மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 8 - வஞ்சிக்கப்பட்ட வலம்புரி ஜான்!

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 8 - வஞ்சிக்கப்பட்ட வலம்புரி ஜான்!
பிரீமியம் ஸ்டோரி
News
மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 8 - வஞ்சிக்கப்பட்ட வலம்புரி ஜான்!

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 8 - வஞ்சிக்கப்பட்ட வலம்புரி ஜான்!

லம்புரி ஜான், எம்.ஜி.ஆருக்கு மிக நெருக்கமாக இருந்தார். ‘‘அம்முவுக்குத் தேவையான உதவிகளை செய்து கொடுங்கள்’’ என்று சொன்னதால் ஜெயலலிதாவுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொண்டிருந்தார் வலம்புரி ஜான். ஆங்கிலத்தில் புலமை, எழுத்தாற்றல், பேச்சாற்றல் எனப் பன்முகத் திறமை கொண்டவர் வலம்புரி ஜான். தி.மு.க, ‘குங்குமம்’ பத்திரிகையை நடத்திக் கொண்டிருந்தபோது அதற்குப் போட்டியாக ‘தாய்’ பத்திரிகையை நடத்தினார் எம்.ஜி.ஆர். அவரின் வளர்ப்பு மகன் அப்பு என்கிற ரவீந்திரன் பொறுப்பில் ‘தாய்’ வெளிவந்து கொண்டிருந்தது. அதன் ஆசிரியராக இருந்தார் வலம்புரி ஜான்.

‘தாய்’ பொங்கல் மலரில் எம்.ஜி.ஆரும் ஜானகி அம்மாளும் சேர்ந்திருக்கும் பழைய சினிமா ஸ்டில் ஒன்று அட்டைப் படமாக வெளியானது. இதைப் போடச் சொன்னவர் அப்பு. உடனே வலம்புரி ஜானுக்கு ஜெயலலிதாவிடம் இருந்து ஓலை. அந்தப் படத்தைப் போட்டதற்காக அவரிடம் சண்டை போட்டார். ‘‘அப்புதான் தாயின் பதிப்பாளர். அவர் சொன்னதை நான் மறுக்க முடியாது’’ என வலம்புரி ஜான் விளக்கம் கொடுத்திருக்கிறார். ஜானகி அம்மாளுடன் எம்.ஜி.ஆர் ஏேதா சண்டை போட்டிருக்கிறார். அதனால், சில நாட்கள் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லை. அவர்களை சமாதானம் செய்வதற்காக நிகழ்ந்த ஏற்பாடுதான் இது.

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 8 - வஞ்சிக்கப்பட்ட வலம்புரி ஜான்!

அப்போது அமைச்சராத இருந்த ஆர்.எம்.வீரப்பன், வலம்புரி ஜானுக்கு மிகவும் பழக்கம். ‘‘ஜெயலலிதா, இந்த அளவு உங்கள் மீது கோபப்படுவதற்கு காரணம் யார் என்பது போகப் போக உங்களுக்குத் தெரிய வரும்’’ என பொடி வைத்திருக்கிறார் ஆர்.எம்.வீரப்பன்.

ஜெயலலிதாவின் கோபத்திலிருந்து தப்பிக்க நினைத்த வலம்புரி ஜான், நூலகத்தில் புத்தகத்தைப் புரட்டுவது போன்ற படத்தை ஜெயலலிதாவிடம் வாங்கி ‘தாய்’ பத்திரிகையில் போட்டார். என்ன நேரமோ, அந்தப் படம் அச்சில் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை. சில நாட்கள் கழித்து வலம்புரி ஜானிடம் பேசிய

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 8 - வஞ்சிக்கப்பட்ட வலம்புரி ஜான்!

ஆர்.எம்.வீரப்பன்,  ‘‘எம்.ஜி.ஆர் - ஜானகி அம்மாள் படம் போட்டதற்காக ஜெயலலிதாவிடம் கோள்மூட்டியவர்களை கண்டுபிடித்து விட்டீர்களா? இப்போது ஜெயலலிதாவின் படத்தை ஒழுங்காகப் பிரசுரிக்க வில்லை என உங்களுக்கு எதிராக வேட்டு வைக்கப்படுகிறது. அதாவது தெரியுமா?’’ எனச் சொல்லிவிட்டு ‘‘சசிகலா - நடராஜன் இருவரும்தான்’’ எனச் சொன்னார். இதைக் குறிப்பிடும் வலம்புரி ஜான், ‘‘பல சந்தர்ப்பங்களில் ஜெயலலிதா வெறும் அம்பாகத்தான் பயன்பட்டிருக்கிறார். அவரைப் பயன்படுத்தி பழிதீர்த்துக் கொண்டவர் நடராஜன்தான்’’ என எழுதியிருக்கிறார்.

இப்படித்தான் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு வந்தனர்.  போயஸ் கார்டன் வீட்டில் இருந்தவர்களை வெளியேற்றுகிற வேலையை சசிகலாவும், அரசியலில் இருந்தவர்களை முடக்கும் பணியை நடராஜனும் செய்தார்கள்.

ஜெயலலிதா ஒரு முறை அமெரிக்கா போனார். வெளிநாடு போவதாக இருந்தால் ‘எதற்காகப் போகிறேன்’ என்கிற தகவலை வருமான வரித் துறையிடம் தெரிவிக்க வேண்டும். ‘சிகிச்சைக்காகப் போகிறேன்’ என ஜெயலலிதா கடிதம் கொடுத்திருந்தார். இதை வைத்து ‘முரசொலி’யில் ஜெ. உடல்நிலைப்பற்றி கட்டுரை வெளியானது. அந்தக் கட்டுரையை பொய்யாக்கும் வேலைகள் நடந்தன. வருமான வரித் துறை அதிகாரி ஒருவர், ஃபைலில் இருந்து `சிகிச்சைக்காகச் செல்கிறேன்’ என இருந்த அந்தக் கடிதத்தை எடுத்து ஜெயலலிதாவிடம் கொடுத்தார். ‘வருமான வரித்துறை அதிகாரியே இதை தன்னிச்சையாக செய்திருக்க முடியாது. இதற்கு ஏதோ பின்னணி இருக்கிறது’ என எம்.ஜி.ஆர் சந்தேகப்பட்டார். ஜெயலலிதாவை உளவு பார்க்க அனுப்பப்பட்ட சசிகலாவிடமே இதைக் கேட்டார். ‘‘கடிதத்தை எடுக்கச் சொன்னது ஜெயலலிதாதான்’’ என்றார் சசிகலா. சில நாட்கள் கழித்து வலம்புரி ஜானை அழைத்து, ‘‘வருமான வரித் துறை கடிதத்தை நான்தான் எடுக்கச் சொன்னேன் என எம்.ஜி.ஆரிடம் ஏன் சொன்னீர்கள்?’’ எனக் கேட்டிருக்கிறார் ஜெயலலிதா. இந்த விவகாரமே வலம்புரி ஜானுக்கு தெரியாது. இந்தப் பழியைத் தூக்கிப்போட்டது சசிகலாதான் என பிறகு தெரிந்துகொண்டார்.

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 8 - வஞ்சிக்கப்பட்ட வலம்புரி ஜான்!

‘‘நடராஜனின் பிடியில் இருந்து தப்புவதற்கு ஜெயலலிதா பலமுறை முயற்சி செய்தார். ஆனால், ஒவ்வொரு முயற்சிக்குப் பிறகும் நடராஜனின் பிடியே இறுகியது. ‘ஜெயலலிதாவுக்கு ஆபத்து’ என்று அடித்துச் சொல்லி, நடராஜன் அற்புதமாக இந்த அடிமைப்பெண்ணை ஒரு நிரந்தரக் கைதியாகவே ஆக்கிவிட்டார். தனக்கு எதிராக ஜெயலலிதா செயல்பட்ட ஒவ்வொரு முறையும், ஒரு செயற்கையான சிக்கலை நடராஜன்  அவருக்கு உண்டாக்குவார். உடனே ஜெயலலிதா ‘ஆபத்பாந்தவா அநாத ரட்சகா’ என்று நடராஜனின் அரசியல் பிடிக்குள் அடைக்கலம் ஆவார்’’ எனச் சொல்கிறார் வலம்புரி ஜான்.

- அடுத்த இதழில்

எஸ்.ஏ.எம். பரக்கத் அலி