தமிழகத்தில் வாழும் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கும், அமைச்சர்களுக்கும், தொண்டர்களுக்கும் வாய் என்ற ஓர் உறுப்பு இருக்கிறது. அதிலிருந்து ஒலிகள் வரும் என்பதே, கடந்த இரண்டு வாரங்களாகத்தான் தமிழக மக்களுக்குத் தெரிந்திருக்கும். குறிப்பாக, பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா (ஜெயலலிதாவுக்கே அரசியல் கற்றுக்கொடுத்த, அவரை வழிநடத்தியதாகத் தற்போது பலராலும் சொல்லப்படும்) இருவருடைய குரல்களையும் இப்போதுதான் முதல்முறையாக தமிழ்ச் சமூகம் கேட்கிறது. அந்த அளவுக்கு அம்மாவின் ஆட்சிக்காலங்களில் ஊடகங்களில் தலைகாட்டாமல், எதற்கும் பதில் கொடுக்காமல், மக்கள் பிரச்னைகளுக்கு எல்லாம் மௌனம் காத்துவந்தவர்கள் இந்தத் திடீர் உத்தமர்கள், இப்போது தங்களுடைய பதவிக்கும், அதிகாரத்துக்கும், ஆட்சிக்கும் பங்கம் வந்துவிட்டது என்றதும், ஆஃப் பண்ணிவிட்ட மைக்குகளிடம்கூட உரிமைப்போர் நடத்துகிறார்கள்.

இந்தப் போராட்டத்தில் ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். இரண்டு தரப்புகளும் தங்களின் நியாயத்தைச் சொல்ல ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்குவதில்லை. எல்லாவிதமான ஊடகங்களையும் அழைத்துப் பேசுகிறார்கள், நடந்தபடியே பேசுகிறார்கள், உட்கார்ந்து பேசுகிறார்கள், காரில் போய்க்கொண்டே பேசுகிறார்கள், பேசிக்கொண்டே இருக்கிறார்கள், `எதிரிகளைப் பந்தாடுவோம்' எனக் கோபத்தில் தெறிக்கிறார்கள். `எங்களுடைய பலத்தை நிரூபிப்போம்' எனச் சவால்விடுகிறார்கள். ஆனால், தவறியும் ஒருவர் இன்னொருவருடைய ஊழல்களைப் பற்றி பேசுவதில்லை. யாரும் எதிர்தரப்பின் அராஜகங்களைக் குறிப்பிடுவதில்லை. கடந்த ஆட்சிக்காலங்களில் செய்த தில்லுமுல்லுகளைப் பற்றி மூச்சுகூட விடவில்லை. அவ்வளவு எச்சரிக்கையாக நடக்கிறது இந்த PARTNERS IN CRIME'-களின் யுத்த காண்டம்.

போகட்டும்...

`அம்மா வாழ்ந்த வீட்டை ஆலயமாக்குவேன்’ என்கிறார் ஒருவர். சட்டமன்றத்தில் அம்மாவின் படத்தைத் திறக்க வேண்டாமா எனத் துடியாய்த் துடிக்கிறார் இன்னொருவர். ஆனால், இருவருமே அப்போலோ பற்றி கேட்டால் அடுத்த கேள்விக்குத் தாவுகிறார்கள். `அப்போலோ நாள்களில் உண்மையில் ஜெயலலிதாவுக்கு நடந்தது என்ன, அவரின் மரணத்தில் இன்னமும் மர்மம் நீடிப்பது ஏன், அவருடைய புகைப்படம் ஒன்றுகூட வெளியாகாதது ஏன், எம்பாமிங் செய்தது எதனால், கால்கள் எங்கே... என்பன குறித்தெல்லாம் இரண்டு சொற்கள்கூட உதிர்க்க யாரும் தயாராக இல்லை. எதிர்தரப்பை மிரட்ட அப்போலோ விஷயத்தைக்கூட இப்போது ஆயுதமாகத்தான் வைத்திருக்கிறார் அம்மாவின் உண்மை விசுவாசி பன்னீர். ஆனால், இரண்டு தரப்புகளும் மூர்க்கமாகச் சண்டையிடுகின்றன. அதை நாம் நம்ப வேண்டும். ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட WWE மல்யுத்தச் சண்டைக்காட்சிகள்போல நடக்கின்றன தமிழ்நாட்டு அரசியல் சண்டைகள்.

`நாங்க சென்னை ஜெயிலையும் பார்த்தாச்சு; பெங்களூரு ஜெயிலையும் பார்த்தாச்சு. உருட்டல் மிரட்டல் எல்லாம் எங்ககிட்ட வேணாம்' என்று தன் ஊழல் வரலாற்றைப் பெருமையாகப் பேசுகிற ஒருவர் முதலமைச்சராகக் கிடைக்க, நாம் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

எத்தகைய மோசமான ஆட்சியாளர்களின் கைகளுக்குள் தமிழ்நாடு செல்லப்போகிறது என்ற உணர்வேயின்றி, நடப்பதை எல்லாம் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் சுவாரஸ்யத்தோடு பார்க்கிறார்கள் தமிழக மக்கள். ஸ்கோர் அப்டேட் போல எம்.எல்.ஏ எண்ணிக்கைகளை விரல்விட்டு எண்ணி மகிழ்கிறார்கள். வாட்ஸ்அப்பில் வரும் செய்திகளை உண்மை என நம்பி, வீடியோக்களைப் பகிர்கிறார்கள்.

`நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம்’ என கோல்டன் பே கூண்டுகளுக்குள் இருந்து வாயில் ரத்தம் வழிய எம்.எல்.ஏ-க்கள் அலறுகிறார்கள். அந்தச் சொகுசு விடுதிக் கைதிகளுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு மிக எளிமையானது. அடுத்த நான்கரை ஆண்டுகளுக்கு ஆட்சி கலைந்துவிடாமல் பதவியில் இருக்க வேண்டும். தேர்தலுக்கு எனக் கொட்டிய சில கோடி ரூபாய்களை மீட்க வேண்டும். எப்படியும் மீண்டும் ஆட்சிக்கு வருவதோ, பதவிக்குத் திரும்புவதோ சந்தேகம்தான் என்ற சூழலில் வேண்டிய மட்டும் சுருட்டுவதற்கான வாய்ப்புகள் வேண்டும். இதை எந்த அணி வழங்குகிறதோ அந்த அணிக்கே ஆதரவு. இதில் பன்னீர்செல்வம் பக்கம் சென்றால், ஓரளவுக்குச் சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்ளலாம். சசி அணியாக இருந்தால், ஜெயலலிதா காலத்தில் செய்த எல்லா குனிதல்களையும் பணிதல்களையும் செய்யவேண்டியதாக இருக்கும்.

இன்னொரு பக்கம் பன்னீர்செல்வத்தின் பக்கமாக அணி திரள்கிறவர்கள் யார் எனக் கவனித்தால், அவர்களுக்குள் ஓர் ஒற்றுமை இருப்பது புலப்படும். அவர்களில் பலரும் தங்களுடைய மோசமான நடவடிக்கைகளால்
அ.தி.மு.க-வில் இருந்து ஓரங்கட்டப்பட்டவர்கள், ஜெயலலிதாவால் பதவி பறிக்கப்பட்டவர்கள், ஊழல்வாதிகள், மத்திய அரசு ஆதரவு இல்லாமல் பணம் செய்ய இயலாது என்பதை உணர்ந்த
எம்.பி-க்கள். இப்படி பன்னீர்செல்வம் வீட்டுக்குப் படையெடுக்கும் இவர்களுடைய நோக்கம் என்னவாக இருக்கிறது? பன்னீர் ஆட்சியைப் பிடிக்கும்பட்சத்தில் ஆறு மாதங்களுக்கு முன்னர் கட்சியிலிருந்தும் ஆட்சியிலிருந்தும் ஒதுக்கப்பட்ட இவர்கள், மீண்டும் கட்சியில் ஆட்சியில் முக்கியப் பதவிகளைப் பிடிக்க முடியும். பழையபடி ஜபர்தஸ்த்தாக வலம்வரலாம். குறிப்பாக, நிறையச் சம்பாதிக்கலாம். ஆனால், சசிகலா ஆதரவாளர்களைவிட பன்னீர் ஆதரவாளர்களுக்கு ஒரு விஷயம் சிறப்பாக அமைந்திருக்கிறது. மக்களுடைய பார்வையில் ஒரே நாளில் பல ஊழல் மன்னர்களும் சந்தர்ப்பவாதிகளும் புனிதர்களாக மாறிவிட்டார்கள் பன்னீர் உள்பட.

உயிரை வணங்கும் மனிதர்களைத்தான் உலகம் பார்த்திருக்கிறது. ஆனால், டயரை வணங்கிய முதல் மனிதர் ஓ.பன்னீர்செல்வம்தான். விசுவாசம் என்றால் பன்னீர்தான் என்று, அவர் வணங்கிய ஜெயலலிதா காரின் டயர்கள்கூட சாட்சி சொல்லும். அந்த அளவுக்கு ஜெயலலிதா விசுவாசியாகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்டவர் பன்னீர்செல்வம் அல்லது மரியாதை வைத்திருந்ததாகக் காட்டிக்கொண்டவர். பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டபோது துக்கம் தாளாமல், அவர் வளர்த்த தாடியை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா? முதலமைச்சராகப் பதவி ஏற்கும்போது கதறி அழுது கண்ணீர்விட்டதை அவருடைய வெள்ளை கர்ச்சீப்கூட மறந்திருக்காது. அந்த அளவுக்கு அன்பு வைத்திருக்கும் ஒருவர் இறந்துபோனால் நாம் என்ன செய்வோம், எப்படி அழுவோம், எந்த அளவுக்கு விரக்தி மனநிலைக்குச் செல்வோம், எப்படி எல்லாம் நடந்துகொள்வோம்? குறைந்தபட்சம் கொந்தளித்துக் கொதித்து, அப்போலோ நாள்களில் நடந்த உண்மைகளையாவது சொல்லியிருப்போம்தானே?

ஆனால், அவசரமாக ஓடிப்போய் முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டார் பன்னீர்செல்வம். அதற்கு முந்தைய பதவியேற்பு வைபவங்களில் கண்ணீர்விட்டுக் கதறி அழுதவர், அன்றைக்கு ஏனோ கூலாக இருந்தார். அவர் மட்டும் அல்ல அவரோடு பதவி ஏற்றுக்கொண்ட சக சக்கர வணங்கிகளும்தான். அப்போது எல்லாம் பன்னீரை அம்மாவின் ஆன்மா உந்திச் செலுத்தவில்லை. அப்போது அவரை உந்திச் செலுத்தியது எல்லாம் பதவி மட்டும்தான். அதற்குப் பிறகு அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக சசிகலாவைப் பதவியில் அமர்த்தியபோதாவது பன்னீர் பேசியிருக்க வேண்டும். அப்போதும் அம்மாவின் ஆன்மா அவரைத் தொந்தரவு செய்யவில்லை. அதனால், சும்மாவே இருந்துவிட்டார். ஆனால், பாருங்கள்... துடிக்கவேண்டிய நேரத்தில் எல்லாம் துடித்திடாத பன்னீரின் நரை மீசை இப்போது துடிக்கிறது. அவரை முதலமைச்சர் பதவியில் இருந்து விலகச் சொன்னதும்தான் சொரணை வருகிறது. இதற்கெல்லாம் மேல் `காஞ்சனா-2’-வில் வருவதுபோல அம்மாவின் ஆன்மாவும் முதன்முதலாக சீனுக்கு வருகிறது.

இன்னொரு பக்கம்... 25 ஆண்டுகளாக சிங்கத்தோடு வாழ்ந்த குட்டிச்சிங்கம் சசிகலா. அவருக்கு 2012-ம் ஆண்டு தலைமைக் கழகத்திலிருந்து வெளியான அறிவிப்பு எண் 43/2012 நினைவில் இருக்காது. அதில் ஜெயலலிதா... `சசிகலாவின் விளக்கத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அவருடைய குடும்பத்தினர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை’ என்பதைத் தெளிவுபட விளக்கியுள்ளார். ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட நாள் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக சசிகலாவின் குடும்பத்தினர் திரும்பிவந்தனர். கட்சிக்காரர்களுக்கு உத்தரவுகளைக் கொடுக்க ஆரம்பித்தனர். அவற்றை யாருமே விரும்பவில்லை என்றாலும், `போய்த்தொலையுது’ எனத் தாங்கிக்கொண்டனர். சசிகலா, தான் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக ஆளுநரைப் பார்க்கப் போகும்போதுகூட, கட்சியில் எத்தனையோ விசுவாசிகளும் சீனியர் சிங்கங்களும் இருக்க, தினகரனைத்தான் அழைத்துக்கொண்டு போனார். எந்தக் குடும்பத்தை ஜெயலலிதா விரட்டியடிக்க நினைத்தாரோ, அந்தக் குடும்பத்துக்கே கட்சியையும் ஆட்சியையும் தாரைவார்க்க துடித்தார். அவருக்கும் உதவிக்கு வந்தது யார் தெரியுமா... அம்மாவின் ஆன்மாதான். ஜெயலலிதா சமாதிக்குச் சென்றபோது ஓர் ஈர்ப்புச் சக்தி அவருடைய கால்களைப் பிடித்து இழுத்ததாகச் சொல்கிறார். அது எதற்காகப் பதறிப்போய் இழுத்ததோ? அந்த ஆன்மாவுக்குத்தான் தெரியும்.

`சசிகலாவுக்கா வாக்களித்தீர்கள்... அம்மாவுக்குத்தானே?' என்ற கேள்வியை பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்து முன்வைக்கிறது. போஸ்டர்கள்கூட அடித்து போயஸ் தோட்டம் பக்கத்திலேயே ஒட்டியிருக்கிறார்கள். சிந்தித்துப்பார்த்தால் பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஆவதற்காகவும் இங்கே யாருமே வாக்களிக்கவில்லை. இன்று சசிகலாவோடு இருக்கும் சிங்கநிகர் எம்.எல்.ஏ-க்களுக்காகவும் எவரும் வாக்களிக்கவில்லை. வாக்களித்தது ஜெயலலிதா என்கிற ஒற்றை மனுஷிக்காகவும், அ.தி.மு.க என்ற கட்சிக்காகவும்தான் (நிறையவே மிச்சமிருக்கிற தி.மு.க வெறுப்பும்தான்). அப்படியிருக்க நேற்று வரை பன்னீர்-சசிகலா இரண்டு பேர் மீதும், தமிழக மக்களுக்கு எந்தவித அபிமானமோ அன்போ மரியாதையோ கிஞ்சித்தும் இருந்தது கிடையாது.

20 நாட்களுக்கு முன்பு வரை `மிக்ஸர் பன்னீர்' ஆக இருந்த ஒருவர், ஓர் இரவில் மெரினாவில் 40 நிமிடங்களுக்குத் தியானம் செய்து, ஜெயலலிதா ஆன்மாவின் ஆசிகளைப் பெற்று புனிதர் பன்னீராக மாறுகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை பின்னணியில் இருந்து ஆட்சியை ஆட்டிவைத்துக்கொண்டிருந்த சசிகலா, சின்னம்மாவாக புதிய நடை, உடை மேக்கப்புடன் வலம்வருகிறார். ஆனால், ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் முடிந்த நிலையிலும் மக்களுக்கான எந்தவித புதிய திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. ஏற்கெனவே நிலுவையில் இருக்கும் பல கோப்புகளும் அப்படியே முடங்கிக்கிடக்கின்றன. இதைப் பற்றி யாருக்குமே கவலையில்லை.

தமிழர்களின் தேசிய உணவாகவே மிக்ஸரை அறிவித்துவிடலாம். அப்போலோவில் முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது, `அய்யோ என்னாச்சு... என்னாச்சு?' என மக்கள் கதறினர். அப்போது அ.தி.மு.க-வினர் மிக்ஸர் தின்றுகொண்டிருந்தனர். அதே சமயத்தில் கொத்துக்கொத்தாக விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு செத்தபோது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அரசும் அமைச்சர்களும் மிக்ஸர் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். ஜெயலலிதாவின் அப்போலோ அனுமதிக்குப் பிறகு தமிழகம் முழுக்கக் குழப்பமான நிலை நீடித்தபோது, எதிர்க்கட்சிகள் மிக்ஸர் தின்றுகொண்டிருந்தன. ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப் போராட்டத்தின்போதும், அதற்குப் பிறகான காவல் துறை அடக்குமுறைகளின்போதும், மீனவர் வாழ்விடங்கள் எரிக்கப்பட்டபோதும், இன்று புனிதராக மாறிவிட்ட பன்னீர்செல்வம் மிக்ஸர் பாக்கெட்டைக் கையில் எடுத்துக்கொண்டார். இப்போது தமிழகத்தின் அரசு இயந்திரம் முடங்கிக்கிடக்கிறது. ஏராளமான முடிவுகள் எடுக்கப்படாமல் காத்திருக்கின்றன. அடுத்து ஆட்சியில் அமரப்போவது யார் என்பதில் குழப்பம் இருக்கிறது. இந்த நேரத்தில் மிக்ஸர் பாக்கெட்டை வைத்திருப்பவர் மேதகு ஆளுநர்.

மிக்ஸர் தின்பவர் என்பவரைக் கையாலாகாத மனிதனுக்கான அடையாளமாகவே நாம் முன்வைக்கிறோம். ஆனால், மிக்ஸர் தின்பவர்கள் காரியத்தோடுதான் காத்திருக்கிறார்கள்.உண்மையில் மிக்ஸர் பாக்கெட்கள் இருப்பது நம் கையில்தான்!