Published:Updated:

பா.ஜ.க. மீது மக்களுக்கு அதிருப்தி- அத்வானி

பா.ஜ.க. மீது மக்களுக்கு அதிருப்தி- அத்வானி
பா.ஜ.க. மீது மக்களுக்கு அதிருப்தி- அத்வானி
பா.ஜ.க. மீது மக்களுக்கு அதிருப்தி- அத்வானி

புதுடெல்லி: ‘‘காங்கிரஸ் மீது மட்டும் அல்லாமல் பா.ஜ.க. மீதும் மக்களுக்கு அதிருப்தி உள்ளது’’ என்று அக்கட்சியின் மூத்தத் தலைவர் எல்.கே.அத்வானி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகத்தில் முதல்வராக இருந்த எடியூரப்பா மீது பல்வேறு ஊழல் புகார்கள் கூறப்பட்டன. இதைத்தொடர்ந்து, கடுமையாக போராடி பா.ஜ.க. மேலிடம் அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கியது.

பின்னர் அவர் அக்கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியை தொடங்கினார்.ஆனால் அப்போது பா.ஜ.க.வின் தேசிய தலைவராக இருந்த நிதின் கட்காரி, எடியூரப்பா மீதான ஊழல் புகார் பிரச்னையை சரிவர கையாளவில்லை என அக்கட்சியின் மூத்த தலைவரான அத்வானி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

##~~##
இது தொடர்பாக ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அத்வானி அளித்த பேட்டியில், ‘‘பா.ஜ.க. ஊழலை சகித்துக் கொள்ளாது என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் கர்நாடகத்தில் முன்பு ஏற்பட்ட பிரச்னை தீர்க்க கட்சி கையாண்ட விதம் எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது’’ என்று கூறியுள்ளார்.
மத்தியில் தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மீது கடந்த சில ஆண்டுகளாக மக்கள் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாக தான் கருதுவதாகவும், அதேபோல் சில வகைகளில் பா.ஜ.க. மீதும் மக்களுக்கு அதிருப்தி உள்ளது என்றும் அத்வானி தெரிவித்தார்.
என்றாலும், பா.ஜ.க.வின் எதிர்காலம் குறித்து தான் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் அத்வானி கூறினார்.