Published:Updated:

டீசல் விலை உயர்வை கண்டித்து ஏப்ரல் 1 முதல் லாரிகள் காலவரையற்ற ஸ்டிரைக்!

மும்பை: டீசல் விலை உயர்வை கண்டித்து வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் லாரிகள் காலவரையற்ற  வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

மும்பையில் நடைபெற்ற மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், வேலை நிறுத்தத்தில் நாடு முழுவதும் உள்ள லாரிகள் பங்கேற்கும் என்றும் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

டீசல் விலை உயர்வு மட்டுமல்லாது, காப்பீட்டு கட்டணம்,, சுங்க வரி உயர்வு உள்ளிட்டவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடைபெற உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.