Published:Updated:

மதிமுக பிரமுகர் கொலை குற்றவாளிகள் மீது குண்டு வீச்சு

மதிமுக பிரமுகர் கொலை குற்றவாளிகள் மீது குண்டு வீச்சு
மதிமுக பிரமுகர் கொலை குற்றவாளிகள் மீது குண்டு வீச்சு

விருதுநகர்: மதிமுக பிரமுகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் மீது வெடிகுண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகரை சேர்ந்தவர் ம.தி.மு.க. பிரமுகர் எஸ்.ஆர்.நாகராஜன். இவரது மனைவி தங்கபாண்டியம்மாள், அ.தி.மு.க. கவுன்சிலர். கடந்த 2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் சாமி கும்பிட சென்ற இந்த இருவரும் தேசபந்து மைதானத்தில் வைத்து கூலிப்படையினரால் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக ஐயப்பன், சிவா, ரவி, சபரி உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
 

மதிமுக பிரமுகர் கொலை குற்றவாளிகள் மீது குண்டு வீச்சு

சமீபத்தில் இவர்கள் ஐந்து பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். அதன்பிறகு மதியழகன் என்ற ஒப்பந்தக்காரரை பணக் கேட்டு மிரட்டிய வழக்கில் ஐயப்பன், சிவா, ரவி மற்றும் சிபி சக்கரவர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கில் இருந்தும் ஜாமீனில் வெளியே வந்த இவர்கள் விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகின்றனர்.

##~~##
இந்த நிலையில், வழக்கம் போல் கையெழுத்து போடுவதற்காக இன்று காலையில் ஒரு நானோ காரில் நான்கு பேரும் மதுரை சாலையில் வந்தனர். அப்போது எதிரே ஆந்திரா பதிவு எண்ணை கொண்ட ஒரு சுமோ காரில் வந்த சில மர்ம நபர்கள் கார் மீது நாட்டு வெடி குண்டுகளை வீசினார்கள். காரின் முன்புற கண்ணாடிப் பகுதி சேதமடைந்தது. உள்ளே இருந்த யாருக்கும் காயமில்லை. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
எம்.கார்த்தி

படம்: ஆர்.எம்.முத்துராஜ்