Published:Updated:

குடும்ப வன்முறை வழக்குகளில் டாப்: சமூக ஆர்வலர்கள் பாராட்டும் தமிழகம்!

குடும்ப வன்முறை வழக்குகளில் டாப்: சமூக ஆர்வலர்கள் பாராட்டும் தமிழகம்!
குடும்ப வன்முறை வழக்குகளில் டாப்: சமூக ஆர்வலர்கள் பாராட்டும் தமிழகம்!
குடும்ப வன்முறை வழக்குகளில் டாப்: சமூக ஆர்வலர்கள் பாராட்டும் தமிழகம்!

குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தப்படுவதில், இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

தமிழகத்தில் உள்ள பெண்கள் அச்சமின்றி, தங்கள் மீதான துன்புறுத்தலுக்கு எதிராக சட்ட ரீதியிலான போராட்டத்தை மேற்கொள்கின்றனர் என்பதையே இது காட்டுகிறது சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, நியூயார்க் டைம்ஸ் இதழின் இந்தியாவுக்கான இணைய பக்கத்தில் விரிவான சிறப்புக் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதன் முக்கிய அம்சங்களாவன:

இந்தியாவில் பெண்களின் நிலை மேம்பட்டுள்ளது என்பதற்கு தமிழ்நாடு மாநிலத்தில் இருந்து கிடைக்கும் புள்ளி விவரங்களே சான்று.

தென் மாநிலமான தமிழகத்தில் பெண்களின் கல்வியறிவு 73.9 சதவிகிதமாக உள்ளது. இது, தேசிய சராசரியான 65.5 சதவிகிதத்தைவிட சற்றே கூடுதல்.

ஆண் - பெண் விகிதாச்சாரத்தை எடுத்துக்கொண்டால், தமிழகத்தில் 1000 ஆண்களுக்கு 995 பெண்கள் என்ற ஆரோக்கியமான போக்கு நிலவுகிறது.

பெண்களின் நிலை மேம்பட்டு இருப்பதற்கு, தமிழகத்தில் பதிவாகியுள்ள குடும்ப வன்முறை வழக்குகளின் எண்ணிக்கையே மற்றொரு சான்று. தமிழகத்தில் கடந்த 2011-ல் பதிவான குடும்ப வன்முறை வழக்குகள் 3,983. இது, ஒட்டுமொத்த இந்தியாவின் பதிவான வழக்குகளில் 42 சதவிகிதம் என்பது கவனத்துக்குரியது.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மிக அதிக எண்ணிக்கையில் குடும்ப வன்முறை வழக்குகள் பதிவாகி வருவது தெளிவு.

தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமாக இருந்தாலும், குடும்ப வன்முறை என்று வரும்போது, பாதிக்கப்பட்ட பெண்களில் பலரும் தைரியமாக முன்வந்து காவல்துறையை நாடுகின்றனர். இதன்மூலம் தமிழகப் பெண்களின் சட்ட ரீதியாக நீதிக்காக போராடுவதில் ஆர்வத்துடன் இருப்பதையே இந்த புள்ளிவிவரம் உணர்த்துவதாக சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த 2009 வரை இந்தியாவிலேயே ஆந்திராவில்தான் அதிக எண்ணிக்கையில் குடும்ப வன்முறை வழக்குகள் பதிவாகின. ஆந்திராவை 2010 ஆம் ஆண்டில் தமிழகம் மிஞ்சியது.

இந்தியாவில் 2008-ல் இருந்து 2012 வரை குடும்ப வன்முறை வழக்குகள் 67 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதே காலக்கட்டத்தில் தமிழகத்தின் உயர்வு 400 சதவிகிதம் என்பது கவனிக்கத்தக்கது.

தமிழகச் சூழலில் பெண்களிடையே விழிப்பு உணர்வு மிகுந்து காணப்படுவதே, இந்தச் சாதக நிலைக்கு முக்கியக் காரணம் என்று யுனிசெஃப் நிறுவனத்தின் கொள்கை நிபுணர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

- சரா