டவருக்கு வேண்டும் கட்டுப்பாடு!
##~## |
இந்தியாவில் செல்போன் டவர்கள் மூன்று லட்சத்து 30 ஆயிரம் உள்ளனவாம். தமிழகத்தில் 30 ஆயிரம்... சென்னையில் மட்டுமே 8,000. அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கூடுதலாகும் என்கிறது ஓர் ஆய்வு. பள்ளி, மருத்துவமனை, மக்கள் நெருக்கமான குடியிருப்புகளுக்கு இடையே டவர் அமைக்க, உலக அளவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கோபுரம் இருக்கும் பகுதிக்கு யாரும் செல்ல அனுமதிக்கக் கூடாது. டவர் கட்டட அமைப்பையும் அவர்களின் சட்ட திட்டப்படி கட்ட வேண்டும். இந்த டவர்களில் இருந்து வரும் மின்காந்தக் கதிர்வீச்சு 50 மீட்டர் தொலைவுக்கு மைனஸ் 30 டி.பி-யே இருக்க வேண்டும். ஆனால், பல நகரங்களில் மைனஸ்
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
12 டி.பி., மைனஸ் 10 டி.பி. அளவில் இருப்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இது அபாயமானது.
பள்ளி, மருத்துவமனை, குடியிருப்புக் கட்டடங்களின் மேலேகூட டவர்கள் உள்ளன. இந்தக் கதிர்வீச்சால் பற்பல நோய்கள் உருவா கின்றன. கூட்டம் கூட்டமாக எங்கும் காணப்படும் குருவிகள் இதனால் காணாமலே போவதாக எழும் சர்ச்சையை நாம் அறிவோம்.
எனவே, விதி மீறிய கட்டடங்களைஇடிப்பது போல் - நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது போல் - தயவு தாட்சண்யம் இன்றி முறையற்ற டவர்களை அரசு உடனடியாக அகற்ற வேண்டும். முறையான சட்ட திட்டங்களை உருவாக்கி, மக்களுக்கு நல்வழி காட்ட வேண்டும் அரசு. செய்யுமா?
- ம.நடராசன், சேலம்-15.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism