Published:Updated:

களையிழந்த சிதம்பரம் நாட்டியாஞ்சலி! (படங்கள்)

களையிழந்த சிதம்பரம் நாட்டியாஞ்சலி! (படங்கள்)
களையிழந்த சிதம்பரம் நாட்டியாஞ்சலி! (படங்கள்)

சிதம்பரம்: இந்தாண்டு சிதம்பரம் நடராஜப் பெருமாள் கோயிலில் நடந்த நாட்டியாஞ்சலி களையிழந்து காணப்பட்டது.

களையிழந்த சிதம்பரம் நாட்டியாஞ்சலி! (படங்கள்)

ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி அன்று சிதம்பரம் நடராஜப் பெருமாள் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கடந்த 10ஆம் தேதி தொடங்கிய இவ்விழா இன்றுடன் முடிவடைகிறது.

பொதுவாக நாட்டியாஞ்சலியில் பிரபலமான நடனக் கலைஞர்கள், திரைப்பட கலைஞர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு நடிகை சொர்ணமால்யா போன்ற ஒருசிலரைத் தவிர, வேறு யாரையும் காணவில்லை. வந்தது எல்லாம் நாட்டியப் பள்ளிகள் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த நடனக் கலைஞர்கள்தான்.

களையிழந்த சிதம்பரம் நாட்டியாஞ்சலி! (படங்கள்)

ஏன் வி.ஐ.பி.கள் அதிக அளவில் வரவில்லை என்பது ஒரு பக்கம் இருக்க, இதில் நாட்டியப் பள்ளிகள் கலந்துகொள்வதிலும் ஓர் உள்நோக்கம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

களையிழந்த சிதம்பரம் நாட்டியாஞ்சலி! (படங்கள்)

நாட்டியாஞ்சலியில் கலந்துகொண்ட பள்ளி என்பதை ஒரு தகுதியாக காட்டி மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதும் நடக்கிறதாம். செல்வாக்கை வைத்து நாட்டியாஞ்சலியில் இடம் பிடிப்பவர்களும் உண்டு.

இந்த காரணங்களால் இந்த வருட நாட்டியாஞ்சலியில் அறிமுகமில்லாதவர்களையும், அந்நிய மாநிலத்தவர்களையுமே பார்க்க முடிந்தது.

செய்தி& படங்கள்: கரு.முத்து