Published:Updated:

ஆக்டிங் தலைவர் தி.மு.க-வுக்கு... ஆக்டிங் எம்.எல்.ஏ திருவாரூருக்கு!

ஆக்டிங் தலைவர் தி.மு.க-வுக்கு... ஆக்டிங் எம்.எல்.ஏ திருவாரூருக்கு!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆக்டிங் தலைவர் தி.மு.க-வுக்கு... ஆக்டிங் எம்.எல்.ஏ திருவாரூருக்கு!

ஆக்டிங் தலைவர் தி.மு.க-வுக்கு... ஆக்டிங் எம்.எல்.ஏ திருவாரூருக்கு!

செயல் தலைவராக ஸ்டாலினை தி.மு.க.வினர் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இதனை குலதெய்வமும் ஏற்று ஆசீர்வதிக்க வேண்டும் என்பதற்காகவே, தங்கள் குடும்பத்தின் குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி கோயில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டம், திருக்குவளைக்கு கடந்த 5-ம் தேதி ஸ்டாலின் வந்தார். அவருடன் முரசொலி செல்வம், எம்.எல்.ஏ-கள் மகேஷ் பொய்யாமொழி, சேகர்பாபு ஆகியோர் வந்தனர். 

முதல் நாள் இரவே திருவாரூர் வந்து தங்கிவிட்ட ஸ்டாலின், காலையில் முதல் நிகழ்ச்சியாக திருக்குவளை அங்காள பரமேஸ்வரி கோயிலுக்கு வந்தார்.  கோயில் அருகே நிருபர்கள், புகைப்படக்காரர் களை கட்சியினர் அனுமதிக்கவில்லை. சுமார் 20 நிமிடங்கள் கோயிலுக்குள் இருந்த ஸ்டாலின், அதன்பின் அருகில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்கு வந்தார். தாத்தா முத்துவேலர், பாட்டி அஞ்சுகத்தம்மாள், மாமா முரசொலி மாறன் ஆகியோர் படங்களுக்கு மாலை அணிவித்து வணங்கினார். அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில், ‘செயல் தலைவராக, தலைவர் கலைஞர் பிறந்த திருக்குவளையில் அவர் பிறந்த வீட்டுக்கு வந்து வாழ்த்து பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். தலைவர் கலைஞர் கட்டளை ஏற்று அவர் வழி நடப்போம்’ என எழுதிக் கையொப்பமிட்டார். அங்கிருந்து புறப்பட்டு காட்டூர் சென்று, பாட்டி அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். 

ஆக்டிங் தலைவர் தி.மு.க-வுக்கு... ஆக்டிங் எம்.எல்.ஏ திருவாரூருக்கு!

இதுவரையில் தி.மு.க. செயல் தலைவராக செயல்பட்ட ஸ்டாலின், கருணாநிதியை இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுத்த திருவாரூர் தொகுதியின் ‘ஆக்டிங்’ எம்.எல்.ஏ-வாக அடுத்து மாறினார். சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமர்ந்து மக்களின் மனுக்களைப் பெற்றார். புன்னியூர் சரக விவசாயிகள் விழிப்புணர்வு சங்கத்தினர், ‘பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வேண்டும், வறட்சி பாதித்த பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வேண்டும், இறந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும்’ என்ற கோரிக்கை மனுவை அளித்தனர். 

அடுத்து பிரசித்திப் பெற்ற திருவாரூர் கமலாலயக் குளம் வறண்டு கிடப்பதைப் படியில் இறங்கிப் பார்த்த ஸ்டாலின், ‘‘இதில்கூட நீர் நிரப்பத் தவறிட்டாங்களே’’ என்றார் ஆதங்கத்தோடு. அங்கிருந்து தென்கரை பக்கம் திரும்பிய அவர் கண்ணில், வ.சோ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டது. ‘‘இதுதான் தலைவர் படித்த பள்ளி’’ என்று கூறியபடி உள்ளே சென்றார். ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறையிலும் சிறப்பு வகுப்பில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களுடன் சென்று அமர்ந்து ‘‘நல்லா படிங்க’’ என்று உற்சாகமூட்டி போட்டோ எடுத்துக்கொண்டார். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

திருவாரூரில் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துவிட்டதால், பழைய மருத்துவமனை இருந்த இடத்தில் கட்டடங்கள் பயன்படுத்தப்படாமல் பாழாகி வருவதைப் பார்வையிட்டவர், ‘‘இவற்றையெல்லாம் சீரமைத்து அரசு பயன்பாட்டுக்குக் கொண்டு வரணும்’’ என்றார்.  மடப்புரத்தில் குறுகிய ஆற்றுப்பாலம் சிதிலமடைந்திருப்பதைப் பார்வையிட்டு, அங்கிருந்தவர்களிடம் ‘‘விரைவில் புதுப்பாலம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்கிறேன்’’ என்றார். அப்போது அங்கே நடந்த நிருபர்கள் சந்திப்பில், விவசாயிகள் பிரச்னைகளைப் பேசிக்கொண்டு போனவரை இடைமறித்து, ‘‘சசிகலா தமிழக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளாரே... இதுபற்றி உங்கள் கருத்து என்ன?’’ என்றபோது, ‘‘இதற்கெல்லாம் பதில் சொல்லி என் நேரத்தையும், தரத்தையும் குறைத்துக்கொள்ள விரும்பலை’’ என்றார். 

ஆக்டிங் தலைவர் தி.மு.க-வுக்கு... ஆக்டிங் எம்.எல்.ஏ திருவாரூருக்கு!

மதியம் தி.மு.க. இளைஞர் அணி பிரமுகர் அமுதா சேகர் வீட்டிலிருந்து விரால் மீன் வறுவலுடன் சமைத்து எடுத்து வரப்பட்ட உணவை சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுத்த பின் புறப்படத் தயாராக இருந்தபோது, சசிகலாவை அ.தி.மு.க. சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்த செய்தி வெளியாகி இருந்தது. ‘‘இதுபற்றி உங்கள் கருத்து என்ன?’’ என்று கேட்டபோது, ‘‘ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி இருக்க வேண்டும் என்று தேர்ந்தெடுத்த மக்கள் எண்ணத்துக்கு விரோதமாக இன்று ஒரு சம்பவம் அரங்கேறுகிறது. ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை வாங்கி சிறைக்குச் சென்றபோதுகூட, ஓ.பன்னீர்செல்வத்தையே முதலமைச்சராக நியமித்தார்கள். அவர் நோய்வாய்ப்பட்டு நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டிய சூழ்நிலை வந்தபோதுகூட, ஓ.பன்னீர்செல்வத் திடம்தான் முதல்வர் பொறுப்பை ஒப்படைத் தார்கள். சசிகலாவுக்கு ஆட்சியிலும், கட்சியிலும் எந்தப் பொறுப்பையும் கொடுக்கவில்லை. இன்றைக்கு ஜெயலலிதா எண்ணத்துக்கும், மக்கள் எண்ணத்துக்கும், விரோதமாக ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இந்தப் பிரச்னையை ஜனநாயக முறையில் சந்திப்போம்’’ என்று கொந்தளித்தார். மதியம் கேட்ட அதே கேள்விக்கு மாலையில் சொன்ன பதிலில் மாற்றத்தையும், அவர் முகத்தில் கோபத்தையும் காண முடிந்தது. 

- மு.இராகவன்
படங்கள்: க.சதீஷ்குமார்

``வழக்குப் போடுவோம்!’’

ஆக்டிங் தலைவர் தி.மு.க-வுக்கு... ஆக்டிங் எம்.எல்.ஏ திருவாரூருக்கு!

ரியலூர் மாவட்டம் சிறுகடம்பூர் நந்தினி... ஐந்து பேரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட அவலம் பற்றி ஜூ.வி 5.2.17 இதழில் எழுதியிருந்தோம். அதன்பின் தமிழகம் முழுக்க இந்த விஷயம் கவனம் பெற்றது. திருவாரூர் விசிட்டின்போது நந்தினி வீட்டுக்கும் சென்று ஆறுதல் சொல்லி நிதியுதவி அளித்த ஸ்டாலின், ‘‘தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. நந்தினி விஷயத்தில் மெத்தனமாக இருந்த போலீஸார்மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், உயர் நீதிமன்றத்தில் தி.மு.க வழக்குப் போடும்” என்றார்.