Published:Updated:

தலையங்கம் - வலி புரியட்டும்

தலையங்கம் - வலி புரியட்டும்

தலையங்கம் - வலி புரியட்டும்

தலையங்கம் - வலி புரியட்டும்

Published:Updated:
தலையங்கம் - வலி புரியட்டும்
தலையங்கம் - வலி புரியட்டும்

ன்னத்தில் அறைந்துவிட்டு, கான்ஸ்டபிளை விட்டு வருத்தம் தெரிவிக்கும் வேலையை மறுபடியும் செய்திருக்கிறது 'உலக போலீஸ்காரன்’ அமெரிக்கா! நமது முன்னாள் குடியரசுத் தலைவரும் இந்தியாவின் மதிப்புமிக்க அடையாளமுமான அப்துல் கலாமை அமெரிக்க விமான நிலையத்தில் வைத்து, இரண்டாம் முறையாக அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வரிசையில் நிறுத்திச் செய்த சோதனை போதாது என்று விமானத்துக்கு உள்ளேயும் ஏறி அப்துல் கலாமின் மேலாடை மற்றும் காலணிகளைக் கழற்றச் சொல்லி கெடுபிடியாக வெடிகுண்டுச் சோதனை நடத்தி இருக்கிறார்கள். விமானத்தில் இருந்த ஊழியர்கள் பதறிப்போய், கடும் எதிர்ப்புக் காட்டியதையும் அவர்கள் காதில் போட்டுக்கொள்ளவில்லை! இந்தியாவிடம் இருந்து கடுமையான கண்டனம் எழுந்த பிறகு, யாரோ ஒரு பாதுகாப்பு அதிகாரியைவிட்டு மன்னிப்புக் கடிதம் அனுப்பியதன் மூலம், தங்கள் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஆனால், நாமோ அமெரிக்காவில் இருந்து இங்கே வரும் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் ஏதோ தேவதூதர்களைப் போல தனி மரியாதை கொடுத்து பூத்தூவி வரவேற்றுக்கொண்டு இருக்கிறோம். சாலையில் போக்குவரத்தை நிறுத்தி, மக்களைக் காத்திருக்கச் செய்துவிட்டு, அமெரிக்க விருந்தினர்களை உச்ச பாதுகாப்புடன் உலா அழைத்துச் செல்கிறோம். இந்தியாவுக்குள் அமைந்து இருக்கும் அமெரிக்கத் தூதரகங்களுக்கும் பெரும் பொருட்செலவில் பாதுகாப்பைக் கொடுத்து, நம் பயத்தையும் பொறுப்பு உணர்வையும் விசுவாசத்தையும் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறோம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் சொல்லியிருப்பதைப் போல, பிரேசில் பின்பற்றும் பதிலடி வழிமுறையைத்தான் நாமும் பின்பற்ற வேண்டுமோ? இந்தியாவுக்கு வரும் அமெரிக்கர் களை மட்டும் - அவர்கள் எத்தனை பெரிய தலைவராக இருந்தாலும் - விமான நிலையங்களில் தனி வாசல் வைத்து சோதனையால் சக்கையாக வறுத்தெடுத்துவிட்டு, அதன் பிறகே நம் நாட்டுக்குள் காலடி பதிக்க வழிவிட்டால்தான் அமெரிக்கர்களுக்கு நம் வலி புரியுமோ?

நாட்டின் பாதுகாப்பும் முக்கியம், அயல்நாட்டு விருந்தினர்களிடம் காட்ட வேண்டிய பண்பாடும் முக்கியம் என்பதை வேறு எப்படித்தான் அவர்களுக்கு உணர்த்துவது?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism