ஜெயலலிதா மறைந்த சில தினங்களிலே ‘அம்மா தி.மு.க’ என்ற கட்சியைத் துவக்கி அதிரடி காட்டியுள்ளார் இனியன் சம்பத். திராவிடக் கட்சிகளின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக இருந்த ஈ.வே.கே.சம்பத்தின் இளைய மகனும், இளங்கோவனின் தம்பியுமான இனியன் சம்பத்திடம் ‘அம்மா தி.மு.க’ கட்சி குறித்து சில கேள்விகள்.

‘` ‘அம்மா தி.மு.க’ கட்சி ஆரம்பித்தது எதற்காக?”

‘`அ.தி.மு.கவில் ஆறு மாதத் திற்கு முன்புதான் சேர்ந்தேன். என் அம்மா சுலோச்சனா சம்பத் கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். அவருடைய மறைவிற்கு அம்மா அவர்கள் நேரடியாக வந்து ஆறுதல் சொல்லியபோது, எனக்கு அவர் மீது தனி மரியாதை ஏற்பட்டது. அம்மாவின் தமிழீழக் கொள்கைகள் என்னை பிரமிக்கச் செய்தது. அ.தி.மு.க-விற்குப் போட்டியாக இந்தக் கட்சியை ஆரம்பிக்கவில்லை. அம்மா இறந்த பிறகு அந்தக் கட்சியில் அடிமட்டத் தொண்டர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இராணுவக் கட்டுப்பாட்டுடன் கட்சியை நடத்திய அம்மாவின் திடீர் மரணம், சாதாரணத் தொண்டர்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. அந்தத் தொண்டர்கள் வேறு கட்சிக்குச் செல்லக்கூடாது என்றுதான், ‘அம்மா. தி.மு.க’வைத் தொடங்கியிருக்கிறேன்.''

‘`அ.தி.மு.க-வில் இருந்து உங்களுக்கு எத்தனை பேர் ஆதரவு கொடுத்துள்ளார்கள்?’’

‘`நான் அ.தி.மு.க-வில் எந்தப் பொறுப்பிலும் இல்லை. அவர்கள் வந்து சேருவதற்கான முயற்சிகளை நான் முன்னெடுக்கிறேன்.''

‘`கட்சியில் இதுவரை எத்தனை பேர் உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளார்கள்?’’

‘`இப்போதுதான் கட்சியைக் கட்டமைத்துள்ளேன். எம்.ஜி.ஆர் அவர்களின் நுாற்றாண்டு நிறைவு விழா நாளான ஜனவரி 17ம் தேதி அன்று மாநில நிர்வாகிகளும், சில மாவட்ட நிர்வாகிகளும் அறிவிக்கப்படுவார்கள். இப்போது மூன்று மாவட்டத்தில் இருந்து கட்சியை உருவாக்குவதற்கு அ.தி.மு.க தொண்டர்கள் முன்வந்துள்ளார்கள்.''

‘` ‘அம்மா தி.மு.க’வின் கொள்கைகள் என்ன?’’

‘` அம்மாவின் கொள்கைகள்தான். திராவிட இயக்கத்தின் கொள்கையில் இருந்து, மாறுபடாதவர் அம்மா. தமிழர் உரிமையிலும், தமிழர் நலனிலும் அம்மா அவர்கள் எப்படி உறுதியோடு இருந்தார்களோ, அந்தக் கொள்கைகளைத்தான் எங்கள் கட்சியின் கொள்கைகளாக வைத்துள்ளோம்.’’

‘`கட்சியின் கொடி, அலுவலகம் ரெடி ஆகிவிட்டதா?’’

‘`கொடி தயாராகி உள்ளது. அலுவலகம் ரெடியாகிவிட்டது. எனது வீட்டின் கீழ்த்தளத்தில் அலுவலகம், உள்ளது.''

``அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வாகி இருப்பது பற்றி?’’

‘`இனிமேல் அந்தக் கட்சியைப் பற்றி நான் பேசுவது நாகரிகமாக இருக்காது.’’

‘`நீ்ங்கள் கட்சி ஆரம்பித்தற்கு உங்கள் அண்ணன் இளங்கோவன் என்ன சொன்னார்?’’

‘`அவருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதாவது, அரசியல் தொடர்பும் இல்லை, குடும்பத் தொடர்பும் இல்லை.''

‘`நீங்கள் இதுவரை எத்தனை கட்சியில் இருந்துள்ளீர்கள்?’’

‘`காங்கிரஸ் கட்சியில் இருந்தேன். தமிழீழக் கொள்கைகளில் அவர்கள் போக்கு பிடிக்காமல், தமிழ் தேசிய கட்சியைத் துவக்கினேன். பிறகு அ.தி.மு.க-வில் சேர்ந்தேன். இப்போது ‘அம்மா தி.மு.க’ கட்சியைத் துவக்கியுள்ளேன்.’’

- அ.சையது அபுதாஹிர்