Published:Updated:

தி.மு.க.வுக்கு தேர்தல் நிதி கொடுத்த காங்கிரஸ் எம்.பி!

தி.மு.க.வுக்கு தேர்தல் நிதி கொடுத்த காங்கிரஸ் எம்.பி!
தி.மு.க.வுக்கு தேர்தல் நிதி கொடுத்த காங்கிரஸ் எம்.பி!

தேனி: தேனி தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜெ.எம்.ஆரூண்,  தி.மு.க.வுக்கு தேர்தல் நிதியாக ஐம்பது லட்சத்தை வாரி வழங்கி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

மாநிலம் முழுவதும் முழு வீச்சில் தேர்தல் நிதி திரட்டி வருகிறது தி.மு.க. இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ஜெ.எம்.ஆரூணை சந்தித்த தேனி மாவட்ட தி.மு.க. செயலாளர் மூக்கையா,  அவரிடம் ஐம்பது லட்சம் தேர்தல் நிதியாக கேட்டாராம்.

தி.மு.க.வுக்கு தேர்தல் நிதி கொடுத்த காங்கிரஸ் எம்.பி!

கட்டாயம் அதை தருவதாக சொல்லி அவரை வழியனுப்பிய ஆரூண், கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனி மாவட்ட நகர, ஒன்றிய தி.மு.க. செயலாளர்களை அழைத்து ஆளுக்கு மூன்று லட்சம் வீதம் தேர்தல் நிதி வழங்கி ரசீதை போட்டு வாங்கி இருக்கிறார்.

இந்த நிதியையும் சேர்த்து தாங்கள் வசூலித்த மொத்த தொகையையும் தி.மு.க.  நகர ஒன்றிய செயலாளர்கள் மூக்கையாவிடம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், 'இதில் ஆரூண் கொடுத்த மூன்று லட்சம் மாவட்ட கழகத்தின் கணக்கு. எனவே, அதைக் கழித்துத்தான் உங்கள் கணக்கில் வரவு வைத்துக் கொள்வேன்' என்று சொல்லி தனது கணக்கை நேர் செய்து கொண்டாராம் மூக்கையா.

##~~##
நாடாளுமன்ற தேர்தலில் இந்தமுறை  தனக்கு பதிலாக தனது மகன் அசனை நிறுத்த பிளான் போடுகிறார் ஆரூண். மகனுக்கு சீட் கிடைத்தால் தி.மு.க.வினரின் இணை அணுசரணை தேவைப்படும். அதற்காகவே மூக்கையாவிடம் ஒட்டுமொத்த நிதியையும் கொடுக்காமல் களப்பணியில் இருக்கப் போகும் கட்சிப் பொறுப்பாளர்களை நேரடியாக அழைத்து தேர்தல் நிதியை அள்ளிக் கொடுத்திருக்கிறார்" என்கிறது தி.மு.க. வட்டாராம்.
யார், யாருடன் கூட்டணி என்பதே இன்னும் தெளிவாகாத நிலையில் தி.மு.க.வுக்கு காங்கிரஸ் எம்.பி தேர்தல் நிதி கொடுத்திருப்பது காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
- குளஸ்