Published:Updated:

சசிகலாவின் கையை முறுக்கி பி.ஜே.பி எதையும் சாதிக்காது! - ‘ஆடிட்டர்’ குருமூர்த்தி

சசிகலாவின் கையை முறுக்கி பி.ஜே.பி எதையும் சாதிக்காது! - ‘ஆடிட்டர்’ குருமூர்த்தி
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலாவின் கையை முறுக்கி பி.ஜே.பி எதையும் சாதிக்காது! - ‘ஆடிட்டர்’ குருமூர்த்தி

தீபாவுக்கு உதவுவதைவிட வேறு வேலையே இல்லையா?ரஜினி முடிவெடுக்க வேண்டும்!ஸ்டாலின் செய்யும் மாற்றத்தை தி.மு.க விரும்புமா?

ன்னார்குடி குடும்பம் மர்மக் குழப்பத்தோடு உச்சரிக்கும் ஒரே பெயர், ‘ஆடிட்டர் குருமூர்த்தி’. ‘தமிழகத்தின் ஆட்சியைக் கைப்பற்றும் பி.ஜே.பி-யின் முயற்சிக்கு அடித்தளம் போடுகிறார்... தீபாவை திரைமறைவில் இருந்து இயக்குகிறார்...’ என்றெல்லாம் ம.நடராசன் ஒரு பக்கம் குற்றம்சாட்ட, குருமூர்த்தி இப்போது ஆசிரியர் பொறுப்பு ஏற்றிருக்கும் ‘துக்ளக்’ விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பேச்சு  இன்னொரு பக்கம் சலசலப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசியல் குறித்த டெல்லி முடிவுகளில் குருமூர்த்தி இப்போது தவிர்க்க முடியாத சக்தி. எந்தக் கேள்விக்கும் தயக்கமின்றி அவரிடமிருந்து வருகிறது பதில்...

சசிகலாவின் கையை முறுக்கி பி.ஜே.பி எதையும் சாதிக்காது! - ‘ஆடிட்டர்’ குருமூர்த்தி

‘‘அ.தி.மு.க தலைமை மாற்றத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘மிச்சம் இருக்கும் இந்த நாலரை ஆண்டுகளை எப்படி ஆள்வது... இதில் என்ன ஆதாயம் என்று தேடுகிறவர்கள்தான் அங்கு இருக்கிறார்கள். சசிகலாவைப் பொதுச் செயலாளராகக் கொண்டு வருகிறார்கள் என்றால், அதற்கு இதைத்தவிர வேறு அர்த்தம் இருக்க முடியாது. இவர்கள் எம்.ஜி.ஆரைப் போல,

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சசிகலாவின் கையை முறுக்கி பி.ஜே.பி எதையும் சாதிக்காது! - ‘ஆடிட்டர்’ குருமூர்த்தி

ஜெயலலிதாவைப் போல மக்களைச் சந்தித்து, வாக்குகள் பெற்று வெற்றி பெற வைப்பார்கள் என்று அ.தி.மு.க-விலேயே யாரும் நம்பவில்லை. ஏன், சசிகலாவே கூட அதை எல்லாம் நினைக்கவில்லை. தமிழகத்தில் ஒரு கட்சிதான், ஒரு குடும்பத்தின் சொத்தாக இருந்தது. இப்போது இன்னொரு கட்சியும் குடும்பத்தின் பட்டாவாக மாறிவிட்டது.’’

‘‘சசிகலாவின் கணவர் நடராசன் உங்களைக் கடுமையாக விமர்சித்துள்ளாரே?’’

‘‘விமர்சிக்கட்டும்! ஆனால், ‘குடும்ப அரசியல் தான் செய்வோம்’ என்று நடராசன் வெளிப்படையாகச் சொன்னதில் எனக்கு சந்தோஷம். ஏனென்றால், நடராசனே ஒத்துக் கொண்டபிறகு, சசிகலாவால் கூட அதை மாற்றிக் கூற முடியாது. ‘இந்தக் கட்சிக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை... நாங்கள் ஏதோ பிசினஸ் செஞ்சிட்டு இருக்கோம்... விவசாயம் செஞ்சுட்டு இருக்கோம்... இல்ல, ஏதோ திருட்டுத்தனம் செஞ்சிட்டு இருக்கோம்...’ என்று சொல்லாமல், நேரடியாக ‘நாங்கள் குடும்ப அரசியல்தான் செய்வோம்’ என்று நடராசன் கூறுவதன் அர்த்தமே, ‘இந்த நாலரை வருடங்கள் நாங்கள் என்ன வேண்டுமானாலும் பண்ணுவோம்... அதை நீங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்’ என்பதுதான். அதற்குப்பிறகு, இந்தக் கட்சி என்ன ஆகும் என்பதைப் பற்றி அவர்கள் யோசிக்கவே இல்லை. 1972-ல் இருந்து இன்றுவரை அ.தி.மு.க எதிர்த்து வந்தது குடும்ப அரசியலைத்தான். அ.தி.மு.க-வை மக்கள் ஆதரித்ததற்கு முக்கியமான காரணமே, கருணாநிதியின் குடும்ப அரசியல் மீதான வெறுப்புதான். இப்படிக் குடும்ப அரசியலை எதிர்த்து வளர்ந்த கட்சியே குடும்ப அரசியலுக்குள் சிக்கிக்கொள்வது, அந்தக் கட்சியின் அழிவுக்குத்தான் வழிவகுக்கும். இதை பல அ.தி.மு.க-வினரே ஒப்புக் கொள்கிறார்கள்.’’


‘‘சசிகலாவின் தலைமையை எதிர்ப்பவர்கள், மாற்றுத் தலைமை யார் என்பதைச் சொல்வது இல்லையே... உங்களால் அப்படி யாரையாவது பார்க்க முடிகிறதா?’’

‘‘நான் மாற்றுத் தீர்வைச் சொல்லாமல் சசிகலாவை எதிர்க்கவில்லையே! இந்தக் கட்சி பிழைக்க வேண்டும் என்றால், ஒரு கருத்தறியும் குழுவை உருவாக்கி, கட்சியின் தலைவர்களை அழைத்து, தமிழகம் முழுவதும் ஆய்வு நடத்தி, யாருக்கு அனைவரையும் இணைக்கக்கூடிய சக்தி இருக்கிறது என்று கண்டுபிடித்து அவர்களிடம் தலைமையைக் கொடுத்திருக்கலாம். அதில் சசிகலாவுக்கே ஆதரவு இருந்திருந்தால்கூட யாரும் கேள்வி கேட்டிருக்க முடியாதே! ஆனால், அவசர அவரசமாக ஒரு கட்சியை எடுத்து என் பாக்கெட்டுக்குள் போட்டுக்கொள்வேன் என்பதுபோல, ஒரு குடும்பம் கைப்பற்றுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? தமிழகத்தை ஆளும் கட்சி, ஒரு குடும்பத்தின் கைக்குள் போவதை எதிர்க்க வேண்டிய கடமை அனைவருக்கும் இருக்கிறது.’’

சசிகலாவின் கையை முறுக்கி பி.ஜே.பி எதையும் சாதிக்காது! - ‘ஆடிட்டர்’ குருமூர்த்தி

‘‘தீபாவுக்குப் பின்னால் ஒரு கூட்டம் திரள்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘சசிகலாவைப் பற்றியாவது எனக்குக் கொஞ்சம் தெரியும்; ஆனால், தீபாவைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. தீபா என்ற ஆள் கண்டுபிடிக்கப்பட்டதற்குக் காரணமே, சசிகலாவின் மீதான வெறுப்புதான். அந்த வெறுப்பால், தீபாவுக்குக் கொஞ்சம் ஆதரவும் கிடைக்கலாம்.’’

‘‘நீங்கள் பின்னால் இருந்து தீபாவின் வளர்ச்சிக்கு உதவுவதாகச் சொல்லப்படுகிறதே?’’

‘‘எனக்கு வேறு வேலை கிடையாதா? இரண்டு பேருமே ‘between devil and deep sea’ என்பதுதான் என் கருத்து. தீபா யாருன்னு தெரியாது; அவங்க சிந்தனை என்னன்னு தெரியாது; அவங்களோட போக்கு என்னன்னு தெரியாது. என்னை மாதிரியான ஒரு ஆள் போய், இந்த அம்மாவை எல்லாம் சப்போர்ட் பண்ணேன்னு சொன்னா... அப்புறம் தமிழ்நாட்டு அரசியல்ல யாருக்கு, எதைப் பற்றி, எந்த சிந்தனையை என்னால எடுத்துச் சொல்ல முடியும்! யாரு எதைப் பண்ணுவாங்கன்னு ஒரு விவஸ்தை கிடையாதா?’’

‘‘இன்றைக்கு இருக்கும் சூழலை வைத்துப் பார்த்தால், அ.தி.மு.க-வின் எதிர்காலம் எப்படி இருக்கும்?’’

‘‘அ.தி.மு.க-வினரே அவர்களுக்கு எதிர்காலம் இருக்கும் என்று நினைக்கவில்லை. பிறகு ஏன் நான் நினைக்கப்போகிறேன்!’’

சசிகலாவின் கையை முறுக்கி பி.ஜே.பி எதையும் சாதிக்காது! - ‘ஆடிட்டர்’ குருமூர்த்தி

‘ஜெயலலிதாவின் மரணத்தை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்தைப் பயன்படுத்தி, பி.ஜே.பி-யை இங்கு கொண்டுவர நீங்கள் முயற்சி செய்வதாகச் சொல்லப்படுகிறதே?’’

‘‘தங்களுக்கான திட்டத்தை பி.ஜே.பி-தான் தயார் செய்ய வேண்டும். அதற்கு நான் எந்த யோசனையும் கூற முடியாது. தமிழகத்தில் பி.ஜே.பி நான் சொல்வதைக் கேட்பதுபோல் நீங்கள் நினைக்கிறீர்கள். அது தவறு. தமிழக பி.ஜே.பி-யில் இருந்து யாரும் என் பக்கமே வரமாட்டார்கள். அப்படி யாராவது வந்தால் நான் அவர்களின் குறைகளைச் சுட்டிக்காட்டுவேன். எத்தனை பேர் தங்கள் மீதான குறைகளைக் கேட்கத் தயாராக இருப்பார்கள்? தமிழகத்தில் பி.ஜே.பி இன்று இருக்கும் நிலைக்கும், எதிர்காலத்தில் இருக்கப்போகும் நிலைக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.’’

‘‘நீங்கள் முயற்சி செய்யவில்லை என்றே வைத்துக்கொள்வோம். ஆனால், பி.ஜே.பி-யில் பிரதமர் உள்பட பலருக்கும் அப்படிப்பட்ட ஒரு எண்ணம் இருக்கிறது அல்லவா?”

‘‘முற்றிலும் பி.ஜே.பி அப்படி எந்த முயற்சியும் செய்யவில்லை என்று நான் சொல்லவும் முடியாது. ஆனால், சசிகலாவின் கையை முறுக்கியோ... ஓ.பி.எஸ்-ஸை அச்சுறுத்தியோ... பி.ஜே.பி எதுவும் சாதித்துக் கொள்ள முயல்வதாக எனக்குத் தெரியவில்லை. தமிழகம் ஒரு ‘சென்சிடிவ் ஸ்டேட்’. இதில் ஒரு நிலையான அரசாங்கம் இருக்க வேண்டும் என்று பி.ஜே.பி நினைக்கிறது. அவ்வளவுதான். கொஞ்சநாள் கழித்து வேண்டுமானால், அவர்கள் வேறு மாதிரி நினைக்கலாம்.’’

‘‘உங்கள் ‘துக்ளக்’ ஆசிரியர் பொறுப்பு எப்படிப் போகிறது?”

‘‘தமிழ்ப் பத்திரிகை உலகுக்கு என்னை அறிமுகப்படுத்தியதில் சோவுக்குப் பெரிய பங்கு உண்டு. ‘நீ இங்கிலீஷ்ல எழுதி ஆல் இந்தியா ஆடியன்ஸ் மத்தியில ஒரு ஹீரோவா இருக்க... இங்க உன்னப்பத்தி யாருக்குமே தெரியல... அதுனால தமிழ்ல எழுத ‘துக்ளக்’கைப் பயன்படுத்திக்கோ’ என்று என்னைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தினார். ‘எனக்குப் பிறகு இந்தப் பத்திரிகையை நடத்துவதற்கு வாய்ப்பு இருக்கும் என்றால்... அது உன்னால்தான் முடியும்’ என்று என்னிடம் சொல்லி இருந்தார். அவர் மருத்துவமனையில் இருந்தபோது போய்ப் பார்த்தேன். அப்போது அவரால் பேச முடியவில்லை. அந்த நிலையிலும் ‘துக்ளக்கை

சசிகலாவின் கையை முறுக்கி பி.ஜே.பி எதையும் சாதிக்காது! - ‘ஆடிட்டர்’ குருமூர்த்தி

விட்டுவிடாதே’ என்று எழுதிக் காண்பித்தார். அப்போது நான் ‘யெஸ்’ என்றும் சொல்லவில்லை... ‘நோ’ என்றும் சொல்லவில்லை. சோ இறந்தபிறகு துக்ளக்கில் இருந்தவர்கள் எல்லாம், ‘நீங்கள் பொறுப்பு எடுத்துக்கொள்ளவில்லை என்றால்... இதை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை’ என்று சொன்னார்கள். அது எனக்கு உறுத்தலாக இருந்தது. அதனால், பொறுப்பு எடுத்துக்கொண்டேன். சோவுக்கு என்று சில கொள்கைகள் இருந்தன. அவருடைய கொள்கைகள்தான் என்னுடையதும். சோவுக்கு இருக்கும் நளினம் என் வார்த்தைகளில் இருக்காது. ஆனால், சோவின் கருத்துக்கள்தான் என் கருத்துக்களாக இருக்கும்!”

‘‘பண மதிப்பு இழப்பு விவகாரத்தில் அவசரப்பட்டு விட்டோம் என்று இப்போது நினைக்கிறீர்களா?’’

‘‘பண மதிப்பு இழப்பு நடவடிக்கையை இரண்டு காலகட்டத்தை வைத்துப் பார்க்க வேண்டும். ஒன்று, வாஜ்பாய் காலம். அடுத்தது, மன்மோகன் சிங் காலம். வாஜ்பாய் காலத்தில் 5.5 சதவிகிதம் வளர்ச்சி ஏற்பட்டது. மன்மோகன் சிங் காலத்தில் 8.4 சதவிகித வளர்ச்சி ஏற்பட்டது. அதைத்தான் பொற்காலம் என்றார்கள். ஆனால், வாஜ்பாய் காலத்தில் ஏற்பட்ட 5.5 சதவிகித வளர்ச்சியில் 6 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. மன்மோகன் சிங் காலத்தில் 8.4 சதவிகித வளர்ச்சியில் 27 லட்சம் வேலை வாய்ப்புகள் மட்டும்தான் உருவாகின. வேலைவாய்ப்பு இல்லாத வளர்ச்சி ஏன் ஏற்பட்டது என்பதற்கான காரணத்தை நான்தான் கண்டுபிடித்துச் சொன்னேன். அந்த வளர்ச்சிக்குக் காரணம், அந்த காலகட்டத்தில் சொத்துக்களின் விலை உயர்ந்தது. ஸ்டாக் விலை, தங்கம், ரியல் எஸ்டேட் என்ற அனைத்தும் பல மடங்கு விலை அதிகமாகின. அதனால், பலருக்கு சொத்துக்களின் விலை உயர்ந்தது. அதன் மூலம் வளர்ச்சி என்ற தோற்றம் உருவானது. அது உண்மையான வளர்ச்சி இல்லை.

இந்த மாய வளர்ச்சியை ஏற்படுத்திய 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள், 1.4 லட்சம் கோடியாக 2004-ல் இருந்தது; அதுவே 2014-ல் 15.5 லட்சம் கோடியாக உயர்ந்தது; இது 87 சதவிகித உயர்வு. இதை இப்படியே விட்டோம் என்றால், 2018-ல் 36 லட்சம் கோடியாக உயர்ந்துவிடும். இதன்மூலம் என்னானது என்றால், தங்கம் வாங்கியவர்கள் எல்லாம் கறுப்புப் பணத்தில் வாங்கினார்கள்; ரியல் எஸ்டேட்டில் 30 முதல் 50 சதவிகிதம் கறுப்புப் பணப் புழக்கம் ஏற்பட்டது; இந்தப் பணம் எல்லாம் வங்கிகளுக்கு வெளியில் இருந்தது. அதை உள்ளே கொண்டுவருவதற்காகத்தான் இந்தப் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை. இதை 2022-க்குள் செய்யாமல் போனால், இதைச் செய்வதற்கு சக்தி உள்ள அரசாங்கமே அதன்பிறகு இருக்காது.’’

‘‘அதற்காக மக்களை இவ்வளவு வதைக்க வேண்டுமா?’’

சசிகலாவின் கையை முறுக்கி பி.ஜே.பி எதையும் சாதிக்காது! - ‘ஆடிட்டர்’ குருமூர்த்தி

‘‘மக்கள் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்; வேறு வழியில்லை. இல்லை என்றால், மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சியை நாடு சந்தித்து இருக்கும்., அதன்மூலம் மிகப்பெரிய அராஜகம் நடக்கும். வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு இந்த நடவடிக்கை அவசியம். இதுமாதிரி நடவடிக்கைக்கு நம் நாட்டில் எந்த அரசாங்கமும் துணியவில்லை. அதனால்தான் நமக்கு அதுபற்றித் தெரியவில்லை. 40 கோடி பேரை க்யூவில் நிறுத்த, ஒரு பிரதமருக்கு துணிவிருக்கிறது என்றால் அதை நாம் பாராட்ட வேண்டுமா, இல்லையா?’’

‘‘பிரதமர் மோடியின் சர்வாதிகாரப் போக்கு, வெளிநாட்டுப் பயணங்கள் உள்ளிட்ட பல விஷயங்களில் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுகின்றனவே?’’


‘‘அவை எல்லாம் குற்றச்சாட்டுகள்தானே? குற்றச்சாட்டுக்கும் உண்மைக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. சர்வாதிகாரி என்றால் என்ன அர்த்தம்? யாராவது எதிர்த்துப் பேசினால் அவர்கள் பதவியைப் பறிப்பது, ஒழித்துக்கட்டுவது என்றுதானே அர்த்தம். இவர் அப்படி ஒன்றும் செய்யவில்லையே! அவர் ஸ்ட்ராங்மேனாக இருப்பது இவர்களுக்கு உறுத்துகிறது. அதனால், ‘சர்வாதிகாரி’ என்கிறார்கள். அவரை ‘தைரியமானவர்’ என்று சொல்ல வேண்டும்.

உலகத்துக்கு மோடியைப் பற்றி ‘அவர் ஒரு ஹிட்லர்... காலையில் பிரேக்ஃபாஸ்டுக்கு முஸ்லிம்களைச் சாப்பிடுகிறவர்’ என்றெல்லாம் சொல்லி தவறான அபிப்ராயத்தை உருவாக்கி வைத்துள்ளனர். அதை மாற்றுவதற்குத்தான் இவ்வளவு சுற்றுப்பயணங்கள். உலக நாடுகளில் நல்ல பெயர் வாங்கவில்லை என்றால், இந்த நாட்டை ஆள முடியுமா? அவர் 24 மணி நேரமும் வேலை பார்க்கிறார். அவர் செய்வதில் பாதிகூட மற்றவர்கள் எல்லாம் சேர்ந்து செய்வதில்லை. அதனால், மோடி எல்லா இடங்களிலும் தெரிகிறார்.”

சசிகலாவின் கையை முறுக்கி பி.ஜே.பி எதையும் சாதிக்காது! - ‘ஆடிட்டர்’ குருமூர்த்தி

‘‘ரஜினி ‘துக்ளக்’ விழாவில் பேசியது பரவலாகக் கவனிக்கப்பட்டது. முன்பு சோ முயற்சித்தது போல, ரஜினிக்கு ஒரு அரசியல் களத்தை உருவாக்க நீங்கள் முயற்சிக்கிறீர்களா?’’

‘‘இல்லை. ரஜினியாகத்தான் அப்படிப் பேசினார்... அவர் தமிழ்நாட்டு அரசியல் போக்கைப் பற்றிக் கவலைப்படுகிறார் என்பது என்னுடைய அபிப்ராயம். அவர் அதுபற்றி ஆழ்ந்து யோசித்து ஒரு

சசிகலாவின் கையை முறுக்கி பி.ஜே.பி எதையும் சாதிக்காது! - ‘ஆடிட்டர்’ குருமூர்த்தி

முடிவெடுக்க வேண்டும் என்பதும் என்னுடைய விருப்பம். இதுபற்றி நான் எதுவும் புதுசாகப் பேசவில்லை. வழக்கமாக அவருடன் பேசுவதுபோல், தமிழகத்தில் மாறி உள்ள அரசியல் நிலைமையைப் பற்றியும் பேசினேன். இந்த நிலைமையைப் பற்றி ஆழ்ந்து சிந்தனை செய்து, அவர் ஏதாவது செய்ய வேண்டும் என்று என்னுடைய ஆசையையும் சொன்னேன். ஆனால், முடிவெடுக்க வேண்டியது அவர்தான். அவரை நான் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வர முடியாது.’’

‘‘தி.மு.க-வுக்கு மு.க.ஸ்டாலின் செயல் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்? இந்தத் தலைமை மாற்றம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?’


‘‘ஸ்டாலின் மீது எனக்கு எப்போதும் மிகப் பெரிய ஒரு மரியாதை உண்டு. அவர் அடாவடி அரசியல் செய்யமாட்டார் என்ற நம்பிக்கை அதற்குக் காரணம். அவர் தி.மு.க-வில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில், அந்த மாற்றத்தை தி.மு.க விரும்புமா, இல்லையா என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது. உதாரணத்துக்கு, ‘போஸ்டர்கள்லாம் போடதீங்க’னு ஸ்டாலின் சொல்லும்போது, ‘என்னய்யா நம்ம கலாசாரத்தையே இவர் மாத்துறார்’னு அந்தக் கட்சிக்குள் எதிர்ப்புகள் எழுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அந்த எதிர்ப்புகளைப் பார்த்து, ‘சரிப்பா... நீ பண்றத பண்ணு’னு ஸ்டாலின் பின்வாங்கிவிடவும் வாய்ப்பு இருக்கிறது.’’

- ஜோ.ஸ்டாலின்
படம்: சு.குமரேசன்