Published:Updated:

டெசோ சார்பில் பொது வேலை நிறுத்தம்: மத்திய, மாநில அரசுகளுக்கு கருணாநிதி அழைப்பு!

டெசோ சார்பில் பொது வேலை நிறுத்தம்: மத்திய, மாநில அரசுகளுக்கு கருணாநிதி அழைப்பு!
டெசோ சார்பில் பொது வேலை நிறுத்தம்: மத்திய, மாநில அரசுகளுக்கு கருணாநிதி அழைப்பு!
டெசோ சார்பில் பொது வேலை நிறுத்தம்: மத்திய, மாநில அரசுகளுக்கு கருணாநிதி அழைப்பு!

சென்னை: டெசோ அமைப்பு சார்பில் வரும் 12 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள பொது வேலை நிறுத்தத்தில் மத்திய, மாநில அரசுகளும் பங்கேற்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக,அவர் விடுத்துள்ள அறிக்கையில்," 12–3–2013 அன்று தமிழகத்தில் பொது வேலைநிறுத்தம். ‘‘டெசோ’’ அமைப்பின் வேண்டுகோள் இது.

இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலையைக் கண்டிக்கும் வகையில் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டுவரும் தீர்மானத்தை இந்திய அரசு ஒரு நொடியும் தாமதிக்காமல் முழு மனதோடு ஆதரிப்பதாக அறிவிக்க வேண்டும்; இந்திய அரசே, ஈழத் தமிழர்களைக் காப்பாற்றும் பொதுவாக்கெடுப்புக்கென தக்கதொரு தீர்மானத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டும்; என்பவைகளுக்காக கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் – ஜனநாயக நெறிபிறழாமல் – அமைதியான முறையில் – அறவழியில் – ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் – இது நம்முடைய தொப்புள் கொடிச்சொந்தங்களான ஈழத் தமிழர்களுக்காக நாம் கட்டாயம் கடைப்பிடித்தே தீர வேண்டிய அடிப்படைக் கடமை என்ற உணர்வோடு – அனைவரும் பங்கேற்க வேண்டுமென்ற எனது வேண்டுகோளை முன்வைக்கிறேன்.

சங்கடங்கள்


இந்த வேலை நிறுத்தம் காரணமாகச் சிலருக்கு சில நடைமுறைச் சங்கடங்கள் ஏற்படலாம். அவற்றையெல்லாம் அன்புகூர்ந்து பொறுத்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இந்த வேலை நிறுத்தத்தை ‘‘டெசோ’’ இயக்கத்தின் சார்பில் அறிவித்த காரணத்தால் ஒரு சிலர் தமிழ் இனப்பற்றை தங்கள் உள்ளத்திலிருந்து எடுத்தெறிந்துவிட்டு, இது ஏதோ திசை திருப்புகின்ற செயல் என்றெல்லாம் காழ்ப்புணர்ச்சியோடும், எதிர்ப்பு அறிக்கை கொடுக்காவிட்டால் யாரோ கோபப்பட்டு விடுவார்களோ – அதனால் பாதிப்பு ஏற்படுமோ என்பதற்காகவும், ஏதோ ஒரு உள்நோக்கத்தோடும் அறிக்கை விடுத்த போதிலும்,

##~~##
இந்த வேலை நிறுத்தம் என்பது முழுக்க முழுக்க இன்னல்களால் உழன்று வரும் ஈழத் தமிழர்களுக்கு தாய்த் தமிழகம் காட்டுகின்ற ஆதரவு என்ற உணர்வோடு; அதை வெற்றிகரமாக ஆக்கித் தர வேண்டுகின்றேன்.இந்த வேலை நிறுத்தத்தின்போது, பெரிய தொழில் நிறுவனங்கள் முதல் சிறிய சிறிய நிறுவனங்கள் – பெரிய, சிறிய வர்த்தக நிறுவனங்கள் – கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். சாலைகளிலே ஆட்டோக்கள் ஓடக்கூடாது என்றும், திரைப்படத் துறையைச் சார்ந்தவர்கள் அன்று ஒரு நாள் பன்னிரண்டு மணிநேரம் தங்கள் தியேட்டர்களை மூடி காட்சிகளை நிறுத்த முன் வரவும் வேண்டுகிறேன்.
மத்திய, மாநில அரசுகள்
தனியார் மற்றும் அரசு பஸ்கள்; ஏன் இந்திய அரசே முன் வந்து அன்றையதினம் ரெயில்கள் மற்றும் விமானங்கள் தமிழகத்திலே ஓடாது என்று அறிவித்திட வேண்டும்; தமிழக அரசின் பொறுப்பிலே இருப்போரும், இந்த வேலை நிறுத்தம் என்பது நம்முடைய இனமக்களுக்காக நடைபெறுகின்ற ஒன்று என்ற உணர்வோடு அரசு அலுவலகங்களையெல்லாம் அன்று ஒரு நாள் 12 மணி நேரம், இந்தப் பொது வேலை நிறுத்தத்திற்காக விடுமுறைவிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
தேர்வு நேரம்
எப்போதும்போல இந்த வேலை நிறுத்தத்தில் மருத்துவமனைகள்,பத்திரிகை அலுவலகங்கள் போன்ற அத்தியாவசியச் சேவைகளுக்கும்;இது தேர்வு நேரம் என்பதால் பள்ளிகள், கல்லூரிகளுக்கும்; விதி விலக்கு உண்டு" என்று கூறியுள்ளார்.