Published:Updated:

முதல்வராகிறார் சசிகலா! - 20 ஆண்டுகளுக்கு முன் சொன்னது நிஜமாகிறது!

முதல்வராகிறார் சசிகலா! - 20 ஆண்டுகளுக்கு முன் சொன்னது நிஜமாகிறது!
பிரீமியம் ஸ்டோரி
News
முதல்வராகிறார் சசிகலா! - 20 ஆண்டுகளுக்கு முன் சொன்னது நிஜமாகிறது!

முதல்வராகிறார் சசிகலா! - 20 ஆண்டுகளுக்கு முன் சொன்னது நிஜமாகிறது!

வி.என்.ஜானகி, ஜெயலலிதா ஆகியோரைத் தொடர்ந்து மூன்றாவது பெண் முதல்வராகப் பதவி ஏற்க இருக்கிறார் சசிகலா.

 ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியல் களம், மிகப் பெரிய மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. தமிழகத்தில் பலம் மிக்க அரசியல் சக்திகளாக விளங்கிவரும் இரண்டு திராவிட கட்சிகளிலும் தலைமைகள் மாறியுள்ளன. அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா, கடந்த டிசம்பர் 31-ம் தேதி பதவி ஏற்றார். அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம், கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. கூட்டத்தில் சசிகலா, கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

முதல்வராகிறார் சசிகலா! - 20 ஆண்டுகளுக்கு முன் சொன்னது நிஜமாகிறது!

தமிழகத்தின் முதல் பெண் முதல் அமைச்சராக  எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன், 1988-ம் ஆண்டு பதவி ஏற்றார். பதவி ஏற்ற 24 நாட்களில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் ஆட்சிப் பொறுப்பை இழந்தார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது பெண் முதல் அமைச்சராக  1991-ல் ஜெயலலிதா பதவியேற்றார். 1991, 2001, 2002, 2011, 2015, 2016 ஆகிய ஆறு ஆண்டுகளில் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பை அலங்கரித்த ஜெயலலிதா, திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு கடந்த டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார்.

விவேகானந்தன் - கிருஷ்ணவேணி தம்பதியினருக்குப் பிறந்த ஆறு குழந்தைகளில், சசிகலா ஐந்தாவதாகப் பிறந்தவர். இவருடைய தந்தை மன்னார்குடியில் மருந்துக்கடை நடத்தி வந்தார். பத்தாம் வகுப்போடு சசிகலாவின் படிப்பை நிறுத்திவிட்டனர். இளம் வயதில் ஓட்டப் பந்தயம் போன்ற விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமாக இருந்துள்ளார் சசிகலா. சசிகலாவை மக்கள் செய்தித்தொடர்பு துறையின் பி.ஆர்.ஓ-வாகப் பணியாற்றி வந்த ம.நடராசனுக்குத் திருமணம் செய்துவைத்தனர்.

‘வினோத் வீடியோ விஷன்’ என்ற கேசட் கடையை சசிகலா நடராசன் நடத்தி வந்தார். ஜெயலலிதாவின் கட்சி டூர் பயண வீடியோ கவரேஜை சசிகலாதான் செய்து தந்தார். அதுதொடர்பான  கேசட்டைக் கொடுக்க, போயஸ் கார்டனுக்குள் வந்தபோது ஜெயலலிதா - சசிகலா இடையே நட்பு மலர்ந்தது. ஜெயலலிதாவின் அசைக்க முடியாத நம்பிக்கையைப் பெற்று, அவரின் உடன்பிறவா சகோதரி ஆனார் சசிகலா.

ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கடியான தருணங்களில் உடன் இருந்தார். அ.தி.மு.க-வில் ஜெயலலிதாவுக்கு எதிராகக் காய்நகர்த்தல்கள் நடைபெற்றபோது, அவருக்கு ஆறுதல் சொல்லி அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தியவர் சசிகலா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
முதல்வராகிறார் சசிகலா! - 20 ஆண்டுகளுக்கு முன் சொன்னது நிஜமாகிறது!

தனக்கு எதிராக சதி செய்வதாகவும் துரோகம் செய்வதாகவும் கூறி சசிகலா நடராசன் உட்பட அவருடைய உறவினர்களை, 2011-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி கட்சியை விட்டு நீக்கினார் ஜெயலலிதா. அப்போதும் ஜெயலலிதாவுக்கு எதிராக ஒரு வார்த்தைகூட சசிகலா பேசவில்லை. இந்தப் பிரிவு வெகு நாட்கள் நீடிக்கவில்லை. அடுத்த மூன்று மாதங்களில் மீண்டும் ஜெயலலிதா - சசிகலா நட்பு துளிர்த்தது. “அக்காவுக்குத் துரோகம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் எனக்கும் வேண்டாதவர்கள்தான். அக்காவுக்கு எதிரான உறவுகளை நான் துண்டித்துவிட்டேன். அரசியலில் ஈடுபடும் எண்ணமோ, பதவிக்கு வரவேண்டும் என்ற ஆசையோ எனக்குத் துளியும் இல்லை. என் வாழ்க்கையை ஏற்கெனவே அக்காவுக்கு அர்ப்பணித்துவிட்டேன். இனியும் எனக்கென வாழாமல் அக்காவுக்காக என்னால் இயன்ற அளவுக்குப் பணிசெய்து உதவியாக இருப்பேன்’’ என்று அறிக்கை வெளியிட்டார் சசிகலா.

2014 செப்டம்பர் 27-ம் தேதி சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுடன், சசிகலாவும் 22 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார். அந்த நேரத்தில்கூட வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவுக்கு எதிராக எந்தக் கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை. 33 ஆண்டுகளாக ஜெயலலிதாவின் இணைபிரியா தோழியாக சசிகலா இருந்தார். அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக பதவி ஏற்ற பிறகுதான் சசிகலா முதன்முறையாக பொதுவெளியில் பேசினார். அதுவரை தமிழக மக்கள், அவருடைய குரலைக் கேட்டதில்லை.

கடவுள் மீதும் ஜாதகத்தின் மீதும் சசிகலா மிகுந்த நம்பிக்கை உடையவர். ஜெயலலிதாவுக்கும் ஜாதகத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்தவரும் சசிகலாதான். எந்தச் செயலைச் செய்தாலும் இருவரும் ஜோதிடர்களைக் கலந்து ஆலோசிக்காமல் செய்யமாட்டார்கள். அப்படித்தான் சசிகலா ஒருமுறை ஜோதிடம் பார்த்தபோது, அவருடைய ஆஸ்தான ஜோதிடரான வடுகப்பட்டி தர்மராஜன், “தமிழகத்தின் முதலமைச்சராக சசிகலா வருவதற்கான அம்சங்கள் உள்ளன’’ என்று கூறினார். இதை அவர் 20 ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளார். அன்று அவர் கூறிய வார்த்தை தற்போது நிஜமாகப் போகிறது. ஒரு சராசரிக் குடும்பத்துப் பெண்ணாக இருந்த சசிகலா, இப்போது, தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் அமரப்போகிறார்.

- கே.புவனேஸ்வரி