மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 10 - காணாமல் போன லீலா!

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 10 - காணாமல் போன லீலா!
பிரீமியம் ஸ்டோரி
News
மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 10 - காணாமல் போன லீலா!

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 10 - காணாமல் போன லீலா!

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 10 - காணாமல் போன லீலா!

ஜெயலலிதாவை கட்சியில் சேர்த்த எம்.ஜி.ஆர் சில காலத்துக்குள்ளேயே ஜெயலலிதாவின் மீது சந்தேகத்தைக் குவித்தார். ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக முடிவு செய்தார். கட்சியில் சேர்ந்த பிறகு தனக்கான ஓர் இடத்தைப் பிடித்துவிட வேண்டும் என ஜெயலலிதா ‘மூவ்’ நடத்திக்கொண்டிருந்தார். ஜெயலலிதா பங்கேற்ற பொதுக்கூட்டங்களில் எல்லாம் கட்சியினர் திரண்டார்கள். இதெல்லாம் சேர்ந்து, ‘தனக்கு ஆபத்தாக ஜெயலலிதா வந்துவிடுவாரோ’ என்ற சந்தேகத்தை எம்ஜி.ஆருக்கு ஏற்படுத்தியது. அதன் விளைவு... கண்காணிப்பு ஏற்பாட்டை செய்தார் எம்.ஜி.ஆர்.

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 10 - காணாமல் போன லீலா!

ஒரு பெண்ணைப் பயன்படுத்தி மற்றொரு பெண்ணை உளவுபார்த்தார். சசிகலாவும், ஜெயலலிதாவும்தான் அந்த இரண்டு பெண்கள். அன்றைக்கு இருந்த சசிகலா, எம்.ஜி.ஆர் ஆளா? ஜெயலலிதா ஆளா? இந்த சந்தேகம் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்தவர்களுக்கு ஏற்பட்டது. ‘‘சசிகலா எம்.ஜி.ஆர். ஆளா? ஜெயலலிதா ஆளா? சசிகலா, எம்.ஜி.ஆர் ஆளும் அல்ல, ஜெயலலிதாவின் ஆளும் அல்ல. சசிகலா, சசிகலாவின் ஆள். இதை தமிழ்நாடு ஒருநாள் உணரும். அப்பொழுதுகூட ஜெயலலிதா உணர மாட்டார்’’ என நக்கீரனில் எழுதிய ‘வணக்கம்’ தொடரில் குறிப்பிட்டிருக்கிறார் வலம்புரி ஜான். ஜெயலலிதா பற்றிய தகவல்களை எம்.ஜி.ஆரிடம் சொல்லி வந்தார் சசிகலா. இ்தற்காகவே எம்.ஜி.ஆரிடம் சில காரியங்களை சாதித்தார்.

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 10 - காணாமல் போன லீலா!

எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் செய்தித்துறை அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். அவர் அ.தி.மு.க-வில் ஜெயலலிதாவின் வருகையை கொஞ்சமும் ரசிக்கவில்லை. சசிகலாவின் கணவர் நடராசன் அந்தக் காலகட்டத்தில் அரசு மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஜெயலலிதாவுக்குப் பக்கத்தில் சசிகலா இருந்தார். அந்த ஜெயலலிதாவுக்கு உதவக்கூடியவராக வலம்புரி ஜான் இருந்தார். அந்த வலம்புரி ஜான், ஆர்.எம்.வீரப்பனுக்கு நெருக்கமாக இருந்தார். இப்படியான சங்கிலித் தொடர் நட்பில் நடராசன் கோரிக்கை ஒன்றை வலம்புரி ஜானிடம் வைத்தார். அரசு மக்கள் தொடர்பு அதிகாரியான தனக்கு பதவி உயர்வு வேண்டுமென தனது துறை அமைச்சரான ஆர்.எம்.வீரப்பனிடம் சிபாரிசு செய்யுங்கள் என வலம்புரி ஜானிடம் கேட்டார். இதுபற்றிக் குறிப்பிடும் வலம்புரி ஜான், ‘‘ஜெயலலிதாவையும், அவர் உடனிருக்கும் சசிகலாவையும் அவரது கணவர் நடராசனையும் பிடிக்காத ஆர்.எம்.வீரப்பன், நடராசனுக்கு உதவவில்லை. இந்தப் பின்னணிதான் என்னை விரட்டி அடிக்கக் காரணம்’’ என்கிறார். எம்.ஜி.ஆரிடமும் ஜெயலலிதாவிடமும் செல்வாக்கோடு இருந்த வலம்புரி ஜானுக்கே இந்த நிலை என்றால் மற்றவர்களின் நிலை எப்படி இருந்திருக்கும் என சொல்லத் தேவையில்லை.

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 10 - காணாமல் போன லீலா!

ஜெயலலிதாவின் ஆரம்பகாலத் தோழி லீலா. ஜெயலலிதாவிடம் நெருங்கிப் பேசக்கூடியவர்களில் லீலாவும் ஒருவர். ஆல் இந்தியா ரேடியோவில் பணியாற்றிக் கொண்டிருந்தார். சசிகலா போயஸ் கார்டனை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்த நேரத்தில், வழக்கம்போலவே அங்கே போனார் லீலா. ஆனால் அங்கே அவருக்குப் பழைய மரியாதை கிடைக்கவில்லை. தோட்டக்கலை தொடர்பான புத்தகங்களை லீலாவிடம் கேட்டிருந்தார் ஜெயலலிதா. அவற்றை லீலாவும் அனுப்பியிருந்தார். ஆனால் அதன்பின் அதுபற்றி எந்தத் தகவலையும் ஜெயலலிதா சொல்லவில்லை என்பதால் கார்டனுக்குப் போனார். ‘‘மேடம் வரச்

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 10 - காணாமல் போன லீலா!

சொல்லியிருந்தார்கள்’’ என சொல்லியிருக்கிறார். ‘‘காத்திருங்கள்’’ என பதில் வந்தது. மூன்று மணி நேரத்துக்கும் மேலாக கார்டன் ரிசப்ஷனில் காத்திருந்தும் அவருக்கு ஜெயலலிதாவைச் சந்திக்கும் வாய்ப்பு வாய்க்கவில்லை. கடைசியாக, ‘‘அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. அவர் இன்று யாரையும் பார்க்க மாட்டார். பிறகு வாருங்கள்’’ எனச் சொல்லி அவரை சசிகலா அனுப்பிவைத்தார். ‘‘அவர்தான் என்னை வரச் சொல்லியிருந்தார்’’ என லீலா சொன்னது எடுபடவில்லை. ஆனால் அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த ஜெயலலிதாவுக்காக காத்திருந்த வலம்புரி ஜான் மட்டும் கிளம்பவில்லை. சசிகலா போனபிறகு தனக்கு வேண்டப்பட்ட லீலாவிடம் ‘‘என்னம்மா ஆச்சு’’ என கேட்டிருக்கிறார் வலம்புரி ஜான். விரக்தியாக சிரித்துவிட்டுப் போனார் லீலா. அதன்பிறகு அவரால் கார்டன் பக்கமே தலை வைக்க முடியவில்லை. லீலா வந்து போன தகவல் ஜெயலலிதாவிடம் எப்படிச் சொல்லப்பட்டிருக்கும் என சொல்லத் தேவையில்லை.

தோட்டக்கலை தொடர்பான புத்தகங்களையும், அவற்றை எழுதிய கிருஷ்ணமூர்த்தி என்பவரையும் ஜெயலலிதாவுக்கு பிறகு சசிகலா அறிமுகம் செய்து வைத்தார். ‘தோட்டக்கலை பற்றிய செய்திகளை ஜெயலலிதாவுக்கு சொல்வதாக இருந்தாலும் தனக்கு வேண்டப்பட்ட கிருஷ்ணமூர்த்தி மட்டுமே சொல்ல வேண்டும். தனக்கு வேண்டப்பட்டவர் மட்டும்தான் ஜெயலலிதாவின் பக்கத்தில் போக முடியும் என சசிகலா போட்ட கணக்கில் காணாமல் போனார் லீலா. அன்றைக்கு சசிகலா போட்ட கணக்கு ஜெயலலிதா மறைவு வரை தொடர்ந்தது.

- அடுத்த இதழில்

எஸ்.ஏ.எம். பரக்கத் அலி

படங்கள்:சு.குமரேசன்