Published:Updated:

தோட்டத்துக்குள் புகுந்த கார்டன்!

தோட்டத்துக்குள் புகுந்த கார்டன்!
பிரீமியம் ஸ்டோரி
News
தோட்டத்துக்குள் புகுந்த கார்டன்!

ராமாவரம் தோட்டத்தில் நூற்றாண்டு விழா காட்சிகள்

தோட்டத்துக்குள் புகுந்த கார்டன்!

ன் அத்தை கட்சி’ என ஜெயலலிதாவை வைத்து தீபா சொந்தம் கொண்டாட, எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்லி கட்சியை வசப்படுத்தத் தயாராகி வருகிறார் சசிகலா. அதற்கான வாய்ப்பாக வந்திருக்கிறது எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா. சசிகலாவை முன்னிறுத்தி நடத்திய எம்ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்களைப் பார்ப்போம்.

ராயப்பேட்டை கட்சித் தலைமை அலுவலகத்தில் வழக்கமாக எம்.ஜி.ஆர் பிறந்த நாளில் நடக்கும் நிகழ்ச்சிகள், இந்த ஆண்டு சசிகலா தலைமையில் நடைபெற்றன. ஜெயலலிதா வந்தால் எப்படி பிரமாண்ட ஏற்பாடுகள் நடக்குமோ... அப்படி சசிகலாவுக்கும் செய்யப்பட்டிருந்தன. சில அடிகளுக்கு ஒரு போலீஸ் நின்றிருந்தது. மாலையிடுவது, மலர் வெளியிடுவது என வழக்கமான சம்பிரதாயங்கள் முடிந்தவுடன் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கிளம்பி எம்.ஜி.ஆர் வாழ்ந்த ராமாவரம் தோட்டத்துக்குச் சென்றனர். அவர்கள் அங்கு போய்ச் சேரும் வரை, கட்சி அலுவலகத்தில் தன்னுடைய அறையில் இருந்தபடி தீபா கொடுத்த பேட்டியை லைவ் ஆக டி.வி-யில் பார்த்துக் கொண்டிருந்தார், சசிகலா. அவர் எதிர்பார்த்த திருப்பங்கள் இல்லை என்று உணர்ந்தாரோ, என்னவோ... அதன்பின் கூலாக வெளியே வந்து, தொண்டர்களிடம் இரட்டை விரலைக் காட்டிவிட்டு காரில் ஏறி ராமாவரம் புறப்பட்டார்.

தோட்டத்துக்குள் புகுந்த கார்டன்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

2015-ம் ஆண்டு டிசம்பரில் பெய்த பெருமழையில் ராமாவரம் தோட்டம் பாழ்பட்டுப் போனது. ‘எம்.ஜி.ஆர் வாழ்ந்த ராமாவரம் தோட்டம் சீர்செய்யப்படும். இதை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்குச் செய்யும் நன்றிக் கடனாகவே கருதுகிறேன்’ என அப்போது ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார்.

2016-ம் ஆண்டு டிசம்பரில் ஜெயலலிதா மறைந்துவிட... பொதுச்செயலாளராக சசிகலா நியமனமாக... அவருக்கு எதிராக தீபா களத்தில் குதிக்க... ராமாவரம் தோட்டம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தது. அதை சீர்செய்யும் பணிகள் கடைசி நேரத்தில் தொடங்கின. தோட்டத்தின் முன்பக்க காம்பவுண்ட் சுவர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை மட்டுமே பெயின்ட் அடித்து பளிச் ஆக்கினார்கள். சமீபத்திய வர்தா புயலிலும் ராமாவரம் தோட்டம் சிக்கி, ஆங்காங்கே மரங்கள் விழுந்து கிடந்தன. எம்.ஜி.ஆர் பயன்படுத்திய நீச்சல் குளம், இரண்டு புரொஜெக்டர்களைக் கொண்ட தியேட்டர் ஆகியவை சேதமடைந்து இருந்தன. இப்படி உள்ளே எல்லாம் பல்லிளிக்க... வெளியே சுவர்கள் மட்டும் வெள்ளை பூசிக் கொண்டன. பெரும்பாலான பணிகள் அரைகுறையாக முடிக்கப்பட்டுள்ளன.

தோட்டத்துக்குள் புகுந்த கார்டன்!

பின்புறக் காம்பவுண்டு சுவரை ஒட்டிச் செல்லும் ராமாவரம் கால்வாயில் சாக்கடை நீர் ஓடுகிறது. தற்போது வர்தா புயலில் சரிந்து விழுந்த மரங்கள்கூட அப்புறப்படுத்தப்படவில்லை. அந்தப் பகுதியில் சரிந்து விழுந்த காம்பவுண்டு சுவரைக் கட்டி எழுப்பாமல், தகரத்தில் தடுப்புச் சுவரை தற்காலிகமாக அமைத்து இருக்கிறார்கள்.

கை உடைந்்து சாக்குப் பைக்குள் மூட்டை கட்டி வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் சிலை தூக்கி வரப்பட்டு கை சீரமைக்கப்பட்டது. முன்பு, அந்தச் சிலை வைக்கப்பட்டிருந்த அதே இடத்தில், இரண்டு அடி உயரத்தில் புதிதாக பீடம் கட்டி... அதன் மேல் 9 அடி உயரமுள்ள சிலையைத் தூக்கி நிறுத்தினார்கள். கருப்புக் கண்ணாடியை சிலைக்கு மாட்டியிருந்தார்கள். பீடத்தில், ‘ஜெயலலிதாவின் மேலான வழிகாட்டுதல்படி... எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு... அவரது திருவுருவச்சிலை கழக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவின் பொற்கரங்களால் திறந்து வைக்கப்பட்டது’ என்று அடிக்கல் அமைத்தனர்.  இந்தச் சிலையை நிர்மாணித்தவர்கள் பெயர்கள் கச்சிதமாக மறைக்கப்பட்டு, சசிகலா பெயரை வசதியாக வரலாற்றில் பதித்துவிட்டார்கள். முதல்வரின் பெயரும் இடம் பெறவில்லை.

தோட்டத்துக்குள் புகுந்த கார்டன்!

‘விழாவுக்கு சசிகலா வர விரும்புகிறார்’ என்றதும் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள்கள் 5 பேரில் சுதா, லதா இருவர் மட்டுமே அவரை வரவேற்று அறிக்கை வெளியிட்டார்கள். மற்றவர்கள் யாருமே இந்த விஷயத்தில் தங்கள் பெயர் வருவதை விரும்பவில்லை. ராமாவரம் வந்ததும் எம்.ஜி.ஆர் சிலையைத் திறந்து வைத்துவிட்டு அருகில் இருந்த எம்.ஜி.ஆரின் தாயார் சத்யா -மனைவி ஜானகி அம்மையார் நினைவிடங்களுக்கும் சென்று சம்பிரதாயமாக வணங்கிவிட்டு எம்.ஜி.ஆர் வாழ்ந்த வீட்டுக்குள் சசிகலா சென்றார். அவருக்கு அணிவிக்க ஆளுயர ரோஜா மாலை வாங்கி வைத்திருந்தார், சுதா. ‘‘இந்த உபசாரங்கள் எல்லாம் வேண்டாம்’’ என்று தவிர்த்துவிட்டு சிறிய பூங்கொத்தை மட்டும் வாங்கிக்கொண்டார் சசிகலா. எம்.ஜி.ஆர் வீட்டில் ஒவ்வோர் இடமாக சசிகலாவுக்கு சுற்றிக் காட்டினார், சுதா.

அடுத்து, ராமாவரம் தோட்ட வளாகத்தில் இருக்கும் எம்.ஜி.ஆர் காதுகேளாதோர் பள்ளிக்குப் போனார் சசிகலா. விழா மேடையில் சசிகலா எதுவும் பேசவில்லை. அவர் பேசினால், மேடை ஏறி இருந்த முதல்வரையும் பேச வைக்க வேண்டுமே! முதல்வர் கலந்துகொள்ளும் விழாக்களுக்கான மரபுப்படி, முதல்வர்தான் இறுதியில் பேச வேண்டும். ‘ஓ.பி.எஸ்., பேசி முடிக்கும்வரை சசிகலாவை காத்திருக்க வைக்க வேண்டாம்’ என்று, சசிகலா பேசுவதை சாமர்த்தியமாகத் தவிர்த்துவிட்டார்கள். மேடையின் பின்புறம் இருந்த பேனரிலும் முதல்வரின் பெயரும் இல்லை. படமும் இல்லை. சசிகலாவின் பெயரும் படமும் இருந்ததை தனியாக சொல்லத் தேவையில்லை. 

தோட்டத்துக்குள் புகுந்த கார்டன்!

ஜெயலலிதாவின் அரசியல் பயணம் சத்துணவுத் திட்டத்தில்தான் தொடங்கியது. அ.தி.மு.க-வில் சேர்ந்த பிறகு சத்துணவுத் திட்டக் குழுவில் ஜெயலலிதா நியமிக்கப்பட்டார். அப்போது அந்தத் திட்டத்தைப் பிரபலப்படுத்த, மாணவர்களுடன் அமர்ந்து ஜெயலலிதா சத்துணவு சாப்பிட்டார். அந்தப் புகைப்படம் பிறகு வெகு பிரபலம் ஆனது. அதே யுக்தியை சசிகலா இங்கு கடைபிடித்தார். காதுகேளாத, வாய்பேச முடியாத பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு பரிமாறினார் சசிகலா. அவர்களுடன் அமர்ந்து பிரிஞ்சி சாதம் சாப்பிட்டார். போட்டோ வைபவங்கள் முடிந்தவுடன், அருகில் நின்ற எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகளும் பள்ளியின் தாளாளருமான லதா ராஜேந்திரனிடம், ‘‘எந்த உதவி என்றாலும் என்னிடம் தயங்காமல் கேளுங்கள். அக்கா, இந்தத் தோட்டத்தின் மீது காட்டிய பிரியத்தைச் சிறிதும் குறைவில்லாமல் நானும் காட்டுவேன். இது என் கடமை” என்று உறுதி கொடுத்துவிட்டுக் கிளம்பினார் சசிகலா.
 
- எஸ்.முத்துகிருஷ்ணன்

படங்கள்: ஆ.முத்துக்குமார்