Published:Updated:

தி.மு.க ஆட்சி அமைந்தால் எடப்பாடி பழனிசாமி சிறை செல்வது உறுதி - மு.க.ஸ்டாலின்

தி.மு.க ஆட்சி அமைந்தால் எடப்பாடி பழனிசாமி சிறை செல்வது உறுதி - மு.க.ஸ்டாலின்

தி.மு.க ஆட்சி அமைந்தால் எடப்பாடி பழனிசாமி சிறை செல்வது உறுதி - மு.க.ஸ்டாலின்

தி.மு.க ஆட்சி அமைந்தால் எடப்பாடி பழனிசாமி சிறை செல்வது உறுதி - மு.க.ஸ்டாலின்

தி.மு.க ஆட்சி அமைந்தால் எடப்பாடி பழனிசாமி சிறை செல்வது உறுதி - மு.க.ஸ்டாலின்

Published:Updated:
தி.மு.க ஆட்சி அமைந்தால் எடப்பாடி பழனிசாமி சிறை செல்வது உறுதி - மு.க.ஸ்டாலின்

 தி.மு.க சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் மாநில, மாவட்ட அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில்  இன்று நடைபெற்றது.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று விமானம் மூலம் திருச்சி வந்தார். அவருக்கு  தி.மு.க தெற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் தி.மு.க தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து புறப்பட்ட ஸ்டாலின், உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீனின் துணைவியார் ஹாஜியானி லத்திபா பேகத்தை அவரின் இல்லத்தில் சென்று உடல் நலம் விசாரித்தார்.

மாலை திருச்சி தி.மு.க சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் மாநில, மாவட்ட அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், ``இங்கே பேசியவர்கள் ஆணையிடுங்கள், உத்தரவிடுங்கள் எனப் பேசினார்கள். நான் கட்டளையிடவோ, ஆணையிடவோ, உத்தரவிடவோ இங்கு வரவில்லை. இங்கே இருக்கும் தீர்மானங்களை நிறைவேற்றிட வெற்றி பெற வைக்க உங்களில் ஒருவனாகப் பாடுபட வந்திருக்கிறேன்.

தி.மு.க வைப் பொறுத்தவரையில் தமிழகத்தை 65 மாவட்டங்களாகப் பிரித்து வைத்திருக்கிறோம். அந்த 65 மாவட்டங்களில் நான்கு பேர் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான். ஆட்சி பொறுப்பில் இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி, சிறுபான்மையினருக்குத் தகுந்த மரியாதையை வழங்க தி. மு.க தவறியதில்லை. மதியம் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் துணைவியார் உடல்நலம் குறித்து விசாரிக்கச் சென்றபோது, அவர் அன்பின் மிகுதியில், ``அடுத்த முறை வரும்போது முதலமை‌ச்ச‌ராகதான் வரணும்" என்றார்.

அந்தக் காலத்தில் பேராசிரியர் அண்ணாவிடம், ``நம்மிடம் எல்லா அணிகளும் இருக்கிறது. சிறுபான்மையினர் அணி மட்டும் இல்லையே?" எனக் கேட்பார்களாம். அதற்கு அண்ணா, ``முஸ்லிம் லீக்கே நம்மிடம் இருக்கும்போது, சிறுபான்மையினர் அணி நமக்கு எதற்கு' என்பாராம். ஆனால், இன்று முஸ்லிம் லீக் பல கிளைகளாக விரிந்து போய்க்கொண்டிருப்பதால் காலத்தின் கட்டாயம் கருதி கலைஞர், சிறுபான்மையினர் அணியை ஏற்படுத்திக்கொடுத்தார். இஸ்லாமியர்களையும்  உருது முஸ்லிம்களையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது எனச் சிறுபான்மையினருக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செய்திருக்கிறது தி.மு.க.

ஐந்தாவது முறையாகக் கலைஞர் ஆட்சிபுரிந்த நேரங்களில், ஜெயலலிதா உட்பட சட்டமன்ற உறுப்பினர்கள்  அனைவரும் சட்டமன்றத்தில் தொடர்ந்து தலைவரைப் பார்த்து அடிக்கடி ``இது சிறுபான்மை ஆட்சி, மைனாரிட்டி ஆட்சி" கூறுவார்கள். அதற்குத் தலைவர்,  ``ஆம், இது மைனாரிட்டிகளுக்காக நடக்கக் கூடிய ஆட்சி. எனவே, இது  மைனாரிட்டி ஆட்சி தான்" என்பார். ``நாம் மெஜாரிட்டி இல்லாமல் காங்கிரஸ், பா.ம.க போன்ற கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியில் இருந்திருந்தாலும், மைனாரிட்டி ஆட்சியாக இருந்தாலும் ஐந்து வருடங்கள் முழுமையாக ஆட்சி நடத்தியவர் நமது தலைவர் கலைஞர். ஆக, ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து மக்களுக்காகக் குரல் கொடுப்பது இந்த தி.மு.கதான்.

மத்தியில் ஆளும் பா.ஜ.கவால் மதச்சார்பின்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. நீட் பிரச்னையால் மனமுடைந்து மாணவிகள் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்டு வருகின்றனர். அதைத் தட்டிக்கேட்கக்கூடிய நிலையில் இந்த எடப்பாடி ஆட்சி இருக்கிறதா? இல்லை.  எடப்பாடி நாட்டைப் பற்றியோ மக்களைப் பற்றியோ கொஞ்சம் கூட சிந்தித்துப் பார்க்கவில்லை.

'தி.மு.க நினைத்திருந்தால் ஏன் ஸ்டாலின் நினைத்திருந்தால் இந்நேரம் ஆட்சியை முடித்திருக்கலாம். கலைஞர் இருந்திருந்தால் இவ்வளவு தூரம் விட்டிருப்பாரா? "எனப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன. 1976-ல் நெருக்கடி நேரத்தில் தீர்மானம் நிறைவேற்றியதால் கருணாநிதி ஆட்சிதான் கவிழ்ந்திருக்கிறதே ஒழிய, கருணாநிதி ஒருநா‌ளும் யாரையும் கவிழ்த்து ஆட்சியைப் பிடித்ததில்லை.

நான் காலையில் நடைப்பயிற்சி செய்வதுண்டு. அப்பொழுது என்னோடு வரும் பல ஐ. ஏ.எஸ் ஆபிசர்கள், ஏன் நீதிபதிகள் கூட `` நல்ல நல்ல சான்ஸ் வருது. முடிக்க மாட்றீங்களே"னு கேட்கிறார்கள். பொதுமக்களும் கட்சிக்காரர்களும்கூட அப்படித்தான் கேட்கிறார்கள். எம்.எல்.ஏ-க்கள் மனது மாற வேண்டும். அவர்கள் மனது மாறினால் அடுத்த நிமிடம் பதவியில் இருப்பீர்களா? சரி. மக்கள் விரும்புவது மாதிரியே முயற்சி செய்வோம். எம். எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கிக்குவோம்.

நாம் ஆட்சியில் இல்லையென்றாலும் கூட நாம்தானே அமைச்சர் மாதிரி இருக்கிறோம். பதவி இன்று வரும் நாளைப் போகும். ஆனால், அந்தப் பதவிக்கு உரிய மரியாதையை நாம் நிச்சயம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு அ.தி.மு.க அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுக்கு மாதந்தோறும் கமிஷன் வகையில் 10 கோடி ரூபாய் வரை பணம் கிடைக்கிறது. மேலும், நிறைய கல்லூரிகள் மற்றும் இடங்களை வாங்கிக் குவித்து வருகிறார்கள் என்கிற செய்திகள் வருகின்றன. அடுத்து தி.மு.க ஆட்சிக்கு வரும்போது  எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் சிறை செல்வார்கள்” என்றார் ஸ்டாலின்.