Election bannerElection banner
Published:Updated:

`ஜம்மு - காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி’?

`ஜம்மு - காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி’?
`ஜம்மு - காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி’?

ஜம்மு - காஷ்மீரில் அம்மாநில அரசிற்கு வழங்கிய ஆதரவை பாஜக திரும்ப பெற்றதால், ஆளுநர் ஆட்சி அமலுக்குவரும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் அம்மாநில அரசிற்கு வழங்கிய ஆதரவை பாஜக திரும்ப பெற்றதால், ஆளுநர் ஆட்சி அமலுக்குவரும் என தகவல் வெளியாகியுள்ளது. 

Photo Credit: ANI

ஜம்மு - காஷ்மீரில் மொத்தம் 87 சட்டபேரவை தொகுதிகள் உள்ளன. இதில் மக்கள் ஜனநாயக கட்சியுடன், பாரதீய ஜனதா கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி புரிந்து வந்தனர். இந்நிலையில் இன்று மக்கள் ஜனநாயக கட்சிக்கு, தாங்கள் அளித்த ஆதரவை திரும்ப பெறுவதாக பா.ஜ.க அறிவித்தது. இதனால் அம்மாநிலத்தில் குழப்பம் ஏற்பட்டது. பா.ஜ.க ஆதரவை வாபஸ் பெற்றதால், 28 எம்.எல்.ஏக்களை மட்டுமே வைத்துள்ள மக்கள் ஜனநாயக கட்சி பெரும்பான்மையை இழந்தது. ஆட்சி அமைக்க 44 இடங்கள் தேவை என்பதால், அம்மாநில முதல்வரான மெஹபூபா முஃப்தி, தனது பதவியை ராஜினாமா செய்தார்.  இதையடுத்து காங்கிரஸ், மக்கள் ஜனநாயக கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்குமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அந்த தகவலைக் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் திட்டவட்டமாக மறுத்தார். தற்போது இந்த சூழல் குறித்து விளக்கியும், ஜம்மு - காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த கோரியும் மத்திய அரசிற்கு அம்மாநில ஆளுநர் என்.என்.வோரா பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து விரைவில் ஜம்மு - காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு