Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

? வரலாறு படைத்த மெரினா போராட்டத்துக்கு மூலகர்த்தா யார்?


! தமிழ்! தமிழ்!! தமிழ்!!!

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.


? தமிழகத்தில் ஏப்ரல் மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதே?


! சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் இப்படிச் சொல்ல... ஜூன் மாதம் வரை தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதா சட்டமன்றத்தில் நிறைவேறியுள்ளது. உண்மையில் அவர்களுக்குத் தேர்தல் நடத்தும் எண்ணம் இல்லை. பயம் இருக்கிறது. தேர்தலை எதிர்கொள்ளும் தைரியம் ஆளும்கட்சிக்கு இல்லை. இதுதான் டிசம்பரில் தேர்தல், ஏப்ரலில் தேர்தல், ஜூன் மாதம் தேர்தல் என்று தேதியை தள்ளிக்கொண்டே போகிறது!

ச.பால்துரை, தங்கம்மாள்புரம்.

? காந்தியின் மூக்குக் கண்ணாடியைக் கெளரவிக்கும் பிரதமர் நரேந்திர மோடி, அவரின் கள்ளுண்ணாமைக் கொள்கையைக் கெளரவிப்பாரா?


! காந்தியின் மிக முக்கியக் கொள்கையே மதச்சார்பின்மைதான். 1920 முதல் மரணிக்கும் வரை அதைப் பற்றித்தான் அவர் அதிகம் பேசினார்; எழுதினார்; போராடினார். அதற்காகத் தனது உயிரையே கொடுத்தார். இதுவே மறக்கடிக்கப்பட்டுவிட்டதே!

கழுகார் பதில்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஏ.ஆர்.ஹரிஹரன், ஜெயமங்கலம்.

? இதற்காகத்தான் கோயில் கோயிலாகச் சென்றீர்களா தோழியே?


! நீங்கள் யாரிடம் கேட்கிறீர்கள் ஹரிஹரன்?!

லட்சுமி காந்தன், வேலூர் (நாமக்கல்).

? மனைவியோடு விழாவுக்கு வரும் அளவுக்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கு வீரம் வந்துவிட்டதா?


! அவர் மனைவியோடுதானே வருகிறார். இதில் என்ன இருக்கிறது?

அ.பவழராஜ், நன்செய் இடையாறு.

? ஓ.பன்னீர்செல்வம் - தம்பிதுரை ஒப்பிடுங்களேன்?


! பன்னீருக்கு எதிர்பாராமலேயே மூன்று லட்டுகள் கிடைத்துவிட்டன. தம்பிதுரை எத்தனை முறை தவம் இருந்தாலும் கிடைக்கப் போவது சந்தேகம்தான். ‘பன்னீரை இறக்கிவிட்டு தன்னை முதலமைச்சர் ஆக்குவார்கள்’ என்று தம்பிதுரை நினைக்கிறார். பன்னீரை இறக்கினால் சசிகலாதான் வருவார். அதனால், தம்பிதுரை தவம் பலிக்காது.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

? ‘இதுவரை நான் சைக்கிளைத் தனியாக ஓட்டினேன். சைக்கிள் பயணத்துக்கு உதவ தற்போது கை கிடைத்துள்ளது. இனி சைக்கிள் வேகமாக ஓடும்’ என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் சொல்லி இருக்கிறாரே?

! இவரது சைக்கிளை பஞ்சர் ஆக்க அப்பா முலாயம் சிங்கே நிறைய ஆணிகளைத் தூவி இருக்கிறாரே! அதைக் கவனித்தாரா அகிலேஷ்?

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

? ‘அகிம்சை போராட்டத்தால் வெற்றி’ என்ற பெயர் வந்துவிடக்கூடாது என்பதால்தான் தடியடி நடத்தப்பட்டதா?


! இப்படி அடிக்கடி போராட்டங்கள் தொடர்ந்து நடந்துவிடக்கூடாது என்பதால்தான் தடியடி நடத்தப்பட்டது. ‘ஒரு தடவை இப்படி அலோ பண்ணீட்டீங்கன்னா அடிக்கடி டிஸ்டர்பென்ஸ் இருக்கும்’ என்று போலீஸ் அதிகாரி ஒருவரே சொல்லி இருக்கிறார்.

க.அருட்சுனன், செங்கல்பட்டு.

? சமீபகால நடவடிக்கைகளில் முதல்வரின் பாராட்டத்தக்க செயல் என்று எதைச் சொல்லலாம்?


! ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது நடந்த சம்பவங்கள் பற்றி விசாரிக்க நீதி விசாரணை ஆணையம் அமைத்ததும், தீ வைப்பு போன்ற சட்டவிரோத சம்பவங்களில் இறங்கிய காவலர்களின் நடத்தை பற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டதும் பாராட்டத்தக்க செயல்கள். உண்மையில் குற்றம் செய்தது யார் என்று முதலமைச்சரின் மனச்சாட்சிக்குத் தெரியும். அதன்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இவை.

கழுகார் பதில்கள்!

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

? தமிழக அரசியலில் காணாமல் போயிருந்த அரசியல் பண்பு, குடியரசு தின விழாவில் அரங்கேறி இருந்ததைக் கவனித்தீர்களா?


! உண்மைதான்! ஆளும்கட்சியை எதிரியாக நினைக்காமல் சட்டமன்றத்தில் ஸ்டாலின் நடந்து கொண்டார். அவரது அனைத்துப் பேச்சுக்களிலும் அது எதிரொலித்தது. அதேபோல், குடியரசு தின விழாக் கொண்டாட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அவர் கலந்து கொண்டார். ‘ஸ்டாலின் வந்தால் உரிய இருக்கை ஒதுக்கப்படுமா’ என்று முதல்நாளே தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ சேகர்பாபு போய்ப் பார்த்துவிட்டு வந்தார். ‘முன் வரிசையில் உரிய மரியாதை தருவோம்’ என்று அரசின் பொதுத்துறையும் தகவல் தந்தது. இதுபோன்ற நாகரிகத்தை இரண்டு கட்சிகளும் பரஸ்பரம் வெளிப்படுத்துவது நல்லது. பொதுவாக அரசு விழாக்களில் எதிர்க்கட்சிகள் கலந்துகொள்வது இல்லை. அதனையும் மாற்றி, அரசு விழாக்களில் மாற்றுக் கட்சியினரும் பங்கேற்கும் சூழ்நிலை உருவாக வேண்டும்!

ஏ.கணேசன், தூத்துக்குடி.

? ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?


! நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புவோம். நீதி விசாரணையோடு முதல்வரின் அறிவிப்பு முடிந்துவிடக்கூடாது!

சம்பத்குமாரி, பொன்மலை.

? ‘சின்னம்மா’ என்ற பெயர் சட்டசபையிலும் ஒலிக்க ஆரம்பித்துவிட்டதே?


! அம்மாவுக்கு எழுதிய கவிதைகள் எல்லாம் ‘சின்னம்மா’ என்று மாற்றப்படுகின்றன. இது எதிர்பார்த்ததுதானே?

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள்,
ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com  என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!