Published:Updated:

புதுச்சேரி சட்டப்பேரவை 18ல் கூடுகிறது!

புதுச்சேரி சட்டப்பேரவை 18ல் கூடுகிறது!
புதுச்சேரி சட்டப்பேரவை 18ல் கூடுகிறது!
புதுச்சேரி சட்டப்பேரவை 18ல் கூடுகிறது!

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் வரும் 18ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான உத்தரவை சட்டப்பேரவை செயலர் இன்று பிறப்பித்துள்ளார்.

என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 2ஆம் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி,தனக்கு தெரியாமல் அதிகாரிகளை மத்திய அரசு மாற்றி வருவதாகவும், மாநில அரசில் மத்திய அமைச்சர் நாராயணசாமி குறுக்கிடுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் வரும் 18ஆம் தேதி தொடங்குகிறது என்று சட்டப்பேரவை செயலர் இன்று அறிவித்துள்ளார்.

##~~##
இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் துணை நிலை ஆளுநர் உரையுடன் பேரவை கூட்டம் தொடங்குகிறது.
மத்திய அரசு மீதும், அமைச்சர் நாராயணசாமி மீதும் ரங்கசாமி குற்றம்சாட்டியுள்ளதால் இதை வைத்து பிரச்னை கிளப்ப காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
இதனால் சட்டப்பேரவை கூட்டம் அமைதியாக நடைபெறுமா? என்பது கேள்விகுறிதான்.