Published:Updated:

ஜெ. விழாவுக்க்கு சென்று திரும்பிய 3 பேர் மாடு முட்டி காயம்!

ஜெ. விழாவுக்க்கு சென்று திரும்பிய 3 பேர்  மாடு முட்டி காயம்!
ஜெ. விழாவுக்க்கு சென்று திரும்பிய 3 பேர் மாடு முட்டி காயம்!

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் இன்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்டுவிட்டு திரும்பிய 3 பேர் மாடு முட்டி காயமடைந்தனர்.

ஜெ. விழாவுக்க்கு சென்று திரும்பிய 3 பேர்  மாடு முட்டி காயம்!

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு அரசிதழில் வெளியானதற்கு, தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன நல உரிமை பாதுகாப்பு சங்கம் சார்பில், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இன்று மாலை  தஞ்சாவூரில்  பாராட்டு விழா நடைபெற்றது.

ஜெ. விழாவுக்க்கு சென்று திரும்பிய 3 பேர்  மாடு முட்டி காயம்!

இந்த விழாவில் டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்லாமல், பிற மாவட்டங்களையும் சேர்ந்த விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

##~~##

இவ்விழாவில கலந்துகொண்டவர்களில் சிலர் விழா நடைபெற்று கொண்டிருக்கும்போதே, பாதியிலேயே ஊர் திரும்பினர். அவர்கள் எருக்கூர் என்ற இடத்தின் அருகே வந்துகொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த மாடுகள், திடீரென மிரண்டு அவர்களை முட்டித்தள்ளியது.

இதில் ராக்கம்மா, செல்வராஜ் மற்றும் வளர்மதி ஆகிய 3 பேர் காயமடைந்தனர். இதனைய்டுத்து உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

படங்கள்: எம். ராமசாமி