அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் உடைகளில் தங்களுக்கென ஒரு பாணி வைத்துக்கொள்வது பொதுவான வழக்கம். கருணாநிதிக்கு மஞ்சள் துண்டு, ஜெயலலிதாவுக்கு பச்சைப் புடவை, எம்.ஜி.ஆருக்கு தொப்பி... தற்போது, அரசியலில் அடியெடுத்துவைக்கும் சசிகலாவும் அப்படி ஓர் அடையாளத்தோடு வந்திருக்கிறார்.

அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் கடந்த டிசம்பர் 29-ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. அதில், அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டார். தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சான்றிதழை சசிகலாவிடம் கொடுப்பதற்காக போயஸ் தோட்டம் சென்றார், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அப்போதுதான் சசிகலாவின் உடையில் அந்த மாற்றங்கள் தெரிந்தன.

கழுத்து மூடப்பட்ட, முக்கால் அளவுக்கு கைகள் மூடப்பட்ட ரவிக்கை அணிய ஆரம்பித்துள்ளார். இரட்டை இலையை ஞாபகப்படுத்தும் வெளிர்பச்சை நிறப் புடவை. வட்டமான குங்குமப் பொட்டு... அதற்கு மேலே செந்தூரக் கீற்று.திடீரென அவருடைய உடையணியும் பாங்கு ஒரே நாளில் இப்படி மாறிப்போனது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘ஜெயலலிதாவைப் பார்ப்பது போல இருக்கிறது’ என்று எல்லோரும் தன்னை அடையாளப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலேயே அவர் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

மாற்றம் உடையில் மட்டுமா சின்ன மேடம்?

- நந்தினி சுப்பிரமணி
படங்கள்: சு.குமரேசன்