Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

எம்.சிவக்குமார், வேதாரண்யம்

கழுகார் பதில்கள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பெட்ரோல் விலை உயர்ந்தால் எல்லா விலையும் உயரும் என்பது ஆட்சியாளர்​களுக்குத் தெரியும். தெரிந்தும் அந்தத் தவறைத் தொடர்ந்து செய்வது ஏன்? மானியம் மூலமாவது பெட்ரோல் விலையைக் கட்டுப்படுத்தலாமே?

மானியம் என்பது ஏதோ ஆகாயத்தில் இருந்து யாரோ தூக்கிப் போடும் பணம் அல்ல. அதுவும் நம் பணம்தான்!

ஒவ்வோர் ஆண்டும் மத்திய அரசின் பட்ஜெட்டில் சுமார்

கழுகார் பதில்கள்

1,50,000 கோடி மானியமாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதனால்தான் கடும் நிதி நெருக்கடி ஏற்படுவதாக பொருளாதார ஆய் வாளர்கள் சொல்கிறார்கள். இந்த நிலையில் மேலும் மானியம் கொடுத்தால், இந்த நெருக்கடி இன்னும் அதிகமாகும் என்பது அவர்களது கணிப்பு.

கழுகார் பதில்கள்

'சர்வதேசக் கச்சா எண்ணெய் சந்தை யில் விலை உயர்வை இந்தியா​வால் கட்டுப்படுத்த முடியாத நிலை. கச்சா எண்ணெய் விலை உயரும்​போது, அதற்கேற்ப பெட்​ரோலியப் பொருட்​களின் விலையை நாம் உயர்த்த வேண்டி உள்ளது’ என்ற விளக்கத்தையே இன்னமும் எத்தனை ஆண்டு களுக்குச் சொல்லிக்கொண்டு இருப்போம். மாற்று எரி பொருள் சக்திகளைத் தேடும் முயற்சிகளில் மற்ற நாடுகள் இறங்கிவிட்டன. இந்தியா அதுபற்றி யோசிக்காததுதான், வருத்தம் தரும் விஷயம்!

 வண்ணை கணேசன், சென்னை 110.

கழுகார் பதில்கள்

கோஷ்டிப் பூசல்களால் அதிகம் பாதிக்கப்படுவது யாரென்று கூற முடியுமா?

தொண்டர்கள்தான். எந்தப் பக்கத்தை ஆதரிப்பது என்று தெரியாமல் குழம்பிப்போய் இரண்டு பக்​கத்து எதிர்ப்பையும் சம்பாதித்துக்கொள்வது அவர்கள்​தானே!

சில மாதங்களுக்கு முன்னால் முக்கியக் கட்சியில் சேர்ந்தார் காமெடி நடிகர் ஒருவர். தனது பேட்டியில் தலைவரின் ஒரு வாரிசு பெயரை மட்டும் சொன்னார். இன்னொரு வாரி​சுக்கு இதனால் கோபம். 'என் பெயரை ஏன் சொல் லலை?’ என்று கோபித்துக்​கொண்டார். அடுத்த பேட்டியில் இரண்டு பேர் பெயர்களையும் சொன்னார். 'அவரு பேரையும் எதுக்கு சொன்னீங்க?’ என்று மூத்தவருக்கு கோபம். 'அவ்வ்வ்வ்வ்வ்வ்...’ என்றார் காமெடி!

 இர.இரபீந்த், இரணியல்

கழுகார் பதில்கள்

ஜெயலலிதா, கருணாநிதி, கனிமொழி இந்த மூவரில் நேருக்கு நேர் நீதிமன்றத்தில் வழக்குகளைச் சந்தித்தது யார்?

##~##

கருணாநிதி மீதான வழக்கு, விசாரணைக்கே வரவில்லை. அது ஒரு விசாரணைக் கமிஷனோடு முடிந்தது.

ஜெயலலிதா, 109 தடவை இழுத்து இப்போதுதான் பெங்களூருவை நெருங்கி இருக்கிறார்.

கனிமொழிக்கு சிறைக்குள் இருப்பதால் கோர்ட்டுக்கு வர மாட்டேன் என்று சொல்ல முடியாது. உங்கள் கேள்விக்கான பதிலை இதில் இருந்து தேடிப் பாருங்கள்!

 பா.சு.மணிவண்ணன், திருப்பூர்.4

கழுகார் பதில்கள்

அரசியல்வாதிகளைவிட சிறந்த நடிகர்கள் உலகில் வேறு யாராவது இருக்கிறார்களா?

அந்த அரசியல்வாதிகளின் மனைவிகளும் வாரிசுகளும் இருக்கிறார்களே!

உலகமே அதிரக்கூடிய ஊழலில் அரசியல்வாதி கைதானாலும் 'எதுவுமே நடக்காதது மாதிரி’ உட்கார்ந்து பேட்டிகள் கொடுக்கும் சாமர்த்தி​யசாலிகள் அவர்கள்!

 வரதப்பன், சுங்குவார்சத்திரம்

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்

  திருச்சியில் தியாகி சின்னச்சாமிக்கு சிலை வைக்கப்படும் என்று அறிவித்துள்ளார் ஜெயலலிதா. அந்த அளவுக்கு முக்கியமானவரா அவர்?

மொழியைக் காக்க தனது உடலைக் கொடுக்கலாம் என்ற எண்ணத்துக்கு வித்திட்ட முதல் தியாகி சின்னச்சாமி. 'இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழி, 1965, ஜனவரி 25-ம் நாள் முதல் அது அமலாகும்’ என்ற உத்தரவு வந்தது. அப்போதைய முதலமைச்சர் பக்தவத்சலம் எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்து வந்துகொண்டு இருந்தார். 'தமிழை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று அவரது காலடியில் போய் சின்னச்சாமி விழுந்தார். 'யாரோ ஒரு பைத்தியக்காரர்’என்று நினைத்து போலீஸ் கைது செய்து 15 நாள் சிறையில் அடைத்தது. விடுதலையான சின்னச்​சாமி விரக்தி​யோடு திருச்சி திரும்பினார்.

அன்றைய 'தினத்தந்தி’ நாளிதழில் ஒரு செய்தி. புத்த மதத்தைக் காப்பாற்ற தாய்லாந்தில் இரண்டு புத்த பிட்சுக்கள் தங்களது உடலுக்குத் தீவைத்து இறந்துபோனதாகச் சொன்னது அந்தச் செய்தி. நாமும் தமிழுக்காக தீ வைத்துக்கொண்டால் என்ன என்று யோசித்து, அதன்படியே தீக்குளித்து இறந்தார். அவரைத் தொடர்ந்து, தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்டவர்கள் தீக்குளித்தார்கள்!

 பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி

கழுகார் பதில்கள்

உ.பி. முதல்வர் மாயாவதியையும் மாநில அரசாங்கத்தையும் கடுமையாக விமர்சித்த ஐ.பி.எஸ். அதிகாரி தேவேந்திர தத் மிஸ்ராவை வலுக்கட்டாயமாக மனநல மருத்துவமனையில் அரசு சேர்த்திருப்பது குறித்து..?

தமிழகம் பரவாயில்லை, இந்த அளவுக்கு நம் மாநிலத்தின் நிலைமை மோசமாகவில்லை என்று திருப்திப்​பட்டுக்கொள்ள வேண்டியது​தான்!

கழுகார் பதில்கள்

கடந்த வாரத்தில் இன்னொரு சம்பவமும் நடந்தது. மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமூல் கட்சித் தொண்டர்கள் இரண்டு பேரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டதாக மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்குத் தகவல் வந்தது. உடனே அவரே நேராக அந்தக் காவல் நிலையத்துக்குச் சென்றார். இருவரையும் உடனடியாக விடுதலை செய்யச் சொல்லி உத்தரவும் போட்டு, அதிரடியாகக் கையோடு அழைத்தும் வந்துவிட்டார். உ.பி., மேற்கு வங்கத்துடன் ஒப்பிடும்போது... 'சாந்தி நிலவும் மாநிலம் நம் தமிழ்நாடு’!

 இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி

கழுகார் பதில்கள்

'நாங்கள் எதிர்க் கட்சியாக இருப்போமே தவிர, எதிரிக் கட்சியாக இருக்க விரும்பவில்லை’ என்ற விஜயகாந்த்தின் தடாலடிப் பேச்சு குறித்து?

ஏதோ ஒரு கட்சியாக இருங்கள் என்றுதானே எதிர்பார்க்கிறான் வாக்காளன்!

 'காசி’ யோக அக்ஷயா, கோவை.14

கழுகார் பதில்கள்

இத்தனை நல்ல மீடியாக்கள் இருந்தும் கடந்த காலங்களில் நடந்த அட்டூழியங்களை அறுதியிட்டு ஒழிக்க இயலவில்லையே ஏன்?

மீடியாக்களால் குற்றம் குறைகளைச் சொல்லத்தான் முடியும். தண்டிக்க வேண்டிய அதிகாரமும் சக்தியும் மக்கள் கையில்.

இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்

கெடுப்பார் ஆயினும் கெடும் - என்கிறார் வள்ளுவர். இடித்து உரைக்கின்றன மீடியாக்கள். முன்னதாகவே உஷாரானால்... அவர்களுக்கு நல்லது. இல்லாவிட்டால் ஆபத்துக்கள் சூழும். எனவே மீடியாக்கள் நினைத்தால், அனைத்து அட்டூழியங்களையும் ஒழித்துவிட முடியும் என்று உங்களைப் போன்ற பொதுமக்கள் சும்மா இருந்துவிடக் கூடாது!

 பா.சு.மணிவண்ணன், திருப்பூர்.4

கழுகார் பதில்கள்

  கழுகாரின் பதில்கள் விரைவில் புத்தகமாக மலருமா?

தயாராகி வருகிறது. ஜனவரியில் நடக்கும் சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்!

கழுகார் பதில்கள்