணம்; வடகிழக்கு மாநில மக்கள் கையில் இருக்கும் பணம் நல்ல பணம். இதை எல்லாம் கறுப்புப் பணம் எனச் சொல்வதே தவறு.

கறுப்புப் பணம் எது தெரியுமா? விவசாயி ஒருவர், விவசாயத்தில் ஈட்டிய நல்ல பணத்தை எடுத்துக்கொண்டு, ஒரு விஷயத்துக்காக வழக்குரைஞரிடம் செல்கிறார் என வைத்துக்கொள்ளுங்கள். வழக்குரைஞர், தனது சேவைக்காக அந்த விவசாயிடம் இருந்து 2,000 ரூபாய் கட்டணம் வாங்குகிறார். அந்தத் தொகைக்கு அவர் ரசீது தரவில்லை. ரசீது தராததால், அவர் கணக்கில் அந்த 2,000 ரூபாயைக் காட்டாமல் மறைக்கிறார். ஒரு விவசாயி கையில் இருந்த நல்ல பணம், இப்போது கறுப்புப் பணமாக வழக்குரைஞர் கையில் இருக்கிறது.

அந்த வழக்குரைஞர், ஓர் உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு 2,000 ரூபாய் கொடுக்கிறார். அதற்கு ஹோட்டல் தரப்பில் பில் கொடுக்கப்படுகிறது. இப்போது அந்தக் கறுப்புப் பணம் மீண்டும் வெள்ளைப் பணமாக மாறுகிறது. எனவேதான் கறுப்புப் பணம் என்பது, தேக்கி வைக்கப்படுவது அல்ல; சுழற்சியாகிக்கொண்டே இருப்பது. யார் கையில் பணம் இருக்கிறதோ, அதை வைத்துத்தான் அது கறுப்புப் பணமா... வெள்ளைப் பணமா என்பதை முடிவுசெய்ய வேண்டும். இந்த அடிப்படையே தெரியாமல், எல்லா பணமும் கறுப்புப் பணம் எனச் சொல்வது அபத்தம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பணமதிப்பு நீக்கத்தினால் கள்ளப் பணத்தைத் தடுக்க முடியாது. பழைய நோட்டுக்களை, கள்ள நோட்டாக அடிக்க முடியும்போது, புதிய நோட்டுக்களையும் கள்ளநோட்டுக்களாக அடிக்கலாம். அப்படி அடிப்பதற்கு ஆறு மாதங்களோ, ஓர் ஆண்டோ ஆகலாம். அரசுக்குக் கிடைத்த தொழில்நுட்பம், கள்ள நோட்டு அடிப்பவர்களுக்கும் கிடைக்கும். அதில் கொஞ்சம் காலதாமதம் வேண்டுமானால் ஏற்படலாம். ஆக, கள்ள நோட்டை ஒழிக்க, இது வழி அல்ல. அதற்கு வேறு உத்திகளைக் காண வேண்டும். கள்ள நோட்டுக்கள்தான் தீவிர​வாதத்துக்கும் துணை​போகின்றன எனச் சொல்ல முடியாது. காஷ்மீரில் சுடப்பட்ட இரண்டு தீவி​ரவாதிகள் புதிய 2,000 ரூபாய் நோட்டுக்கள்தான் வைத்திருந்தார்கள். தீவிரவாதிகள், கள்ள நோட்டுக்​களை மட்டும்  அல்ல... நல்ல  நோட்டுக்களையும் வைத்திருப்பார்கள்.''


``1,000, 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற நடவடிக்கையே தவறா அல்லது முன்னெச்சரிக்கை இல்லாமல் நடவடிக்கை எடுத்தது தவறா?''

``இந்த நடவடிக்கையை எந்த நோக்கத்துக்காக எடுத்தோம் எனச் சொல்கிறார்களோ அந்த நோக்கமே நிறைவேறாது என்பதால், இந்த நடவடிக்கையே தவறு எனச் சொல்கிறேன். இதுபோன்ற நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசின் `நேரடி வரி வருவாய் வாரியம்' ஆராய்ந்து, 2012-13 ஆண்டு அறிக்கையில் விவரம் தந்துள்ளது. `இதுபோன்ற நடவடிக்கையால், சாதகத்தைவிட பாதகமே அதிகம். இதனால், மக்களுக்குத் துன்பம்தான் ஏற்படும்'  எனச் சொல்லியுள்ளார்கள். இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் அவர்கள், `இந்த நடவடிக்கையால் பயன் கிடைக்காது. துன்பம்தான் வரும்' எனச் சொல்லியுள்ளார். இதை எல்லாம் மீறி இந்த நடவடிக்கையை எடுத்தால், இதை தவறு எனச் சொல்லாமல், வேறு எப்படிச் சொல்வது?''

``ஆனால், ஊழல்வாதிகள் 1,000, 500 ரூபாய் நோட்டுக்களாகத்தான் பணத்தைப் பதுக்கிவைத்துள்ளனர்.  அதை முடக்க, இது சரியான நடவடிக்கைதானே?''

``1,000, 500 ரூபாய் நோட்டுக்களாகப் பதுக்கியவர்கள், இனி 2,000 ரூபாய் புதிய நோட்டுக்களாகப் பதுக்குவார்கள். அவ்வளவுதான் வித்தியாசம். தமிழ்நாட்டின் முன்னாள் தலைமைச் செயலாளர், புதிய ரூபாய் நோட்டுக்களாகத்தானே வைத்திருந்தார். சென்னை விமானநிலையத்தில் சிக்கிய நைஜீரியா இளைஞரிடம் பிடிபட்ட 53 லட்சம் ரூபாயும் புது நோட்டுக்களாகத்தானே இருந்தது.

`லஞ்சம் இருக்காது' என்றார்கள். ஆனால், குஜராத்தில் இரண்டு இன்ஜினீயர்கள் புதிய 2,000 ரூபாய் நோட்டுக்களை லஞ்சமாக வாங்கித்தான் பிடிபட்டுள்ளார்கள். பழைய நோட்டில் வாங்கியவர்கள், இப்போது புதிய நோட்டில் வாங்குகிறார்கள். எனவே, லஞ்சத்தை ஒழிக்கவும் கறுப்புப் பணத்தை ஒழிக்கவும் பணமதிப்பு நீக்கம் மட்டுமே வழி அல்ல.''

``நீங்கள் சொல்வதைப் பார்த்தால், கறுப்புப் பண ஒழிப்பே சாத்தியம் இல்லை என்பதுபோல் உள்ளதே?''


``கறுப்புப் பணத்தை நிச்சயம் ஒழிக்கலாம். எப்படி என்றால், வரி ஏய்ப்பைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வரி ஏய்ப்பு செய்யப்படும் பணம்தான் `கறுப்புப் பணம்'. அப்படிப்பட்ட வரி ஏய்ப்பைத் தடுக்க, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு நடவடிக்கை எடுத்தது. அதற்கு முந்தைய அரசும் நடவடிக்கைகள் எடுத்தது. அந்த நடவடிக்கைகளை இந்த அரசு தொடர்ந்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, பணமதிப்பு நீக்கம் மட்டும் செய்வது, அதற்கு சரியான தீர்வாக அமையாது.''

“அறியாமையில் திணறுகிறது மோடி அரசு!”

``நீங்கள் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, கறுப்புப் பணத்தை ஒழிக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?''

``நிறைய நடவடிக்கைகள் எடுத்தேன். பெரிய அளவு பணப் பரிமாற்றங்களை அரசுக்கு அறிவிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டுவந்தோம். `வங்கியில் இருந்து ஒரே நாளில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் எடுத்தாலோ, வங்கிக்கணக்கில் வரவு வைத்தாலோ, அதற்கு வரி கட்ட வேண்டும்' என்ற சட்டம் கொண்டுவந்தேன். அந்த வரி, சிறிய வரி. அதனால் வங்கியில் இருந்து பெரும் அளவு ரொக்கம் எடுப்பது, வரவு வைப்பது குறைந்தது. அந்தச் சட்டம், மூன்று ஆண்டுகள் இருந்தது. அப்போது, அதை மற்றவர்கள் எதிர்த்தார்கள்; எங்கள் கட்சியிலும் சிலர் எதிர்த்தார்கள். பா.ஜ.க மிகக் கடுமையாக எதிர்த்தது. பிறகு, அதை கைவிட்டுவிட்டோம். இப்போது அந்தச் சட்டத்தை இந்த அரசு மீண்டும் கொண்டுவர உள்ளதாம்.

நாங்கள் கொண்டுவந்த அந்தச் சட்டங்களால், வரி ஏய்ப்பு குறைந்தது; வரி கட்டுவது அதிகரித்தது. நான் 2004-ம் ஆண்டில் மத்திய நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றபோது, 2¾ கோடிப் பேர்தான் வரி கட்டினார்கள். இப்போது 3¾ கோடிப் பேர் வரி கட்டுகிறார்கள். புதியவர்கள் அதிகமாக வரி செலுத்தத் தொடங்கினார்கள். பெங்களூரில், உலகத்திலேயே மிகப்பெரிய, நவீன வருமான வரி பரிசீலனை மையத்தைத் தொடங்கி, பல நடவடிக்கை​களை எடுத்தோம். இந்த அரசும் அதே பாதையில் தொடர்ந்து சென்றிருக்க வேண்டும்.''

`` ‘பண மதிப்பு இழப்பு’ நடவடிக்கையில், மத்திய அரசு இவ்வளவு பிடிவாதமாக இருக்கக் காரணம் என்ன?''

``அறியாமைதான். இந்த நடவடிக்கையை அமல் செய்யவேண்டிய மூத்த அதிகாரிகள் மூன்று பேர். ஒருவர் நிதித்துறைச் செயலாளர், இரண்டாமவர் வங்கித் துறைச் செயலாளர்,  மூன்றாமவர் அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர். ஆனால், இவர்கள் மூவரும் இதுவரை இந்த நடவடிக்கை குறித்து வாய் திறக்கவில்லை. அரசின் மூன்று மூத்த அதிகாரிகள் இதுவரை இதுபற்றி பேசவே இல்லை என்றால், அவர்களுக்குச் சம்மதம் இல்லை; அவர்களை ஆலோசிக்கவில்லை என்றுதானே அர்த்தம். இந்த விவகாரம் குறித்து பேசியது வருவாய்த் துறைச் செயலாளர் மட்டும்தான். அவரும் இப்போது பேசுவதை நிறுத்திவிட்டார். மோடி அரசு அறியாமையால் திணறுகிறது.''

``பணம் இல்லா வர்த்தகம் என மோடி வலியுறுத்துவது, கார்ப்பரேட் பெருநிறுவனங்களுக்குச் சாதகமான நடவடிக்கை எனச் சொல்லப்படுகிறதே?''

``அவர்களுக்காக இந்த முடிவைக் கொண்டுவந்துள்ளார்கள் எனச் சொல்ல முடியாது. ஆனால், இந்த முடிவால் அவர்களுக்குப் பெரிதும் பலன் உண்டு. நான் 100 ரூபாய் கொடுத்து ஒரு பொருளை வாங்கும்போது, அந்த 100 ரூபாயின் மதிப்பு என்னிடம் இருந்ததுபோல அதை வாங்கியவரிடமும் இருக்கும். ஆனால், மின்னணு மூலம் பரிவர்த்தனை செய்தால், 100 ரூபாய் பொருளை வாங்க வேண்டும் என்றால், நாம் 102 ரூபாய் செலுத்தவேண்டியதாகிறது. பொருளை விற்றவருக்கு 100 ரூபாய்தான் செல்லும். பொருளை வாங்கிய நமக்கும் 100 ரூபாய் மதிப்புள்ள பொருள்தான் கிடைக்கும். 2 ரூபாய் பணப்பரிவர்த்தனை செய்யும் நிறுவனத்துக்குப் போய்விடும். இதில் பொருள் வாங்குபவருக்கு 2 ரூபாய் நஷ்டம். ரூபாய்த் தாள், ஒரு நாளில் 10 பேரிடம் கை மாறினாலும் அந்த ரூபாயின் மதிப்புக் குறையாது. இதே 10 மாற்றங்கள் மின்னணு மூலம் நடந்தால், 20 ரூபாய் பேடிஎம் போன்ற நிறுவனங்களுக்கு லாபம். என்னைப் பொறுத்தவரை, சில்லறை வர்த்தகத்தில் மின்னணுப் பணமாற்றம் தேவை இல்லை. ஜெர்மனியில் 80 சதவிகிதப் பணப் பரிமாற்றம் ரொக்கமாகத்தான் நடக்கிறது. அமெரிக்காவில் 46 சதவிகிதப் பணப் பரிமாற்றம் ரொக்கமாகத்தான் நடக்கிறது. இந்தியாவில் மூன்று சதவிகிதப் பணப் பரிமாற்றம் மட்டும் மின்னணுவில் நடைபெறுகிறது. அதை அதிகரிக்கலாமே தவிர, முற்றிலும் ஒழிக்க முடியாது. சில்லறை வர்த்தகம் ரொக்கமாகவே நடைபெறலாம்.''

“அறியாமையில் திணறுகிறது மோடி அரசு!”

``பணமதிப்பு இழப்பு அறிவிப்பால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதா?''

``அரை சதவிகிதம், ஒரு சதவிகிதம், ஒன்றரை சதவிகிதம், நான்கு சதவிகிதம் பாதிப்பு என, நான்குவிதமான கணிப்புகள் இருக்கின்றன. `இரண்டு சதவிகிதம் பாதிப்பு' என மன்மோகன் சிங் சொல்லியுள்ளார். என்னுடைய அனுமானம் ஒன்றரை சதவிகிதம் பாதிப்பு இருக்கலாம்.''

``மோடி அரசின் நிதித்துறைச் செயல்பாடு எப்படி உள்ளது?''

``நிதித்துறை எங்கே செயல்படுகிறது? நிதித்​துறைச் செயலாளர், வங்கித் துறைச் செயலாளர் யாரும் வாய் திறப்பது இல்லை. நிதி அமைச்சருக்கே இப்படி ஓர் அறிவிப்பு வரப்போகிறது என்று எப்போது தெரியும் என்ற கேள்வி இன்னும் மிச்சம் உள்ளது.

பிரதமர் அலுவலகத்தில்​தான் அனைத்து அதிகாரங்​களும் குவிக்கப்பட்டுள்ளன. அனைத்து முடிவுகளையும் மோடியே எடுக்கிறார். அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றால், கூட்டம் குறித்த ‘மினிட்’ அனைவருக்கும் கொடுக்கப்​பட்டு அதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும். நவம்பர் 8-ம் தேதி மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் மினிட்டை இதுவரை வெளியிடவில்லை. நானும் பலமுறை கேட்டுவிட்டேன். அதற்கு பதில் இல்லை. அந்த மினிட்டில், 86 சதவிகித நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிப்பது குறித்துச் சொல்லப்பட்டுள்ளதா? நமது அச்சடிக்கும் திறன் மாதம் 300 கோடி ரூபாய் நோட்டுக்கள்தான் என்ற விவரங்கள் உள்ளனவா? ஏ.டி.எம்-ல் இப்போது புதுப் பணத்தை வைக்க முடியாது என்று விவாதிக்கப்பட்டதா? இது எதுவுமே அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை!''

``தமிழ்நாடு தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் நடைபெற்ற சோதனையில் என்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்ற விவரங்கள், இதுவரை வெளியிடப்படவில்லையே?''

``சோதனையில் கைப்பற்றப்பட்ட அனைத்தையும் ஆவணமாகக் கருத முடியாது. அதை ஆய்வுசெய்த பிறகுதான், அது ஆவணமா... இல்லையா என்பதை முடிவுசெய்து வெளியிட முடியும். அதுதான் முறை. ஆனால், ராம மோகன ராவ் வீட்டில் கிடைத்த பணம், பணமதிப்பு  நீக்க அறிவிப்புக்குப் பிறகு கிடைத்த புதிய பணம் என்பது அம்பலமாகியுள்ளது. கறுப்புப் பணம், லஞ்சப் பணம் புதிய நோட்டிலும் இருக்கும் என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.''

`` ஜெயலலிதாவின் மறைவால் தமிழ்நாடு அரசியலில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?''


``வெற்றிடம் ஏற்பட்டதாகக் கருத முடியாது. தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாக அ.தி.மு.க அரசு உள்ளது. அந்தக் கட்சியின் தலைவர் மறைந்துவிட்டார்; கட்சி இருக்கிறது. அந்தக் கட்சி, முதலமைச்சராக ஒருவரைத் தேர்ந்தெடுத்துள்ளது. `இந்த அரசு, முதலமைச்சரின் கீழ் கட்டுக்கோப்பாக நடக்குமா?' என்பதுதான் இப்போதைய கேள்வி. ''

``தமிழக அரசில் பா.ஜ.க கொல்லைப்புறமாக நுழைய முயற்சிக்கிறது என்கிற பேச்சுக்கள் பரவுகின்றனவே?''

``உண்மையிலேயே பா.ஜ.க-வுக்கு அந்த ஆசை இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் எந்த வழியிலும் அது நுழைய முடியாது. அந்தக் கட்சிக்கு, வடநாட்டுக் கட்சி, மேட்டுக்குடிக் கட்சி, மதவாதக் கட்சி போன்ற பல பெயர்கள் உள்ளன. இவற்றை வைத்துக்கொண்டு அவர்களால் தமிழ்நாட்டுக்குள் நுழையவே முடியாது.''

``மதவாதம் என்ற ஒன்றைத் தவிர, இவை அனைத்தும் காங்கிரஸ் கட்சிக்கும் பொருந்தும்தானே?''

``காங்கிரஸ் கட்சி, மேட்டுக்குடிக் கட்சி அல்ல; அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஆதரவான கட்சி. நாங்கள் தலித், சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என, யாரும் சொல்ல முடியாது. காங்கிரஸ் கட்சிக்கு பா.ஜ.க-வின் அடையாளங்களைப் பொருத்த முடியாது. புதிய 2,000 ரூபாய் நோட்டில்கூட தேவநாகரி எண்களைப் போட்டு இந்தியைத் திணிக்கிறார்கள். அதை எதிர்த்து நாங்கள் வழக்கு போட்டுள்ளோம்.''

``திராவிடக் கட்சியில் இருந்து வந்து, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக உள்ள திருநாவுக்கரசரின் செயல்பாடு எப்படி உள்ளது?''

``திராவிடக் கட்சியில் இருந்து வந்தாலும், காங்கிரஸ் கட்சியின் கொள்கையை ஏற்றுக்கொண்டுதான் அவர் இந்தக் கட்சியில் உள்ளார். இப்போதுதான் செயல்பட ஆரம்பித்துள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism