Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

சீர்காழி சாமா, ஸ்ரீரங்கம்.

? மனதில் உள்ளதை எல்லாம் பன்னீர் கொட்டிவிட்டாரா?


! பத்து சதவிகிதம்தான் சொல்லி இருப்பதாகச் சொல்கிறார். இன்னும் 90 சதவிகிதம் சொல்லவில்லையாம். இது எல்லாமே ஒருவிதமான மிரட்டல்தான். அவரால் முழுமையாகச் சொல்ல முடியாது. சொன்னால் அவரே மாட்டிக்கொள்வார். பிப்ரவரி 7-ம் தேதிக்கு முன் நடந்த பல விஷயங்களுக்கு பன்னீரும் பங்குதாரர்தானே?!

திடீர் ஞானோதயம் பிறக்கலாம். அதற்காகப் பழைய கறைகள் துடைக்கப் பட்டுவிடாது.

கழுகார் பதில்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எஸ்.கிருஷ்ணராஜ், அதிகாரட்டி.

? முதல்வர் பன்னீர்செல்வத்தின் மெரினா பேட்டி?


! திட்டமிடப்பட்ட, ஆனால் திடீரென நிகழ்த்தப்பட்ட உரை அது. நிறுத்தி நிதானமாக கோவையாக எதை மட்டும் சொல்லலாம், எந்தெந்த வார்த்தைகளைப் பயன்படுத்தலாம் என்ற வரையறை செய்துகொண்டு பன்னீர் இதனை நிகழ்த்தினார். ‘திடீரென அம்மா நினைவிடம் போனேன், தியானம் செய்தேன், எழுந்து பார்த்தால் பத்திரிகையாளர்கள் இருந்தார்கள், அவர்கள் கேட்டதால் சில விஷயங்களைச் சொல்லியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது’ என்பது எல்லாம் சும்மா. தியானம் செய்த 40 நிமிடங்கள் என்பது பத்திரிகையாளர்களை வரவைக்க அவர் கொடுத்த அவகாசம். அவ்வளவுதான். எதுவாக இருந்தாலும் பன்னீரின் தைரியம் பாராட்டத்தக்கது.

எம்.சி. சுப்பையா, திருத்தங்கல்.

? தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவி என்பது பொம்மை விளையாட்டு போல் ஆகிப் போச்சே?

! சிற்பி கையில் சிக்கினால் கல்லும் சிலையாகும். சுயநலமிகள் கையில் சிக்கினால் முதல்வர் பதவியும் பொம்மை ஆகும்.

பொன்விழி, அன்னூர்.

? சீமைக் கருவேல மரங்களை அழிக்கும் வழக்கில் வென்று, தன் சொந்த ஊரில் கருவேல மரங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்ட வைகோ பற்றி?

கழுகார் பதில்கள்!

! வாழ்த்துகள்!

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14.

? ‘சுயநலத்துடன் செயல்படுபவர்கள் நாட்டை ஆளக்கூடாது’ என்கிறாரே ஜெ.தீபா?


! தீபா தனது தியாக வாழ்க்கையைக் கொஞ்சம் சொன்னால் நல்லது.

கழுகார் பதில்கள்!

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

? ‘என்னை முதல்வராக்க முதன்முதலாக வற்புறுத்தியது பன்னீர்செல்வம்தான்’ என்று சொல்லி இருக்கிறாரே சசிகலா?

! ‘நான் பொதுச்செயலாளர் ஆனதும் முதன்முதலாக காலில் விழுந்ததும் பன்னீர்செல்வம்தான்’ என்று நாகரிகம் கருதி சசிகலா சொல்லாமல் விட்டுவிட்டார்.

கழுகார் பதில்கள்!

பன்னாள் தாயுமானவ மாணவன், கருப்பம்புலம்.

? ‘ஓ.பன்னீர்செல்வத்துக்குப் பின்னால் தி.மு.க இருக்கிறது’ என்று நாஞ்சில் சம்பத் சொல்லி இருக்கிறார். சில வாரங்களுக்கு முன்னால் சசிகலாவை விமர்சித்து நாஞ்சில் சம்பத் பேசினாரே. அப்போது அவருக்குப் பின்னால் தி.மு.க இருந்ததா?


! நாஞ்சில் சம்பத் சொன்ன வார்த்தைகளை பன்னீர் சொல்லவில்லை. அவர் என்ன சொன்னார் என்பதை அவராலேயே இப்போது சொல்ல முடியாது. சம்பத் பின்னால் யார் இருந்தார்? சம்பத் ஏன் அமைதி ஆனார்? அவர்தான் விளக்க வேண்டும்.

கழுகார் பதில்கள்!

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

? ‘ஆர்.கே.நகர் தொகுதியில் சசிகலா போட்டியிட்டால் அவரை எதிர்த்துப் போட்டியிடத் தயார்’ என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சொல்லி இருக்கிறாரே?

! சசிகலாவைத் தேர்தலில் நிற்கவைத்து வெளியில் வெயிலில் அலையவைத்துத் தொல்லை தரக்கூடாது என்று நீதிமன்றமே நினைத்துவிட்டது. அதனால், இளங்கோவனுக்கும் அந்தக் கஷ்டம் இல்லை.

கழுகார் பதில்கள்!

பிரதீபா ஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை.

? லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பியெல் நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பு எதைக் காட்டுகிறது?


! சசிகலா தரப்பும், அப்போலோ மருத்துவமனையும் எவ்வளவு பயந்து போயுள்ளார்கள் என்பதைக் காட்டியது. தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் எத்தகைய போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டு வருகிறது என்பதை பியெல் அறியமாட்டார். வாங்கிய பணத்துக்குச் சிகிச்சை மட்டுமல்ல, பேட்டியும் கொடுத்துவிட்டார். அவரின் பேட்டி, சில வாரங்களாக அமுங்கி இருந்த விஷயத்தைப் பற்றி மீண்டும் வெளிப்படையாகப் பேசும் வாய்ப்பை ஏற்படுத்திவிட்டது என்பதைத் தவிர சசிகலா தரப்புக்கு எந்தப் பயனும் இல்லை.

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

? ஜெயலலிதாவின் மரணம் பற்றிய மர்மங்களை அமைச்சர்களோ, எம்.எல்.ஏ-க்களோ பேசத் தயங்குகிறார்களே?


! ஆளும்கட்சியாக இருக்கும்போது எப்படி பேசுவார்கள்? அ.தி.மு.க எதிர்க்கட்சியானால் ஒவ்வொருவராகப் பேச ஆரம்பிப்பார்கள். 91 - 96 காலகட்டத்தில் நடந்த பல்வேறு முறைகேடுகளை, ஜெயலலிதா ஆட்சியைவிட்டு இறங்கியதும்தான் அவரது கட்சிப் பிரமுகர்களே பேச ஆரம்பித்தார்கள். அப்படித்தான் நடக்கும்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள்,
ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com  என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!