Published:Updated:

சென்னையில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை! (படங்கள்)

சென்னையில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை!  (படங்கள்)
சென்னையில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை! (படங்கள்)

சென்னை: டெசோ சார்பில் நடந்து வரும் பொது வேலை நிறுத்தத்தால் சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை!  (படங்கள்)

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தில் டெசோ சார்பில் தமிழகம் முழுவதும் பொது வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.

இந்த வேலை நிறுத்தத்திற்கு விடுதலை சிறுத்தைகள் தவிர தே.மு.தி.க., பா.ஜ.க., இடதுசாரி கட்சிகள், காங்கிரஸ் உள்பட எந்த கட்சியும் ஆதரவு தெரிவிக்கவில்லை.

##~~##

திருப்பூர், கோவை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் பந்துக்கு ஆதரவு தெரிவித்து தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள், பின்னலாடை நிறுவனங்கள், சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
 

சென்னையில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை!  (படங்கள்)

ஆனால் சென்னையில் வேலை நிறுத்தம் தோல்வி அடைந்துள்ளது. வழக்கம் போல் பேருந்துகள், ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ரயில் போக்குவரத்துக்கும் எந்த தடையும் இல்லாமல் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை!  (படங்கள்)

இதனால் அலுவலகங்களுக்கு செல்வோர் சிரமமின்றி சென்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ- மாணவிகள் ஆட்டோக்கள், பேருந்துகளில் சென்றனர்.

சென்னையில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை!  (படங்கள்)

இதேபோல் இருசக்கர வாகனங்கள், கார்களில் பொதுமக்கள் வேலைக் சென்றனர். பிரச்னைகள் எதுவும் ஏற்படாமல் இருக்க முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

படங்கள்: வேங்கடராஜ், பி.கார்த்திக்