Published:Updated:

அறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்!

அறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்!
அறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்!

கொஞ்சநாளைக்கு முன்பு, அறிவாலயத்தில் உறுப்பினர் அட்டை அச்சிட்டதில் மோசடி என்று நியூஸ் வெளியானது அல்லவா?...அதைக் கசியவிட்டதே, அன்பகம் தொடர்புடைய யாரோ சிலர்தான் என்று அறிவாலயம் தரப்பினர் முணுமுணுத்தனர்.

சென்னைத் தலைமைச் செயலகத்தில் வேலை பார்க்கும் டெபுடி செகரட்டரி அந்தஸ்தில் உள்ள ஓர் அதிகாரி ரெடி பண்ணும் ஃபைல்தான்...அந்தத் துறையின் செயலாளருக்குப் போகும். அதை மட்டும்தான் அவர் பார்த்து கையெழுத்துப்போடுவார். வேறு எதையும் பார்க்கமாட்டார். இதுதான் சம்பிரதாயம். இதே பாணி தி.மு.க-விலும் நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள். டெபுடி செகரட்டரி என்பது அன்பகப் பணியாளர்கள். செகரட்டரி - கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் என்கிறார்கள். 

தி.மு.க-வின் கொங்கு மண்டல நிர்வாகிகள் சமீபத்தில் அதிரடியாக மாற்றப்பட்டனர். இந்தக் களையெடுப்பு விவகாரத்தில் நிறைய குளறுபடி நடந்துள்ளதாக கொங்கு மண்டலத்திலிருந்து புகார்கள் எழுந்துள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயித்த அ.தி.மு.க-வுக்கும் தி.மு.க-வுக்கும் வாக்கு வித்தியாசம் ஒரு சதவிகிதம்தான். குறிப்பாக, திருப்பூர்(வடக்கு)மாவட்டத்தில் அ.தி.மு.க-வுக்கு  ஒண்ணேகால் லட்சம் ஒட்டுகள் கூடுதலாக விழுந்ததாம். இதுமாதிரி, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் நடத்துவிடக் கூடாது என்பதில் படு உஷாராக இருக்கிறாராம் மு.க.ஸ்டாலின். இது தொடர்பாக அறிவாலயத்துக்கு வந்த புகார்களின் அடிப்படையில் தோல்விக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்தார். ஆனால், அந்த நடவடிக்கைக்குத் திருப்பூர்(வடக்கு) மாவட்ட கட்சி பிரமுகர்கள் காட்டும் எதிர்ப்பைப் பார்த்து மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளார். காரணம் திருப்பூர் நிர்வாகிகள், `இந்த நடவடிக்கை நேர்மையாக எடுக்கப்படவில்லை. ஆரம்பகட்டத்திலேயே முக்கியமானவர்கள் மீதான புகார் மனுக்கள் பதுக்கப்பட்டன. விசாரணை நடத்திய நிர்வாகிகளிடம் அனைத்துப் புகார் கடிதங்களும் தரப்படவில்லை. அன்பகம் தொடர்பில் உள்ள சிலருக்கு ஆதரவாகக் காய்கள் நகர்த்தப்பட்டுள்ளன' என்றெல்லாம் பொங்கித்தீர்த்தார்களாம். மேலும் அவர்கள், மு.க ஸ்டாலின் பார்வைக்கு விசாரணை ரிசல்ட் ஃபைல் அனுப்பப்பட்டதிலேயே சந்தேகங்களை கிளப்பியிருக்கிறார்கள். அதோடு, திருப்பூரைச் சேர்ந்த 42 வார்டு செயலாளர்களின் புகார் கடிதங்களோடு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கராஜ், மு.க.ஸ்டாலினைச் சந்தித்தாராம். அந்தச் சந்திப்பில், `திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் ஒரு கோஷ்டியாகவும், முன்னாள் அமைச்சர் சாமிநாதன் இன்னொரு கோஷ்டியாகவும் செயல்படுகின்றனர். 

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருப்பூர்(வடக்கு) மாவட்டத்தில் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கான பின்னணியை விசாரித்தது கட்சித்தலைமை. அதையடுத்து, மாவட்டச் செயலாளர் செல்வராஜின் முக்கிய ஆதரவாளர் டி.கே.டி. நாகராஜ்மீது பார்வையைத் திருப்பியது. இவர், திருப்பூர் மாநகரச் செயலாளர் பதவியில் இருந்தார். குறிப்பாக, இவர்மீது வந்த புகார்கள் அடிப்படையில், கட்சித் தலைமை கொடுத்த அழுத்தத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார் நாகராஜ். அதன்பிறகு, தொழிற்சங்கப் பிரிவின் முக்கியப் பொறுப்பில் நாகராஜ் திடீரென நியமிக்கப்பட்டார். இதுவே திருப்பூரில் உள்ள கட்சியினருக்கு அதிர்ச்சி. காலியான இடத்துக்கு மேங்கோ பழனிச்சாமி நியமிக்கப்பட்டார். இப்படியிருக்க தற்போது ஸ்டாலின் வெளியிட்ட களையெடுப்பு லிஸ்ட்டில், மேங்கோ பழனிச்சாமியை நீக்கிவிட்டு நாகராஜை மீண்டும் மாநகர் பொறுப்பாளராக அறிவித்துள்ளார். இது திருப்பூரில் உள்ள தி.மு.க-வினருக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஏதோ குளறுபடி நடந்திருப்பதாகவும் அதுபற்றி உடனடியாக விசாரிக்கும்படி மு.க.ஸ்டாலினிடம் புகார் தெரிவித்திருக்கிறார்கள். அப்படியா?..அவரா?..எப்படி?..என்று ஆச்சர்யத்தோடு விசாரித்தாராம் ஸ்டாலின். இதேபோலவே,  திருப்பூர் முன்னாள் நகரச் செயலாளர் வே. சுப்ரமணியம். கட்சியின் சீனியர் பிரமுகர். இவர் அளித்த புகார் மனுமீது விசாரணையே நடக்கவில்லையாம். சென்னையில் நடந்த சந்திப்பின் போது, ஒரு பெண்மணி, திருப்பூர்(வடக்கு) மாவட்டச் செயலாளர் பற்றி பாராட்டிப் பேச..மு.க.ஸ்டாலின் தலையிட்டு உட்காரச் சொல்லியிருக்கிறார். அப்போது ஏக கைதட்டலாம். அதேபோல், பல்லடம் நகர அவைத் தலைவர்மீது ஏக அதிருப்தியாம். இவரை மாற்றச் சொல்லி தீர்மானம் போட்டு அனுப்பினார்களாம். அவரை நீக்கவில்லையாம். அதற்கு பதிலாக, அவருக்கு புரமோஷன் அளித்து, பல்லடம் நகரப் பொறுப்பாளராகத் தற்போது நியமிக்கப்பட்டுள்ளாராம். இதனால், கோவையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கோவை முன்னாள் எம்.பியான ராமநாதன் மகன், பகுதி கழகச் செயலாளராக இருந்தாராம். அவரை நீக்கிவிட்டு புதியதாக ஒருவரை நியமித்துள்ளார்களாம். இதிலும் அதிருப்தி. நாமக்கல் மாவட்டத்திலும் சில பதவிகள் நியமனம் தொடர்பாகப் பூசல் கிளம்பியிருக்கிறதாம்.

இந்தக் குளறுபடிகளின் ரிஷிமூலம்தான் கொஞ்சம் சுவாரஸ்யமானது -

அறிவாலயத்துக்கும் அன்பகத்துக்கும் உச்சகட்ட பாலிடிக்ஸ் நடக்கிறது. கொஞ்சநாளைக்கு முன்பு, அறிவாலயத்தில் உறுப்பினர் அட்டை அச்சிட்டதில் மோசடி என்று நியூஸ் வெளியானது அல்லவா?...அதைக் கசியவிட்டதே, அன்பகம் தொடர்புடைய யாரோ சிலர்தான் என்று அறிவாலயம் தரப்பினர் முணுமுணுத்தனர். தற்போது வெடித்துள்ள கொங்கு மண்டல களையெடுப்பு விவகாரங்களில் குளறுபடி நடந்துள்ளதாகக் கசியவிட்டதே அறிவாயலம் தொடர்புடைய யாரோ சிலர்தான் என்கிறது அன்பகம் தரப்பு. இப்படி மாறிமாறி ஒருவர்மீது ஒருவர் குற்றம்சாட்டி வருவதைக் கேட்டு ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளாராம். 

தி.மு.க-வில் ஐ.டி. பிரிவு என்று ஒன்று இருக்கிறது. துடிப்பான இன்ஜினீயர்கள் அதில் இருக்கிறார்கள். அவர்களிடம் சொல்லி ஆன் - லைன் புகார்களைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்திருக்கலாம் என்று கட்சியின் சீனியர்கள் கருத்துச் சொல்கிறார்கள். ஆன்-லைன் புகார் பதிவு செய்திருந்தால் இதுபோன்ற குளறுபடிகளுக்கு வாய்ப்பே இருந்திருக்காது என்று கொங்கு மண்டல தி.மு.க. பிரமுகர்கள் இப்போது சொல்கிறார்கள். அறிவாலயத்தில் மனுவாக அளிக்கப்பட்டவற்றில் சில ஆரம்பத்திலேயே பதுக்கப்பட்டுள்ளன. வேறு சில, மாவட்டங்களுக்கு விசாரணைக்குப் போனவர்களிடம் அவை தரப்படவேயில்லையாம். இந்த லட்சணத்தில்தான் ஃபைனல் விசாரணை ரிப்போர்ட் மு.க.ஸ்டாலின் டேபிளுக்குப் போனதாக கொங்கு மண்டலத்துகாரர்கள் வெளிப்படையாகக் குற்றம்சாட்டுகிறார்கள். திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள இருவர்தான் அன்பகத்தில் உள்ள சிலருடன் நட்பில் இருக்கிறார்களாம். இதைவைத்து, வேண்டியவர்களுக்குப் பதவி...வேண்டாதவர்களுக்கு கல்தா...என்கிற பாணியில் பாலிடிக்ஸ் செய்கிறார்களாம். 

அடுத்தகட்டமாக, தெற்கு, வடக்கு, மத்திய மண்டலங்கள் சார்பாக விசாரணைப் படலம் நடக்கப்போகிறது. அதை, இப்போதுள்ள குளறுபடிகளை திருத்தி புகார் வராதபடி நடத்த நினைக்கிறார் மு.க.ஸ்டாலின். கொங்கு மண்டலத்து கோஷ்டி பூசலை ஒழிக்க டி.ஆர். பாலு மாதிரி கட்சியின் சீனியரை பாராளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து மண்டல அமைப்புச் செயலாளர் பதவியில் நியமிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். 

அடுத்த கட்டுரைக்கு