Published:Updated:

துரோகி பன்னீர்... புளி வியாபாரி விசுவநாதன்... மூணு சீட்டு முனுசாமி!

துரோகி பன்னீர்... புளி வியாபாரி விசுவநாதன்... மூணு சீட்டு முனுசாமி!
பிரீமியம் ஸ்டோரி
News
துரோகி பன்னீர்... புளி வியாபாரி விசுவநாதன்... மூணு சீட்டு முனுசாமி!

போட்டுத் தாக்கும் ‘நமது எம்.ஜி.ஆர்’ மருதுஅழகுராஜ்

.தி.மு.க-வில் சசிகலா அணி மீது சரமாரியான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வரும் நிலையில், அந்தக் கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழான, ‘நமது எம்.ஜி.ஆர்’ ஆசிரியர் மருது அழகுராஜுவைச் சந்தித்தோம். ‘சித்ரகுப்தன்’ என்ற பெயரில் அவர் எழுதிய கவிதைகளுக்கு ஜெயலலிதா முதல் ரசிகை. இப்போது, சசிகலா மீதான தாக்குதல் களுக்கும் அழகு தமிழில் பதில் சொல்லி வருகிறார். அவருடைய பேட்டியில் இருந்து...

துரோகி பன்னீர்... புளி வியாபாரி விசுவநாதன்... மூணு சீட்டு முனுசாமி!

‘‘ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியின் பொதுச்செயலாளர் ஆன சசிகலா, இப்போது சிறையில் உள்ளார். உங்கள் கட்சி இந்த சோதனையைத் தாங்குமா?”

‘‘காலம் வழங்கிய அருட்கொடையான அம்மாவை, காலமே எங்களிடமிருந்து பிரித்துவிட்டது. அம்மா எங்களுக்கு வழங்கிய சின்னம்மாவை, சதிகாரர்கள் பிரித்து சிறை வைத்துவிட்டார்கள். எங்களுக்குப் பக்கத்தில், எங்களின் பார்வையில் அவர்கள் இல்லை என்றாலும், எங்களை அவர்கள்தான் இயக்கிக்கொண்டு இருக்கிறார்கள். வெற்றியைத் தக்கவைக்க மட்டுமல்ல, வெற்றியைத் தொடர்ந்து அடையவும் அம்மாவும் சின்னம்மாவும் எங்களுக்கு எப்போதும் துணையாக இருப்பார்கள்.

துரோகிகள் ஏதேதோ தகவல்களைப் பரப்புகிறார்கள்... ‘ஒரு தீர்ப்பு அம்மா அவர்களை குற்றவாளி என்று அறிவித்து இருக்கிறது. இதனால், அரசு அலுவலகங்களில்கூட அம்மா படம் இடம்பெற முடியாதாம். மெரினாவில் அம்மா துயில் கொண்டுள்ள இடத்தில், அரசு சார்பில் நினைவிடம் கட்ட முடியாதாம். ‘பாரத ரத்னா’ விருது கிடைக்காதாம். பாடப்புத்தகங்களில் அம்மாவின் வரலாற்றை ஒரு வரிகூட வைக்க முடியாதாம்.

அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறுத் திட்டம் என்பது போன்று அரசின் திட்டங்களுக்கு அம்மா பெயர் சூட்ட முடியாதாம். அம்மாவின் வழி நடக்கும் அரசு என்று பேசினால்கூட, அது ஆவணங்களில் பதிவாகாதாம். அது, அரசியல் சாசனப்படி குற்றமாகுமாம். ஓடி ஓடி உழைத்து, 130-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக ஜொலித்து, அவர் உழைத்துச் சேர்த்த சொத்துகள் எல்லாம் ‘ஊழல் சொத்துகள்’ என்று பறிமுதல் செய்யப்படுமாம்.’

இதையெல்லாம் அரசியல் பகையாளிகள் அடுக்குகின்றபோது உள்ளம் வெடிப்பது போல் இருக்கிறது. இப்படி அம்மாவின் பெயரை அரசியல் சரித்திரத்தில் இருந்தே அப்புறப்படுத்தும் முயற்சி, எதிரிகளுக்குக் கைகூடி இருக்கிறது. அதனால், அவர்கள் களிப்பு கொள்கிறார்கள். இனிப்புகள் வழங்கித் துள்ளுகிறார்கள். ஆனால், பச்சைத் துரோகி பன்னீரும் அவர் பின்னால் நிற்கும் ஒரு சிறு கூட்டமும் பட்டாசு வெடிக்கிறது.

இந்தத் தீர்ப்புக்காக மகிழ்கிறார்கள் என்றால், மூன்று முறை முதலமைச்சராக அமர வைத்த புரட்சித் தலைவி அம்மாவுக்கு, இதைவிட துரோகம் வேறெதுவும் உண்டா? ‘என் தாய் பரிசுத்தமானவர். இந்தத் தீர்ப்பு தவறானது. இதற்காக மறுசீராய்வு மனு போடுவேன். அம்மா காலமான பிறகு, அம்மா கல்லறை மீது தெளிக்கப்பட்டுள்ள களங்கத்தைத் துடைப்பேன்’ என்று ஒரு வரியேனும் ஊமை பன்னீர் பேசினாரா? ‘மோடியா... லேடியா?’ என்று அன்று அம்மா விடுத்த சவாலுக்கு, ஓ.பி.எஸ் என்கிற உளவாளியை வைத்து பி.ஜே.பி-யும் காங்கிரஸூம், பகைவெறி தி.மு.க-வும் கச்சைக் கட்டிக்கொண்டு செய்திருக்கும் காரியம்தான் அரசியல் வரலாற்றில் இருக்கிறது. இந்தப் பாவகாரியத்துக்கு பன்னீருக்கு ஏழேழு ஜென்மத்துக்கும் மன்னிப்பே கிடையாது.

அ.தி.மு.க என்ற ஆலமரத்தில் எத்தனையோ பேர் வெந்நீர் ஊற்றிவிட்டார்கள். ஆனால், ஆலமரத்துக்கு ஆபத்தே வராது. அந்த ஆட்கள் காணாமல் போய்விட்டார்கள்!”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
துரோகி பன்னீர்... புளி வியாபாரி விசுவநாதன்... மூணு சீட்டு முனுசாமி!

‘‘அ.தி.மு.க-வின் இந்தப் பிளவுக்குக் காரணம் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம்தான் என்று ஓ.பி.எஸ் தரப்பு குற்றம்சாட்டுகிறார்களே?”

‘‘எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி மற்றும் செல்லூர் ராஜு ஆகியோரைத்தான் அம்மா அவர்கள் கடைசியாகக் கலந்துகொண்ட செயற்குழுக் கூட்டத்தில் மனம்திறந்து பாராட்டினார்கள். காரணம், சட்டமன்றத் தேர்தலில் அவர்கள் உழைப்பும், கழகத்துக்கு அவர்கள் ஈட்டித்தந்த வெற்றியும்தான். அதே செயற்குழுவில் பழைய புளியம்பழ வியாபாரியும் இப்போது அதானியின் பங்காளியுமான விசுவாசமில்லாத விசுவநாதனையும் மூணு சீட்டு முனுசாமியையும் துரோகிகள் என்று அம்மா அடையாளம் காட்டினார்கள். கழகத் தொண்டர்களுக்கு ஒரு கப் டீ கூட வாங்கித்தராமல் தன் மொத்த குடும்பத்துக்கும் அதிகாரப் பதவிகளை வாங்கிக் குவித்துவிட்டு துரோகங்களை மட்டுமே ஈடாகத் தந்த பி.ஹெச்.பாண்டியன், இவர்களோடு சேர்ந்துள்ளார். விசுவாசமிக்கோர் ஒரு பக்கமும், அம்மாவினால் ‘துரோகிகள்’ என்று அடையாளம் காட்டப்பட்டவர்கள் மறுபுறமும் அணி வகுத்துள்ளார்கள். துரோகம் இழைத்தவர்களை வழிநடத்தி, கழகத்தைப் பிளப்பதற்குப் பெரும் முயற்சி எடுத்திட்ட ஓ.பி.எஸ்-ஸை அம்மா 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே ஒதுக்கி வைத்தார்கள். அவர் மகன்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த கட்சிப் பதவிகளைப் பறித்தார்கள். அதுபோலவே நத்தம் விசுவநாதன் மருமகன் பதவியைப் பறித்தார்கள். இருவரையும் கட்சிப் பணிகளைச் செய்யவிடாமல் ஒதுக்கி வைத்தார்கள். சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் தேர்வின்போது, அவர்களை அறைக்கு வெளியே உட்கார வைத்தார்கள்.

‘நடுக்கத்தில் நிதி, ஷாக்கில் மின்சாரம், ஹவுஸ் அரஸ்ட்’ என்று அப்போது பத்திரிகைகள் தலைப்புச் செய்தி வெளியிட்டன. பி.ஹெச்.பாண்டியன் குடும்பத்தையும் ஒட்டுமொத்தமாகப் பதவிகளைப் பிடுங்கிவிட்டு, அப்போதே அம்மா ஓரங்கட்டி வைத்தார். இவை அனைத்தையும் மனதில் வைத்துக் கொண்டுதான், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு இந்தக் கூட்டம் பட்டாசு வெடித்து மகிழ்ந்தது. தன்னை 20 ஆண்டுகளுக்கும் மேலாக தன் வீட்டுக்குள் அனுமதிக்காமல் அம்மா ஒதுக்கிவைத்தார்கள் என்பதற்காக, தன் அத்தை என்பதைக்கூட மறந்து, ‘ஊழல் குற்றவாளி’ என்று தீர்ப்பு தந்ததை வரவேற்று தனது வன்மத்தையும் தீபா வெளியிட்டு இருக்கிறார். அதிகாரப்பசி... மூன்று முறை இடைக்கால முதலமைச்சராக இருந்து பெருக்கிக் கொண்ட வசதி வாய்ப்புகள்... எதிராளியோடு திரைமறைவுத் தொடர்புகள்... இவற்றால் கழகத்தை அழிப்பதற்கு கோடாரிக் காம்பாக மாறி இருக்கிறார் பன்னீர்செல்வம். புரூட்டஸையும், எட்டப்பனையும் ஒரே நேரத்தில் வென்றிருக்கிறார் பன்னீர்.”

துரோகி பன்னீர்... புளி வியாபாரி விசுவநாதன்... மூணு சீட்டு முனுசாமி!

’’அம்மாவின் ஆன்மாதான் தன்னை வழிநடத்தியதாக பன்னீர் சொல்லி இருக்கிறாரே?”

’’சட்டமன்றத்தில் துரைமுருகன், ‘பன்னீரே முதல்வராகத் தொடரட்டும். நாங்கள் ஆதரிக்கிறோம்’ என்று சொன்னபோது, உப்புபோட்டுச் சாப்பிடுகிறவராக பன்னீர் இருந்திருந்தால், ‘அறுதிப் பெரும்பான்மை இருக்கும் எங்களுக்கு உன் ஆதரவு தேவை இல்லை’ என்று சொல்லி இருப்பார். ஆனால் தி.மு.க.-வின் வெளிப்படையான பேராசைத் தூண்டுதலுக்கு மறுப்பு சொல்லாமல் சிரித்தார். இதையெல்லாம் தெரிந்து கொண்டுதான் சின்னம்மா, ‘துரோகத் தூண்டிலில் பன்னீர் சிக்கி விட்டார். கழகத்தை உடைக்க ஒவ்வாதவர்களோடு ஒப்பந்தம் போட்டுள்ளார்’ என்று வருத்தப்பட்டு மாற்று முயற்சியில் ஈடுபட்டார்கள். திரைமறைவுத் துரோகங்கள் அம்பலத்துக்கு வந்ததாலும், முதலமைச்சர் பதவி பறிபோகப்
போகிறது என்ற பதற்றத்தில் இருந்தாலும், தன் துரோகத்துக்குத் துணை தேட ஆரம்பித்தார்.

‘சின்னம்மாவே கழகத்தையும் ஆட்சியையும் வழிநடத்தப் பொறுப்பு ஏற்க வேண்டும்’ என்று எல்லாரும் கேட்டபோது, பன்னீர், சின்னம்மா கால் பிடித்துக் கேட்டார். இதை உலகம் உண்மை என்று நம்ப வேண்டும் என்பதற்காக, சின்னம்மாவை வாழ்த்தி வரவேற்று நாளிதழ்களில் ஒரு பக்க விளம்பரம் கொடுத்தார். அவரது தம்பியும் அதில் சேர்ந்துக்கொண்டார். தனது சதித் திட்டத்தை நிறைவேற்ற அம்மா நினைவிடத்துக்குச் சென்று, தியானம் என்ற பெயரில் 40 நிமிடங்கள் உட்கார்ந்துகொண்டு, அனைத்து ஊடகங்களும் வந்த பிறகு ‘அம்மா ஆன்மா தன்னை வழி நடத்துகிறது’ என்று அள்ளி விட்டார். அவரை அம்மாவின் ஆன்மா பிடிக்கவில்லை; காவி ஆவிதான் அவரைப் பிடித்திருந்தது. நெஞ்சுறுதி கொண்ட கழக எம்.எல்.ஏ-க்கள் துரோகத்துக்குத் துணை போகவில்லை. கழகம் காப்பாற்றப்பட்டது. சின்னம்மா வழிகாட்டுதலில் முதல்வர் தேர்வு செய்யப்பட்டு, அம்மா ஆட்சி தொடர்கிறது.”

“பணிவுக்கும் விசுவாசத்துக்கும் அடையாளமாக உங்களால் காட்டப்பட்டவர்தானே பன்னீர்?”

‘‘ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த மதுரைக்குப் போன பன்னீரை பொதுமக்கள் விரட்டி அடித்தனர். சிரித்துக்கொண்டே சென்னை திரும்பியவர், மெரினாவிலும், மதுரையிலும் தன் சுயரூபத்தைக் காட்டினார். இதுதான் அவரது பாணி. முன்னாள் சபாநாயகர் காளிமுத்து சொல்வார், ‘அவசியமற்ற பணிவு துரோகத்தின் அடையாளம்’ என்பார். இதற்கு சமகால உதாரணம், பன்னீர்செல்வத்தைவிட வேறொருவர் இல்லை! இதைப் போகப்போக காலம் புரிந்துகொள்ளும்.’’

- எஸ்.முத்துகிருஷ்ணன்
படம்: பா.காளிமுத்து