Published:Updated:

இந்தியா வல்லரசாவது உறுதி- நரேந்திர மோடி

இந்தியா வல்லரசாவது உறுதி- நரேந்திர மோடி
இந்தியா வல்லரசாவது உறுதி- நரேந்திர மோடி
இந்தியா வல்லரசாவது உறுதி- நரேந்திர மோடி

புதுடெல்லி: 19ம் நூற்றாண்டு ஐரோப்பியர்களுக்கானது என்றால், 21 ம் நூற்றாண்டு இந்தியர்களுக்கானது குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

அமெரிக்க வாழ் இந்தியர்களுக்காக வீடியோ கான்பரஸ் மூலம் உரையாற்றிய அவர் இதனைத் கூறியுள்ளார்.

இந்தியாவைப் பொறுத்தவரை மதச்சார்பின்மைக்கே முன்னுரிமை தரவேண்டும் என நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உலகின் தவிர்க்க முடியாத சக்தியாக இந்தியா வளர்ந்து வருவதாகவும் கூறிய மோடி, 19ஆம் நூற்றாண்டு ஐரோப்பியர்களுக்கானது என்றால், 21ஆம் நூற்றாண்டு இந்தியர்களுக்கானது என்றார்.

அமெரிக்க பொருளாதாரத்தில், இந்தியா முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் எதிர்கால நம்பிக்கையாக இளைஞர்கள் திகழ்ந்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

சர்வதேச பொருளாதாரத்தில் இரண்டு முறை சரிவு ஏற்பட்ட போதும், குஜராத்தை அது பாதிக்கவில்லை என்றும் மோதி தெரிவித்துள்ளார்.