மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 15 - “ஜெயலலிதாவுக்கு ஒரு பெண்ணால் ஆபத்து!”

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 15 - “ஜெயலலிதாவுக்கு ஒரு பெண்ணால் ஆபத்து!”
பிரீமியம் ஸ்டோரி
News
மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 15 - “ஜெயலலிதாவுக்கு ஒரு பெண்ணால் ஆபத்து!”

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி, படம்: சு.குமரேசன்

‘ராஜீவ் காந்தி உயிருக்கு ஆபத்து இருக்கிறது. மரணம் அவரை நெருங்கிக் கொண்டிருக்கிறது!’ - ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டுக்கு ராஜீவ் காந்தி பலியாவதற்கு சரியாக ஒரு மாதம் முன்பு இப்படிச் சொன்னவர் ஜோதிடர் லட்சுமண்தாஸ் மதன்.

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 15 - “ஜெயலலிதாவுக்கு ஒரு பெண்ணால் ஆபத்து!”

‘பாபாஜி’ என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்த ஜோதிடர் லட்சுமண்தாஸ் மதன், பிரபலமான ஆங்கிலப் பத்திரிைககளில் எழுதி வந்தார். ‘ஆந்திராவில் என்.டி.ராமாராவ் இந்தத் தேதியில் ஆட்சியைப் பிடிப்பார். இத்தனை மணிக்குப் பதவி ஏற்பார்’ என்பதையெல்லாம் தேர்தலுக்கு முன்பே கணித்த கில்லாடி, லட்சுமண்தாஸ் மதன். இந்தியா முழுவதும் இருக்கும் பிரபல அரசியல்வாதிகள் எல்லாம் அவரிடம் ஆலோசனைக் கேட்டு வந்தார்கள். முன்னாள் பிரதமர் சந்திரசேகர், முன்னாள் மத்திய அமைச்சர்கள் அர்ஜுன்சிங், வாழப்பாடி ராமமூர்த்தி என அவரிடம் ஜோதிடம் பார்த்த வி.ஐ.பி-க்கள் பட்டியல், டெலிபோன் டைரக்டரியைப் போன்றது. அந்த வகையில் வலம்புரி ஜானும் லட்சுமண்தாஸ் மதனுக்குப் பழக்கம்.

ஜோதிடத்தில் அதிக நம்பிக்கைக் கொண்ட ஜெயலலிதா, தன் ஜாதகத்தின் சாதக பாதக பலன்களை அறிந்து கொள்ள விரும்பினார். அதற்கு வலம்புரி ஜானின் உதவியை நாடினார். வலம்புரி ஜானும் ஜெயலலிதாவும் எம்.ஜிஆரால் நாடாளுமன்ற ராஜ்ய சபாவுக்கு அனுப்பப்பட்டிருந்தக் காலம் அது. இன்னும் சொல்லப்போனால் ஜெயலலிதாவுக்கு உதவிகள் செய்வதற்காக எம்.ஜிஆரால் பணிக்கப்பட்டவர்தான் வலம்புரி ஜான். ஒருமுறை வலம்புரி ஜானிடம் ஜெயலலிதா பேசிக் கொண்டிருந்தபோது, ஜாதகம் பக்கம் பேச்சுப் போனது. பல ஜோதிடர்கள் பற்றி விவாதம் போய்க் கொண்டிருந்த நிலையில் தனது ஜாதகத்தை வலம்புரி ஜானிடம் தந்து, ‘‘இந்தியாவில் தலைசிறந்த ஜோதிடரிடம் பலன் கேட்டுத் தாருங்கள்’’ எனச் சொன்னார் ஜெயலலிதா. ‘பலன் சரியாக சொல்லப்படுகிறதா’ என்பதை அறிந்துகொள்வதற்காக ‘ஜெயலலிதா’ என்கிற பெயருக்குப் பதிலாக வேறு பெயரை எழுதி வலம்புரி ஜானிடம் தன் ஜாதகத்தைக் கொடுத்திருந்தார் ஜெயலலிதா.

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 15 - “ஜெயலலிதாவுக்கு ஒரு பெண்ணால் ஆபத்து!”

அந்த ஜாதகத்தை லட்சுமண்தாஸ் மதனிடம் காட்டினார் வலம்புரி ஜான். ‘ஜெயலலிதாவின் ஜாதகம் இது’ என தெரிந்துகொள்ளாமலேயே ஜாதகக் கட்டங்களை எல்லாம் அலசி ஆராய்ந்து மனதில் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார் லட்சுமண்தாஸ் மதன். ஜெயலலிதாவின் கலை உலகம், அரசியல் வாழ்க்கை ஆகியவற்றைத் துல்லியமாகச் சொன்னார். அதன்பிறகுதான் ‘‘இந்த ஜாதகக்காரர் இப்போது எம்.பி.-யாக இருக்கிறார்” என்ற தகவலை வலம்புரி ஜான் சொன்னார். அப்போது லட்சுமண்தாஸ் மதன் சொன்ன விஷயங்கள் இவை:

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 15 - “ஜெயலலிதாவுக்கு ஒரு பெண்ணால் ஆபத்து!”

எம்.பி பதவியை விடவும் பெரிய பதவிக்கு ஜெயலலிதா வருவார்.

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 15 - “ஜெயலலிதாவுக்கு ஒரு பெண்ணால் ஆபத்து!”

ஜெயலலிதாவுக்கு ஒரு பெண்ணால் ஆபத்து உண்டு.

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 15 - “ஜெயலலிதாவுக்கு ஒரு பெண்ணால் ஆபத்து!”

எந்த அளவுக்கு ஜெயலலிதா புகழோடு இருக்கிறாரோ, அந்த அளவுக்கு மக்கள் அவரைத் தூற்றுவார்கள்.

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 15 - “ஜெயலலிதாவுக்கு ஒரு பெண்ணால் ஆபத்து!”

மயக்கம் தரும் போதைப் பொருட்களைப் பொறுத்தமட்டில் ஜெயலலிதா எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.

லட்சுமண்தாஸ் மதன் சொன்னதை அப்படியே ஜெயலலிதாவின் காதில் போட்டார் வலம்புரி ஜான். இந்தச் சம்பவங்கள் எல்லாம் 1985-1986 காலகட்டத்தில் நடந்தவை. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவோடு வலம்புரி ஜானுக்கு மோதல் ஏற்பட்டது. ஜெயலலிதாவின் ஆட்சியை விமர்சித்து ‘வணக்கம்’ என்ற பெயரில் தொடர் ஒன்றை எழுதினார். அதில், இந்த விஷயங்கள் அனைத்தையும்  வலம்புரி  ஜான் குறிப்பிட்டிருக்கிறார்.

‘ஒரு பெண்ணால் ஜெயலலிதாவுக்கு ஆபத்து வரும்’ என லட்சுமண்தாஸ் மதன் கணித்ததைப் பார்த்து, ‘அந்தப் பெண் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள்தான்’ என ஜெயலலிதா நினைத்தார். ஜெயலலிதாவை அரசியலுக்குக் கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர்.தான். இது ஜானகி அம்மாளுக்குப் பிடிக்கவில்லை. அதனால் ஜானகி அம்மாளுக்கும் ஜெயலலிதாவுக்கு இடையே பனிப்போர் நடந்துகொண்டிருந்தது. எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு கட்சி இரண்டாக உடைந்த நேரத்தில்கூட அது ஜானகி அணி, ஜெயலலிதா அணிகளாகப் பிரிந்து கிடந்தது.

“ஜெயலலிதாவுக்கு ஜானகி அம்மாவால் எந்த ஆபத்தும் வரவில்லை. ஜெயலலிதாவுக்குக் கூடவே இருக்கிற ஒரு பெண்ணால் ஆபத்து உண்டு. அது எந்தப் பெண் என்பதை தமிழ்நாட்டில் ஆறாம் வகுப்பு சிறுவர்களும் அறிவார்கள்” என வலம்புரி ஜான் குறிப்பிடுகிறார். இப்படி, பல ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன வலம்புரி ஜான் இப்போது உயிருடன் இல்லை. ஜெயலலிதா மரணத்துக்கான பழியை சசிகலா தாங்கி நிற்கிறார். இதைப் பல ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன தீர்க்கதரிசி வலம்புரி ஜான்.

ஜெயலலிதாவைப் போலவே சசிகலாவுக்கும் ஜோதிடத்தில் நம்பிக்கை உண்டு. வடுகப்பட்டி தர்மராஜன்தான் அந்தக் காலகட்டத்தில் சசிகலாவுக்கு ஆஸ்தான ஜோதிடர். 20 ஆண்டுகளுக்கு முன்பு சசிகலாவின் ஜாதகத்தைக் கணித்த வடுகப்பட்டி தர்மராஜன் சொன்னது இதுதான்.

‘சசிகலா ஒரு காலத்தில் முதலமைச்சராகவும் ஆகிவிடுவார்...’

ஜோதிடம் பலிக்குமா?

(தொடரும்...)