Published:Updated:

‘ஆம்!’ ஹமாரா ஆத்மி..! - புது முடிவு எடுக்கிறதா பஞ்சாப்?

‘ஆம்!’ ஹமாரா ஆத்மி..! - புது முடிவு எடுக்கிறதா பஞ்சாப்?
பிரீமியம் ஸ்டோரி
‘ஆம்!’ ஹமாரா ஆத்மி..! - புது முடிவு எடுக்கிறதா பஞ்சாப்?

‘ஆம்!’ ஹமாரா ஆத்மி..! - புது முடிவு எடுக்கிறதா பஞ்சாப்?

‘ஆம்!’ ஹமாரா ஆத்மி..! - புது முடிவு எடுக்கிறதா பஞ்சாப்?

‘ஆம்!’ ஹமாரா ஆத்மி..! - புது முடிவு எடுக்கிறதா பஞ்சாப்?

Published:Updated:
‘ஆம்!’ ஹமாரா ஆத்மி..! - புது முடிவு எடுக்கிறதா பஞ்சாப்?
பிரீமியம் ஸ்டோரி
‘ஆம்!’ ஹமாரா ஆத்மி..! - புது முடிவு எடுக்கிறதா பஞ்சாப்?

ஒரு சிறிய மாநிலத்தில் நடக்கும் தேர்தல், டெல்லி அரசியலையே புரட்டிப் போடுமா? இன்னும் இரண்டரை ஆண்டுகள் பதவிக்காலம் இருந்தாலும், பிரதமர் மோடியை கவலையில் ஆழ்த்தி, தூங்கவிடாமல் செய்யுமா? ‘‘ஆமாம்’’ என்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள். ‘‘ஆமாம்பா... ஆமாம்” என்கிறார்கள் அர்விந்த் கெஜ்ரிவாலின் நண்பர்கள். பிப்ரவரி 4-ம் தேதி தேர்தல் நடைபெறும் பஞ்சாப் மாநிலம், இதனாலேயே இந்தியா முழுக்க கவனம் பெற்றிருக்கிறது.

‘ஆம்!’ ஹமாரா ஆத்மி..! - புது முடிவு எடுக்கிறதா பஞ்சாப்?

117 உறுப்பினர்களைக் கொண்ட பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் யார் பரிதாபமாகத் தோற்கப் போகிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால், யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்பது தெரியாத அளவுக்கு மும்முனைப் போட்டி கடுமையாக இருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளாக பஞ்சாப்பை ஆட்சி செய்துவருகிறது அகாலி தளம் - பி.ஜே.பி கூட்டணி அரசு. அவர்கள்மீது அதிருப்தி மிக அதிகமாக இருக்கிறது. எங்கும் நிறைந்திருக்கும் ஊழல், போதை மருந்துப் புழக்கம், சட்டம் - ஒழுங்கு பிரச்னை என எல்லா விஷயங்களிலும் ஃபெயில் மார்க் வாங்கியிருக்கிறார், முதல்வர் பிரகாஷ் சிங் பாதல். பஸ் சர்வீஸ், ஹோட்டல்கள், கேபிள் டி.வி என சகல பிசினஸ்களிலும் முதல்வர் குடும்பம் கொழிப்பதை மக்கள் கவனிக்காமல் இல்லை. 10 ஆண்டு ஆட்சியில் செய்த வளர்ச்சித் திட்டங்கள் எனப் பெரிதாக எதையும் சொல்ல முடியாமல் போயிருப்பது மிகப் பெரிய பலவீனம். அப்பா முதல்வர், மகன் துணை முதல்வர், மருமகள் மத்திய அமைச்சர் என  ‘குடும்ப அரசியல்’ செய்வதும் வாக்காளர்களைக் கடுப்பேற்றி இருக்கிறது. அவர்களின் சொந்த மாவட்டமான பதிண்டாவிலேயே அவர்களுக்கு எதிர்ப்பு அதிகம் இருப்பதுதான், எதிர்பாராத திருப்பம்!  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘ஆம்!’ ஹமாரா ஆத்மி..! - புது முடிவு எடுக்கிறதா பஞ்சாப்?

இவர்களின் கூட்டணிக் கட்சியாக இங்கு இருக்கும் பி.ஜே.பி-க்கு இந்தத் தேர்தலால் நேரடி லாபம் எதுவும் இல்லை. ஆனால், நஷ்டங்கள் நிறைய. எங்கு சென்றாலும் கூட்டம் திரளும் மோடிக்கு! அவரே பஞ்சாப் தேர்தல் பிரசாரத்துக்குப் போய், காலி மைதானத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தோல்வி ஏற்பட்டால், ‘‘இது அகாலி தள அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் கொடுத்த தீர்ப்பு” என தப்பித்துக்கொள்ளலாம் என்பது பி.ஜே.பி கணக்கு.

ஆனால், பஞ்சாப் தேர்தல் முடிவுகளின் விளைவுகள் பஞ்சாப்போடு முடியப் போவது இல்லை என்பதுதான் நிஜம். காங்கிரஸ், தன் மீட்சிக்கான ஆக்சிஜன் இந்தத் தேர்தலில்தான் கிடைக்கப்போகிறது என ஆக்ரோஷமாக இறங்கியிருக்கிறது. இன்னொரு பக்கம் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால், கிட்டத்தட்ட சர்தார்ஜியாகவே மாறி தீவிரம் காட்டுகிறார்.

‘ஒரு மகாராஜா போல நடந்துகொள்கிறார்’ என விமர்சிக்கப்பட்டாலும், ‘‘கேப்டன் அம்ரிந்தர் சிங்கே எங்கள் முதல்வர் வேட்பாளர்’’ என ராகுல் காந்தி அறிவித்துவிட்டார். பாட்டியாலா மகாராஜா குடும்ப வாரிசான இந்த முன்னாள் முதல்வருக்கு, கூட்டத்தை வசீகரிக்கும் அளவுக்கு பேசத் தெரியாது. ஆனால், பஞ்சாபிகளின் பிரச்னைகளுக்காக எந்த எல்லைக்கும் சென்று குரல் கொடுப்பார் என்ற அபிமானத்தை சம்பாதித்து வைத்திருக்கிறார்.

இளம் வாக்காளர்களைக் கவர்வதற்கு, முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவை காங்கிரஸ் நம்புகிறது. சமீபத்தில்தான் பி.ஜே.பி-யிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்த இவரது அதிரடிப் பேச்சு, பஞ்சாபிகளால் பெரிதும் ரசிக்கப்படுகிறது.

‘ஆம்!’ ஹமாரா ஆத்மி..! - புது முடிவு எடுக்கிறதா பஞ்சாப்?

மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு, அடுத்தடுத்து வீழ்ச்சிகளையே சந்தித்துவருகிறது காங்கிரஸ். நீண்ட கால விசுவாசிகளான எஸ்.எம்.கிருஷ்ணா போன்ற தலைவர்கள்கூட ‘இனி இது மூழ்கும் கப்பல்’ என நினைத்து விலகிச் செல்கிறார்கள். ‘ஏதோ ஒரு புள்ளியிலிருந்து கட்சியின் மீட்சித் தொடங்க வேண்டும்’ என கருதுகிறார் ராகுல். ஆளும் கூட்டணி மீது கடும் அதிருப்தி இருக்கும் பஞ்சாப்தான் அதற்கான களம் என நினைக்கிறார் அவர். அதனால், பிரதமர் மோடியின் வெற்றிக்கும், பீகாரில் நிதிஷ்குமாரின் வெற்றிக்கும் தேர்தல் திட்டங்களை வகுத்துக்கொடுத்த பிரபல தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோரை பஞ்சாப்பில் ஓராண்டுக்கு முன்பாகவே களமிறக்கினார் ராகுல்.

ஆம் ஆத்மி கட்சிக்கு பஞ்சாப் தேர்தல் என்பது அடுத்தக் கட்டத்தை நோக்கிய நகர்வு. டெல்லி மாநிலத்தில் மிகப் பிரமாதமான வெற்றியைப் பெற்றாலும், அங்கு அவர்களால் பெரிதாக சாதிக்க முடியவில்லை. ‘‘முழு அதிகாரம் இல்லாத டெல்லியில், மத்திய அரசு எங்களை செயல்பட விடவில்லை’’ என திரும்பத் திரும்ப புகார் கூறி வருகிறார் அர்விந்த் கெஜ்ரிவால். ‘பஞ்சாப்பில் ஆட்சியைப் பிடித்தால், முழு அதிகாரத்தோடு ஒரு மாநிலத்தை ஆம் ஆத்மி கட்சி எப்படி மாற்றிக் காட்டும் என உணர்த்தலாம். அதை வைத்து தேசிய அரசியலில் அடியெடுத்து வைக்கலாம். காங்கிரஸ், பி.ஜே.பி என இரண்டு கட்சிகள் மீதும் வெறுப்பில் இருப்பவர்களை நம் பக்கம் திருப்பலாம். மோடிக்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளலாம்’ என்பது கெஜ்ரிவால் திட்டம். 

‘ஆம்!’ ஹமாரா ஆத்மி..! - புது முடிவு எடுக்கிறதா பஞ்சாப்?

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு அதிசயமாக நான்கு எம்.பி-க்கள் கிடைத்தார்கள். அவர்கள் நான்கு பேரும் பஞ்சாப்பில்தான் ஜெயித்தார்கள். அப்போது முதலே பஞ்சாப்பில் கவனம் செலுத்தி வருகிறார் கெஜ்ரிவால். தமிழகத்தில் கொங்கு மண்டலம், தென் மண்டலம் என சொல்வது போல பஞ்சாப்பில் மால்வா பெரிய பகுதி. இங்குதான் 69 தொகுதிகள் உள்ளன. இந்தப் பகுதியில் குக்கிராமங்களில்கூட ஆம் ஆத்மி பற்றித்தான் பேசுகிறார்கள். கெஜ்ரிவாலின் பேச்சு, கிராமப்புற மக்களையும்கூட வசீகரிக்கிறது. ‘டெல்லியில் நிகழ்த்தியது போன்ற அதிசயத்தை பஞ்சாப்பிலும் நாங்கள் நிகழ்த்துவோம். இது இறைவனால் எழுதப்பட்ட தீர்ப்பு’ என கெஜ்ரிவால் பேசுவதை, ஏதோ இறைவனின் சொற்பொழிவுபோல மக்கள் கேட்கிறார்கள்; நம்புகிறார்கள்.

கடந்த தேர்தலில் கணிசமாக வாக்கு வாங்கிய சுயேச்சைகள் பலரையும் கட்சியில் சேர்த்து வேட்பாளர் ஆக்கியிருக்கிறார் கெஜ்ரிவால். முன்பு தீவிரவாதம் பேசியவர்கள், இடதுசாரிகள் என்று பலரும் ஆம் ஆத்மி பக்கம் வந்திருக்கிறார்கள். கெஜ்ரிவால் வாங்கும் ஒவ்வொரு ஓட்டும் தங்கள் வெற்றி வாய்ப்பைப் பறிக்கும் என்பதை உணர்ந்து காங்கிரஸ் பதற்றம் ஆகியிருக்கிறது. அதனால் அவரை ‘அந்நியர்’ என முத்திரைக் குத்தி ஒதுக்கப் பார்க்கிறது.

‘ஆம்!’ ஹமாரா ஆத்மி..! - புது முடிவு எடுக்கிறதா பஞ்சாப்?

பஞ்சாபிகளுக்கு ரிஸ்க் எடுப்பது என்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி. அறிமுகம் இல்லாத இடங்களிலும் சென்று தொழில் தொடங்கும் தைரியம் அவர்களுக்கே சொந்தம். தடாலடியாக முடிவுகள் எடுக்கத் தயங்கவே மாட்டார்கள். அதனால்தான் ஆம் ஆத்மி கட்சி நம்பிக்கையாக இருக்கிறது.

- தி.முருகன்

கோவாவிலும் அல்வா!

‘எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது’ என கோவா தேர்தல் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. தற்போது அங்கு பி.ஜே.பி ஆட்சி நடக்கிறது. அதன் கூட்டணிக் கட்சியான மகாராஷ்ட்ரவாடி கோமன்டக் கட்சி (எம்.ஜி.பி), ஆட்சியிலிருந்து விலகி தனி அணி அமைத்திருக்கிறது. சிவசேனாவும், சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலிருந்து விலகிய சுபாஷ் வெலிங்கர் தொடங்கியிருக்கும் கோவா சுரக்‌ஷா மன்ச் கட்சியும் எம்.ஜி.பி-யோடு கூட்டணி அமைத்திருக்கின்றன.

பி.ஜே.பி-யின் வாக்கு வங்கியில்தான் இந்தக் கூட்டணி கை வைத்திருக்கிறது. இதனால், காங்கிரஸ் உற்சாகமாகி இருக்கிறது.

ஆனால், ஆம் ஆத்மி கட்சி இங்கும் களமிறங்கி, காங்கிரஸைத் தூக்கம் தொலைக்க வைத்திருக்கிறது. 40 எம்.எல்.ஏ-க்கள் கொண்ட சட்டசபையில் சின்னச் சின்னக் கட்சிகள் கூட்டணி மாறி ஆட்சியைக் கவிழ்க்கும் வரலாறு, கோவாவில் சகஜம். ‘கோவா தனிப் பிரதேசமாக நீடிப்பதா? அல்லது மகாராஷ்டிராவின் ஒரு பகுதியாக இணைவதா?’ என 1967-ம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடந்தது. அதை கோவா மக்கள் தோற்கடித்து, தங்கள் தனித்தன்மையை நிரூபித்ததன் பொன் விழா ஆண்டு இது. எனவே தேர்தல் முடிவும் தனித்தன்மையோடு இருக்கும் என நம்பலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism