Published:Updated:

`சட்ட ஆலோசனை வழங்குவது சமூக விரோதமென்றால் நாடு தாங்காது'- கொந்தளிக்கும் இயக்கம்

`சட்ட ஆலோசனை வழங்குவது சமூக விரோதமென்றால் நாடு தாங்காது'- கொந்தளிக்கும் இயக்கம்

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கடந்த 20 ம் தேதி டெல்லி சென்றுவிட்டு திரும்பும்போது

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கடந்த 20 ம் தேதி டெல்லி சென்றுவிட்டு திரும்பும்போது, தூத்துக்குடி கலவர வழக்கில் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இவரது கைதைக் கண்டித்துப் பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய சமம் குடிமக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் சி.ஜே.ராஜன், ``ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடி வரும் மக்களுக்கு சட்டஉதவிகள் செய்ததற்காக மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதனைப் பழிவாங்கும் எண்ணத்தில் கைது செய்துள்ளனர். இவர்மேல் இருபதுக்கும் மேற்பட்ட பொய்வழக்குகளை புனைந்துள்ளனர். பாதிக்கப்படும் மக்கள் ஜனநாயக வழியில் போராடும்போது அவர்களுக்குச் சட்டரீதியாக உதவுவது மனித உரிமை காப்பாளர்கள் மற்றும்

வழக்கறிஞர்களின் கடமை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பின் காவல்துறைக்குப் பயந்து அப்பாவிகள் கிராமத்தை விட்டு வெளியேறுகின்றனர்.

உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் சட்டவிரோத கைது நடவடிக்கைகள் தொடர்கிறது. சட்டத்தின் ஆட்சி, நேர்மை, நியாயம், மக்கள் நலன்களுக்கு எதிராகத் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இது ஜனநாயகத்துக்குப் பெரிய ஆபத்து. மனித உரிமைக் காப்பாளர்கள் மேல் தொடர்ந்து போடப்பட்டு வரும் பொய் வழக்குகளையும், கைது நடவடிக்கைகளையும் அரசு கைவிட வேண்டும். வழக்கறிஞர் வாஞ்சிநாதனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். சட்ட ஆலோசனை வழங்குவது சமூக விரோதச் செயல் என்றால் இந்த நாடு தாங்காது. இதில் தேசிய மனித உரிமை ஆணையமும், மாநில மனித உரிமை ஆணையமும் உடனடியாகத் தலையிட்டு மனித உரிமைக் காப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்'' என்றார்.