மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 13 - தீபா திருமணம்... திடுக் திருப்பம்!

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 13 - தீபா திருமணம்... திடுக் திருப்பம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 13 - தீபா திருமணம்... திடுக் திருப்பம்!

எஸ்.ஏ.எம். பரக்கத்அலி

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 13 - தீபா திருமணம்... திடுக் திருப்பம்!

ஜெயலலிதாவோடு தொடர்பில் இருந்த காலத்தில், போயஸ் கார்டனுக்கு சகஜமாக வந்து போய்க்கொண்டிருந்தார் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபா. ஜெயலலிதாவின் நிகழ்ச்சிகளில் எல்லாம் சசிகலாவுக்கு நிகராக தீபாவும் பங்கேற்றுக் கொண்டிருந்தார். 1991 - 1996 ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தீபா செல்வாக்கோடு வலம்வந்தார். அப்போது நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் தீபாவும் கலந்துகொண்டார். ஜெயலலிதாவின் இருக்கைக்குப் பின்னால் சசிகலாவுக்கு நிகராக தீபாவும் அமர்ந்திருந்தார். இந்த அளவுக்கு தீபா நெருங்கியது, மன்னார்குடியினர் வயிற்றில் புளியைக் கரைத்தது. தீபாவை விரட்டியடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். கார்டனுக்கு வந்துபோய்க்கொண்டிருந்த தீபாவை ஏதாவது ஒரு காரணம் சொல்லி கத்தரிக்க நினைத்தார்கள். ஆரம்பத்தில் கொஞ்ச காலம் கார்டனுக்குள் அனுமதிக்கப்பட்டார். கொஞ்ச காலம் அங்கே காத்திருக்க மட்டும் அனுமதித்தார்கள். ஒரு கட்டத்தில் அவரால் வேதா இல்லத்தின் பிரமாண்ட கேட்டைத் தாண்டி உள்ளே நுழைய முடியாமல் போனது. அதன்பிறகு போயஸ் கார்டன் ரோடு பக்கமே தீபாவால் போக முடியவில்லை.

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 13 - தீபா திருமணம்... திடுக் திருப்பம்!

தீபாவின் திருமணத்தில் நடந்த திருப்பங்களைப் பார்ப்போம். ஜெயலலிதாவின் விருப்பம் மற்றும் தேதி எல்லாம் கேட்டுதான் தீபாவின் திருமணத்துக்கு நாள் குறித்தார், அவரின் தாய் விஜயலட்சுமி. அந்தத் தேதி, 2012 நவம்பர் 11. பல ஆண்டுகளுக்கு முன்பே ஜெயக்குமார் இறந்துவிட்டதால் திருமண ஏற்பாடுகளை விஜயலட்சுமியும் அவர் உறவினர்களும் சேர்ந்து செய்திருந்தார்கள். ஜெயலலிதா அண்ணனின் திருமணத்துக்குப் பிறகு, பல வருடங்கள் கழித்து அவரது ரத்த உறவில் நடக்கும் சுபநிகழ்வு, தீபாவின் திருமணம். அதனால் திருமண ஏற்பாடுகளைப் பார்த்துப் பார்த்து செய்தார்கள். திருமணம் நடந்த நேரத்திலேயே விஜயலட்சுமி உடல்நலக் குறைவோடுதான் இருந்தார். சக்கர நாற்காலியில் வந்துதான் அவரால் திருமணத்தில் கலந்துகொள்ள முடிந்தது. தீபாவுக்கும் மாதவனுக்கும் திருமணம் என முடிவு செய்து, ஜெயலலிதாவுக்கும் தெரிவிக்கப்பட்டது. திருமணத்தில் ஜெயலலிதா பங்கேற்க வேண்டும் என விஜயலட்சுமி ரொம்பவே விரும்பினார். அப்போது ஜெயலலிதா முதல்வராக இருந்ததால், அவருக்கு வசதியாகத் திருமணத் தேதியை முடிவு செய்திருந்தார்கள். ‘‘நான் நேரில் வந்து வாழ்த்துகிறேன்’’ என வாக்குறுதியும் கொடுத்திருந்தார் ஜெயலலிதா.

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 13 - தீபா திருமணம்... திடுக் திருப்பம்!

முந்தைய நாள் மாலையில் நிச்சயதார்த்தமும் அடுத்த நாள் காலையில் திருமணமும் நடந்தன. தன்னுடைய ‘ஆசை அத்தை வந்து ஆசீர்வதிப்பார்’ என மாலைகளோடு மணமகள் தீபா காத்திருந்தார். அவர்

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 13 - தீபா திருமணம்... திடுக் திருப்பம்!

மட்டும் அல்ல, திருமணத்துக்கு வந்த உறவுகள் எல்லோரின் எதிர்பார்ப்பும் அதுதான். அதுவரையில் ஜெயலலிதாவைச் சந்திக்க முடியாமல் இருந்த உறவினர்கள் பலரும், இந்தத் திருமண நிகழ்வில் அவரைப் பார்க்கலாம், பேசிக் கொள்ளலாம் என நினைத்தார்கள்.

அப்படி அவர்கள் சந்தித்துக் கொண்டால் மன்னார்குடி குடும்பத்துக்குச் சிக்கல் வந்துவிடுமே. என்னதான் நடந்தது? ‘அந்த உறவுகள் இணைந்துவிடக் கூடாது’ என்பதில் அக்கறை கொண்டவர்கள், ஜெயலலிதாவைத் தடுத்து நிறுத்திவிட்டார்கள். இத்தனைக்கும் ஜெயலலிதா திருமணத்துக்கு வருவதற்காக எல்லா ஏற்பாடுகளும் நடந்தன. பாதுகாப்பு தொடர்பாக உறவினர்களிடம் போலீஸ் அதிகாரிகள் பேசியிருந்தார்கள். போயஸ் கார்டனில் இருந்து ஜெயலலிதா புறப்படுவதற்கான கான்வாயும் ரெடியாக இருந்தது. அத்தை வருகைக்காக தீபாவின் கண்கள் மண்டப வாசலைப் பார்த்துக்கொண்டே இருந்தன. கடைசி நேரத்தில் அத்தனையும் பொய்த்துப் போயின. ‘‘முதல்வர் வரவில்லை’’ என தகவல்கள் சொல்லப்பட... சுற்றமும் நட்பும் அட்சதை தூவ, தீபாவின் திருமணம் முடிந்தது. ஜெயலலிதாவின் விருப்பத்தைக் கேட்டுத்தான் திருமணத்தை முடிவு செய்தார்கள், தேதியும் குறித்தார்கள், ஜெயலலிதா வருவதாக வாக்குறுதியும் கொடுத்தார், வருவதற்கான ஏற்பாடுகளும் நடந்தன. கடைசி நேரத்தில் என்ன நடந்திருக்கும் என்பது யூகிக்காமலே எவருக்கும் புரியும்.

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 13 - தீபா திருமணம்... திடுக் திருப்பம்!

‘‘தீபா எங்கள் வீட்டுப் பெண்’’ என்கிறார் நடராசன். தீபாவின் அத்தை ஜெயலலிதாவை திருமணத்துக்கு அழைத்து வராமல் யார் தடுத்தார்கள்? திருமணத்துக்கு ஜெயலலிதா வராமல் போனாலும், புதுமணத் தம்பதியை கார்டனுக்கு அழைத்து ஜெயலலிதா வாழ்த்துவார் என எதிர்பார்த்தார்கள். அதுகூட நடக்கவில்லை. இந்தத் திருமணம் பற்றி தீபா என்ன சொல்கிறார்? ‘‘வருவதாகத்தான் இருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதிகாரிகள் எல்லாம் வந்திருந்தார்கள். ஆனால், கடைசி நிமிடத்தில் அவர் மைண்ட் சேஞ்ச் ஆகியிருக்கிறது. அதனால் வரவில்லை. அதன்பிறகு 20 நாட்களிலேயே  உடல்நிலை மோசமாகி என் அம்மா இறந்துவிட்டார். அம்மா இறந்த தகவல்கூட அத்தைக்குப் போய்ச் சேரவில்லை’’ என்கிறார்.

திருமணத்துக்குத்தான் வரவில்லை... அண்ணி விஜயலட்சுமியின் இறப்புக்குக்கூட ஜெயலலிதா வரவில்லை. நல்ல விசேஷங்களுக்குக்கூட போகாமல் இருக்கலாம். துக்கத்துக்குக்கூட எட்டிப்பார்க்காமல் இருக்க என்ன காரணம்? நுண்ணரசியல்.

(தொடரும்...)