Published:Updated:

வீரபாண்டி ஆறுமுகத்தை கொன்றது ஸ்டாலின்தான்: ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு !

வீரபாண்டி ஆறுமுகத்தை கொன்றது ஸ்டாலின்தான்:  ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு !
வீரபாண்டி ஆறுமுகத்தை கொன்றது ஸ்டாலின்தான்: ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு !
வீரபாண்டி ஆறுமுகத்தை கொன்றது ஸ்டாலின்தான்:  ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு !

சேலம்: இருக்கிற பரபரப்பில் என்ன செய்வதென்று பாமக நிறுவனர் ராமதாஸ், ரூம் போட்டு யோசித்திருப்பாரோ என்னவோ...? திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை கொன்றது திமுக தலைவர் கருணாநிதியின்  மகன் மு.க. ஸ்டாலின்தான் எனக் கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

 இன்று நடக்கவிருக்கும் பாமக பொதுக்கூட்டத்துக்காக சேலம் வந்த ராமதாஸ் காலையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘‘இறுதி நேரத்தில் வீரபாண்டியாரை திமுக சிறுமைப்படுத்திவிட்டது. அந்த மன உளைச்சலே அவர் இறக்கவும் காரணமாகிவிட்டது. முக்கியமாக வீரபாண்டியாரைக் கொன்றதே கருணாநிதியின் இளைய மகன் ஸ்டாலின் தான்.

##~~##
கட்சியின் முக்கிய தலைவராக இருந்து கட்சிக்காக உழைத்த வீரபாண்டியாருக்கு, பொருளாளர் உள்ளிட்ட முக்கிய பதவியை தந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு நேர்மாறாக அவருக்கு எதிராக கோஷ்டிகளை வளர்த்து அவருக்கு நெருக்கடிகளைத்தான் திமுக தலைமை அளித்தது. வீரபாண்டியாரின் திடீர் மரணத்துக்கு இதுவே முக்கிய காரணமாகி விட்டது’’என்று பேசி பரபரப்பை கிளப்பிய ராமதாஸ் ஜெயலலிதாவையும் விட்டுவைக்கவில்லை.
தஞ்சையில் நடந்த பாராட்டு விழா குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்தார். ‘‘காவிரி விஷயத்தில் நடுவர் மன்ற தீர்ப்பு அரசிதழில் ஏறியதற்காக ஜெயலலிதாவுக்கு பாராட்டுவிழா நடத்தியது தேவையில்லாதது. அரசிதழில் ஏறியது என்பது மத்திய அரசு எடுத்த முடிவு. அதற்காக ஜெயலலிதா ஒரு துரும்பைக் கூட கிள்ளி போடவில்லை. பாராட்டுவிழாவுக்கு செய்த செலவுக்கு பதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அந்த தொகையை இழப்பீடாக வழங்கியிருக்கலாம்’’ எனக் கூறினார்.