Published:Updated:

எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு..! உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு..! உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு..! உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக 17 எம்.எல்.ஏ-க்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு..! உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்த டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். சபாநாயகரின் உத்தரவுக்கு எதிராக 18 எம்.எல்.ஏ-க்களும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவேறு தீர்ப்பு அளித்தனர். அதனையடுத்து, அந்த வழக்கு, மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், தங்க.தமிழ்ச்செல்வனைத் தவிர்த்த மற்ற 17 எம்.எல்.ஏ-க்களும், இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அந்த வழக்கு இன்று நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ்.கே.கவுல் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வருகிறது.